Posts

Current Affairs

குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மைக்கா சுரங்கம்

மிக உயர் நிலை குழந்தை உரிமைகள் அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஆனது, ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்களைகுழந்தைத் தொழிலாளர் அற்றவை' என்று அறிவித்துள்ளது.  இந்தச் சுரங்கங்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பு குழந்தைத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டனர். கைலாஷ் சத்யார்த்தியின் லாப நோக்கற்ற அமைப்பான பச்பன் பச்சாவ் அந்தோலன் (BBA) அமைப்பானது, 'குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மைக்கா சுரங்கங்கள்' என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்தது.

Current Affairs

போதைப் பொருள் குற்றங்கள் குறித்த புகாருக்கான கட்டணமில்லாத தொலை பேசி உதவி எண் -1933

முதன்முறையாக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட தேசிய கட்டணமில்லாத தொலை பேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. MANAS (தேசிய போதைப் பொருள் உதவிச் சேவைக்கான) கட்டணமில்லா உதவி எண் 1933 மற்றும் மின்னஞ்சல் முகவரி info.ncbmanas@gov.in ஆகும்.போதைப் பொருள் குற்றங்கள் மற்றும் அது தொடர்பானப் பிரச்சினைகள் குறித்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க இது உதவும். MANAS என்பது 'மதக் பதார்த் நிசேத் அசுச்னா கேந்திரா அல்லது போதைப் பொருள் தடுப்பு தகவலளிப்பு மையம் என்பதைக் குறிக்கிறது.

Current Affairs

16வது நிதி ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு

+ அரவிந்த் பனகாரியா தலைமையிலான பதினாறாவது நிதிக் குழுவானது, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினை அமைத்துள்ளது. இது அந்த ஆணையத்தின் பணி நோக்கத்தினை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். + தற்போது தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (NCAER) தலைமை இயக்குனராகப் பணியாற்றி வரும் பூனம் குப்தா என்பவர் இந்தக் குழுவின்தலைவராகச் செயலாற்றுவார். இதன் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு: o T.K. ஸ்ரீவஸ்தவா o நீலகாந்த் மிஸ்ரா பிரஞ்சுல் பண்டாரி இராகுல் பஜோரியா

Current Affairs

Child Labour Free Mica mine

❖ The Apex child rights body NCPCR had declared mica mines in Jharkhand 'child labour-free'. ❖ More than 20,000 kids were previously engaged as child labour in these mines. ❖ Kailash Satyarthi's non-profit organisation Bachpan Bachao Andolan (BBA), has spearheaded the 'Child Labour-Free Mica' campaign.

Current Affairs

Toll free helpline for Narcotics Crimes - 1933

❖ The first-ever national toll-free telephonic helpline along with an email was launched.  ❖ The toll-free number for MANAS (National Narcotics helpline) is 1933 and the Email is info.ncbmanas@gov.in. ❖ It will allow any person to tip off the NCB about narcotics crimes and related issues. ❖ MANAS stands for 'Madak Padarth Nisedh Asuchna Kendra' or narcotics prohibition intelligence centre.

Current Affairs

Five-Member Advisory Council of 16th FC

❖ The Sixteenth Finance Commission, led by Arvind Panagariya, set up a fivemember Advisory Council. ❖ It is aimed at expanding the scope of the Commission's work .❖ This panel will be chaired by Poonam Gupta, who currently serves as the Director General of the National Council of Applied Economic Research (NCAER).   ❖ The other members are: o D.K. Srivastava o Neelkanth Mishra o Pranjul Bhandari o Rahul Bajoria.

Current Affairs

சூரியனைச் சுற்றும் பூமியின் சுழற்சி

சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் இயக்கமானது தற்போது சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் வகையில் இல்லை. சூரியன் ஆனது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய பொருள் மற்றும் வியாழன் கோளின் நிறையில் 1,048 மடங்கு நிறை கொண்டது. இருப்பினும், இந்த வானியல் அமைப்பின் மீது பூமி செலுத்தும் ஈர்ப்பு விசையானது கிரகத்தின் மீது அதே அளவு அல்லது சிறிய அளவில் செலுத்தப்படுகிறது. கெப்ளரின் மூன்றாவது விதியானது ஒன்றையொன்று சுற்றி வரும் இரண்டு வானியல் அமைப்புகளின் நிறைகளுக்கு இடையிலான ஒரு தொடர்பினையும், சுற்றுப்பாதை அளவுருக்களின் நிர்ணயத்தையும் விவரிக்கிறது. பூமியானது சூரியனை அல்லாமல், ஒரு பொது நிறை மையத்தைச் சுற்றி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, சூரியக் குடும்பத்தில் உள்ள வானியல் அமைப்புகளின் பொது நிறை மையம் ஆனது சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது. இருப்பினும், வாயுக் கோள்களான வியாழன், சனி நிறை ஆகியவற்றின் மற்றும் தாக்கம் மற்றும் சுற்றுப்பாதைகளின் தாக்கம் காரணமாக அந்த மையம் அரிதாகவே சூரியனுக்குள் அமைகிறது. தற்போது, பொது நிறை மையம் ஆனது சூரியனுக்கு உள்ளே இல்லாமல் வெளியே அமைந்துள்ளது எனவே, பூமி தற்போது சூரியனைச் சுற்றி வரவில்லை. எனவே, புவியானது விண்வெளியில் உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகிறது, சூரியனை அல்ல.பூமியும் நிலவும் பூமியின் மையத்திலிருந்து சுமார் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்) தொலைவில் உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகின்றன. இருப்பினும், நிலவானது மெதுவாகப் பூமியிலிருந்து விலகிச் செல்வதால் இது மாறிக் கொண்டே இருக்கிறது.

Current Affairs

நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீடு 2024 - இந்தியா

நிதி ஆயோக் அமைப்பின் 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவின் நிலையான மேம்பாட்டு இலக்கு நிவர்த்திக் குறியீட்டில் உத்தரகாண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் இடத்தைப் பெற்றுள்ளன. ஒட்டு மொத்தமாக 2020-21 ஆம் ஆண்டில் 66 ஆக இருந்த இந்தியாவின் SDG நிவர்த்திக் குறியீட்டு மதிப்பெண் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 71 புள்ளிகளாக உயர்ந்தது. SDG நிவர்த்திக் குறியீட்டில் 57 புள்ளிகளுடன் பீகார் பின்தங்கிய நிலையில் உள்ளது என்ற நிலையில் 62 புள்ளிகளுடன் ஜார்க்கண்ட் அடுத்த இடத்தில் உள்ளது. 2020-21 ஆம் ஆண்டின் மதிப்பெண்களுடன் ஒப்பிடும்போது பஞ்சாப், மணிப்பூர், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகியவற்றின் புள்ளிகள் அதிகபட்சமாக சுமார் 8 புள்ளிகள் அதிகரித்து முறையே 76, 72, 70 மற்றும் 65 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளன. இந்திய மாநிலங்களில் நிலையான மேம்பாட்டு இலக்குகளில், "வறுமை ஒழிப்பு", "கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார மேம்பாடு" மற்றும் "புவியின் உயிரினங்கள்" ஆகியவற்றின் 2020-21 ஆம் ஆண்டு மதிப்பெண்களில் இருந்து அதிக பட்ச அதிகரிப்பானது பதிவாகியுள்ளது. "பாலினச் சமத்துவம்" மற்றும் "அமைதி, நீதி மற்றும் வலுவான அரசு அமைப்புகள்" போன்ற இலக்குகளுக்கானப் புள்ளிகளில் சிறிய அளவிலான அதிகரிப்புகள் மட்டுமேபதிவாகி உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், "ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்" என்ற ஒரே ஒரு குறிக்கோளின் புள்ளிகள் மட்டும் 2020-21 ஆம் ஆண்டில் இருந்த 67-இல் இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 65 ஆகக் குறைந்துள்ளது.

Current Affairs

தமிழ்நாடு கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் விருதுகள் 2024

அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். எட்டு சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுகளையும், 10 சிறந்த கைவினைக் கலைஞர்களுக்குப் பூம்புகார் மாநில விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார். N.பாலகிருஷ்ணன், K.P. உமாபதி, 5.இராஜகோபால், N.மணி ஆச்சாரி, C.முத்துசாமி ஆச்சாரி, S.கோவிந்தராஜ், B.சுலைகான் பீவி, S.தங்கஜோதி ஆகியோர் 2022-23 ஆம் ஆண்டிற்கான 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுகளைப் பெற்றனர். இந்த விருதானது 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களை விருது வழங்கி கௌரவிக்கிறது.2022-23 ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகள் ஆனது C.ரவி, S.நாகலட்சுமி, M.இராஜப்பா, M.முருகேசன், R.லோகநாதன், N.பூவம்மாள், P.வரதன், M.இராஜரத்தினம், R.சக்திவேல் மற்றும் S.லில்லி மேரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டின் கைவினை மேம்பாட்டிற்குப் பங்களித்த துறையில் சிறந்த 10 கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

Current Affairs

Earth Revolution around the Sun

❖ The movement of Earth currently in the Solar System is not currently orbiting the Sun. ❖ In the Solar System, the Sun is the largest object and has 1,048 times the mass of Jupiter. ❖ However, the gravitational pull which Earth exerts on the celestial body is exerted in the same or smaller amount on the planet. ❖ Kepler's third law describes the relationship between the masses of two objects mutually revolving around each other and the determination of orbital parameters. ❖ Earth orbits a barycentre and not exactly the Sun. ❖ Generally, the barycentre of the bodies in the Solar System is near the Sun. ❖ However, because of the mass, and influence of gas giants Jupiter and Saturn and orbits, it is rarely inside the Sun. ❖ Currently, the barycentre is outside the Sun and not inside it and hence, Earth is not currently orbiting it. ❖ So, the planet is revolving around a point in space and not the Sun ❖ The Earth and Moon orbit a point which is 5,000 kilometres (3,100 miles) from the Earth's centre. ❖ However, this keeps changing as the Moon slowly moves away from the Earth.