அனைத்து வகைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை
ஹரியானா மாநிலத்தில் 24 பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்பின் (MSP) கீழ் கொள்முதல் செய்யப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. 24 பயிர் வகைகளில், சுமார் 10 பயிர்கள் இந்த மாநிலத்தில் அதிகம் பயிரிடப்படாதவை ஆகும். இந்தியாவிலேயே இவ்வளவு பரந்த அளவில் இத்தகைய நடவடிக்கையினை மேற் கொண்ட முதல் மாநிலமாக ஹரியானா திகழ்கிறது. இவற்றின் கொள்முதலுக்கு சுமார் 123.65 கோடி ரூபாய் அரசிற்குச் செலவாகும். கோதுமை, நெல் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை அரசாங்கத்தினால் MSP வரம்பின் கீழ் பெருமளவில் கொள்முதல் செய்யப்படும் முக்கியப் பயிர்களாகும்.