Posts

Current Affairs

உலகின் சதுப்புநிலங்களின் நிலை குறித்த அறிக்கை 2024

இது உலகளாவியச் சதுப்புநிலக் கூட்டணி (GMA) என்ற அமைப்பினால் தயாரிக்கப் படுகிறது. இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 147,256 கிமீ² சதுப்புநிலங்களில் கணக்கெடுப்பினை மேற் கொண்டுள்ளதோடு மேலும் ஆறு புதியப் பிரதேசங்களுக்கான ஒரு தரவினையும் சேர்த்துள்ளது.  பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், உலகில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலக் காடுகளில் 40% மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. மலேசியா மற்றும் மியான்மர் போன்ற சில நாடுகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான பாதுகாப்பு வசதிகளே உள்ளன. இந்தோனேசியாவில் மட்டும் உள்ள 21% சதுப்பு நிலங்களுடன், தென்கிழக்கு ஆசியா உலகின் மூன்றில் ஒரு பங்கு சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது. இந்திய சதுப்புநிலங்களில் மட்டும் 21 குழுவினைச் சேர்ந்த 5,700 க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதி அமைந்துள்ளது, அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில், முக்கியமாக கட்ச் வளைகுடா மற்றும் காம்பத் வளைகுடாவில் மிகப்பெரிய சதுப்பு நிலம் அமைந்துள்ளது.  மொத்தம் 5,746 இனங்களைக் கொண்டு, எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு பல்லுயிர்ப் பெருக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், இவற்றில் 4,822 இனங்கள் (84%) விலங்குகள் ஆகும்.  2030 ஆம் ஆண்டிற்குள் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பினை சுமார் 80% என்ற அளவாக இரட்டிப்பாக்குவதை உலகளாவிய சதுப்புநிலக் கூட்டணி நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Current Affairs

State of the World’s Mangroves' report 2024

❖ It is produced by the Global Mangrove Alliance (GMA) . ❖ It maps 147,256 km² of mangroves in 2020, adding data for six new territories . ❖ Despite of the efforts, only 40% of the world's remaining mangrove forests are in protected areas. ❖ Some countries, like Malaysia and Myanmar, have less than 5% protection. ❖ Southeast Asia holds about one-third of the world's mangroves, with Indonesia alone accounting for 21%. ❖ Over 5,700 plant and animal species, across 21 phyla, have been recorded in Indian mangroves alone. ❖ In India, West Bengal holds the largest mangrove area followed by Gujarat, majorly located in the Gulf of Kutch and Gulf of Khambhat. ❖ India have perhaps the highest record of biodiversity of any country, with a total of 5,746 species. Of these, 4,822 species (84%) are animals. ❖ The Global Mangrove Alliance aims to double the protection to 80% by 2030.

Current Affairs

அலுமினிய உற்பத்தியில் இரண்டாவது இடம்

இந்திய நாடானது அலுமினிய உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், சுண்ணாம்புக் கல் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் மற்றும் இரும்புத் தாது உற்பத்தியில் 4வது இடத்திலும் உள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் பிரதான அலுமினிய உற்பத்தி 41.6 லட்சம் டன்கள் என்ற சாதனை அளவை எட்டியது. 2023-24 ஆம் நிதியாண்டில், இரும்புத் தாது உற்பத்தி 275 மில்லியன் மெட்ரிக் டன்களை (MMT) எட்டியது, அதே நேரத்தில் சுண்ணாம்புக் கல் உற்பத்தி 450 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியது. 

Current Affairs

2nd Largest Aluminum Producer

❖ India is ranked as the 2nd largest Aluminium producer, 3rd largest lime producer and 4th largest iron ore producer in the world. ❖ The primary aluminium production reached a record level of 41.6 lakh tonnes (LT) in FY 2023-24. ❖ In FY 2023-24, iron ore production reached 275 million metric tons (MMT), while limestone production hit 450 MMT.

Current Affairs

பாரதிய வாயுயான் விதேயக் 2024

மத்திய பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், பாரதிய வாயுயான் விதேயக், 2024 மசோதாவினை (விமானப் போக்குவரத்து மசோதா) பாராளுமன்றத்தில் முன் வைத்துள்ளது. இந்தப் புதியச் சட்டம் ஆனது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த காலாவதியான 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்திற்கு மாற்றாக, இந்தியாவின் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1934 ஆம் ஆண்டு முதல் இச்சட்டத்தில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு விமானம் அல்லது விமான ரகத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, ஏற்றுமதி அல்லது இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான விதிகளை இந்த மசோதா கொண்டு உள்ளது. இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று "விமானம்" என்ற சொல்லின் புதுப்பிக்கப்பட்ட வரையறை ஆகும்.

Current Affairs

Bharatiya Vayuyan Vidheyak 2024

❖ The Union Civil Aviation Ministry present the Bharatiya Vayuyan Vidheyak, 2024 Bill (Aircraft Bill) in Parliament. ❖ This new legislation aims to overhaul India's aviation regulations, replacing the outdated Aircraft Act of 1934 from the British era.  ❖ Since 1934, 21 amendments have been made in this act. ❖ The bill includes provisions to regulate the design, manufacture, maintenance, possession, use, operation, sale, export or import of any aircraft or class of aircraft. ❖ One of the significant changes in the bill is the updated definition of "aircraft."

Current Affairs

Landslides In Wayanad

❖ The massive landslides occurred at Meppadi in Wayanad district, kerala due to extremely heavy rain. ❖ India accounts for about 8% of global fatalities due to landslides.  ❖ During the period 2001-21, the landslides caused 847 deaths and displaced thousands. ❖ Sikkim has the largest land area (57.6%) that is landslide-prone. ❖ Kerala is the most vulnerable state with over 14% of its land mass in the “very high susceptibility” category.

Current Affairs

வயநாடு நிலச்சரிவு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் கனமழை காரணமாக ஒரு மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. உலகளவில் நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமார் 8% இந்தியாவிலேயே  பதிவாகியுள்ளது. 2001-21 ஆம் காலகட்டத்தில், நிலச்சரிவுகளால் 847 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். * இந்தியாவில், சிக்கிம் மாநிலம் நிலச்சரிவிற்கு உட்படக்கூடிய அளவில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் (57.6%) கொண்டுள்ளது. * "மிக அதிகளவில் நிலச்சரிவிற்கு உட்படக்கூடிய பகுதி" என்ற ஒரு பிரிவில் 14% நிலப் பரப்பைக் கொண்ட கேரளா மிக அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய ஒரு மாநிலமாகும்.

Current Affairs

உலகப் பாரம்பரியத் தளத்திற்கான தற்காலிகப் பட்டியல்

யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தற்காலிகப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த சுமார் 60 தளங்கள் இடம் பெற்று உள்ளன. ஒரு தற்காலிகப் பட்டியல் என்பது, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக பரிந்துரைக்கப் படுவதற்கு பரிசீலிக்க ஒவ்வோர் அரசினால் கோரப்படும் தளங்களின் பட்டியல் ஆகும். சமீபத்தில் அசாமில் உள்ள 'மொய்தாம்ஸ்' எனப்படும் அஹோம் வம்சத்தின் மண்மேடு வடிவிலான புதைவிடத் தளமானது யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த தளம் ஆனது, 2014 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, 42 இந்தியத் தளங்கள் ஆனது உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

Current Affairs

சென்னை இரட்டை அடுக்கு வழித்தடம்

சென்னையில் 4வது இரட்டை அடுக்கு மெட்ரோ இரயில் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. * இது ஒரே தூணில் நிலை தாங்கப்பட்ட இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ இரயில் இரட்டை வழித் தடத்தினைக் கொண்டுள்ளது. இந்த 5 கி.மீ தூர வழித்தடத்தில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய நான்கு மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைய உள்ளன.