Posts

Current Affairs

மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்டத்தினை அமல்படுத்துதல்

கல்வி உரிமைச் சட்டத்தினை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் சார்ந்த அரசு உதவி பெறாத பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவதை கல்வி உரிமைச் சட்டம் கட்டாயமாக்குகிறது. பஞ்சாப், கேரளா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநில அரசுகள்கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்தவில்லை. 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 86வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்யும் 21 A என்ற பிரிவினை அறிமுகப்படுத்தியது. கல்விக்கான நிதி ஒதுக்கீடானது 2014 ஆம் ஆண்டில் 68,000 கோடி ரூபாயாக இருந்தது என்ற நிலைமையில் 2024-25 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடானது சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவிற்கு ஒதுக்கப்பட்ட 72,473 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 73,008 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீடான சுமார் 57,244 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உயர்கல்விக்கு 47,619 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப் படுகிறது.

Current Affairs

Implementation of RTE in states

❖ The Centre appealed to the state governments to implement the provision of the Right to Education. ❖ RTE mandates 25 per cent of seats for the children from economically weaker sections in private unaided schools. ❖ The state governments such as Punjab, Kerala, Telangana and West Bengal have not implemented RTE provisions. ❖ The 86th Constitutional Amendment in 2022 introduced Article 21 A, ensuring free and compulsory education for children aged 6-14 years. ❖ Education budget was at Rs 68,000 crore in 2014 and has reached to Rs 1.20 lakh crore in 2024-25 budget. ❖ School Education and Literacy got Rs 73,008 crore, compared to Rs 72,473 crore in the revised estimate for 2023-24. ❖ Higher Education has got Rs 47,619 crore, down from the revised estimate of Rs 57,244 crore for 2023-24.

Current Affairs

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 2024

இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் ஆனது கடந்த பத்தாண்டுகளில் 165 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 76.38 ஜிகாவாட் (GW) ஆக இருந்த இதன் அளவானது 2024 ஆம் ஆண்டில் 203.1 GW ஆக உயர்ந்துள்ளது. நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா உலகளவில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா காற்றாலை ஆற்றல் உற்பத்தித் திறனில் 4வது இடத்திலும், சூரிய சக்தி ஒளி மின்னழுத்த உற்பத்தி திறனில் 5வது இடத்திலும் உள்ளது.முதன்முறையாக, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்துப் பெறப்படும் இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியானது 200 GW திறனைத் தாண்டியுள்ளது. இதில் 85.47 ஜிகாவாட் சூரிய சக்தி மற்றும் 46.93 ஜிகாவாட் மாபெரும் நீர் மின் நிலையங்கள், 46.66 ஜிகாவாட் காற்றாலை, 10.95 ஜிகாவாட் உயிரி சார் ஆற்றல் மற்றும் 5.00 ஜிகாவாட் சிறிய நீர்மின் நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

Current Affairs

Renewable Energy Capacity 2024

❖ India's installed renewable energy capacity has increased by 165 per cent over the past decade. ❖ It is rising from 76.38 Gigawatts (GW) in 2014 to 203.1 GW in 2024. ❖ India has achieved 4th position globally in RE Installed Capacity.  ❖ India stood 4th in Wind Power capacity and 5th in Solar PV capacity. ❖ For the first time, the country has crossed 200 GW capacity from non-fossil fuel sources. ❖ It includes 85.47 GW of solar power and 46.93 GW of large hydro 46.66 GW of wind power, 10.95 GW of biopower, and 5.00 GW of small hydropower.

Current Affairs

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் நிலை - 9வது NIRF

9வது தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு அறிக்கையின் முடிவுகளின் படி, உயர்கல்வி பயில்வதற்கான மிகவும் விரும்பத்தகு இடமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது. சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது ஒட்டு மொத்தத் தர வரிசை மற்றும் பொறியியல் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் பிரிவில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 100 முன்னணி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழக மாநிலத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஆறு மாநில பல்கலைக்கழகங்கள், 10 தனியார் நிறுவனங்கள் மற்றும்இரண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் அடங்கும். அண்ணா பல்கலைக்கழகம் (தரவரிசை 20); பாரதியார் பல்கலைக்கழகம் (44); பாரதிதாசன் பல்கலைக்கழகம் (55); சென்னைப் பல்கலைக்கழகம் (64); அழகப்பா பல்கலைக் கழகம் (76) மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் (100) ஆகியவை அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஆகும். அண்ணா பல்கலைக்கழகம் ஆனது நாட்டிலுள்ள அரசின் நிதியுதவி பெறும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கிறது மற்றும் பல்கலைக்கழகங்களுள் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. வேளாண் பிரிவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது 6வது இடத்திலும், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது 17வது இடத்திலும் உள்ளன. ஊட்டியில் உள்ள JSS மருந்தியல் கல்லூரி ஆனது 6வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் கல்லூரி 78வது இடத்தையும் பெற்றுள்ளது. ஆறு கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிகளில் நான்கு சென்னையில் உள்ளன. மருத்துவக் கல்லூரிகளில், சென்னை மருத்துவக் கல்லூரி 10வது இடத்தையும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடத்தையும் பெற்றுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரி 13வது இடத்தையும், லயோலா 8வது இடத்தையும் பெற்று உள்ளது.

Current Affairs

Higher education in Tamil Nadu – 9th NIRF

❖ Tamil Nadu continues to be the destination for higher education, as per the results of the 9th edition of the National Institutional Ranking Framework. ❖ The Indian Institute of Technology Madras stood first in overall ranking and the engineering category. ❖ It also scored second in research and innovation category. ❖ The State is home to 18 of the 100 top institutions in the country .❖ They include six State universities, 10 private institutions and two Central institutes. ❖ The State universities are: Anna University (rank 20); Bharathiar University (44); Bharathidasan University (55); University of Madras (64); Alagappa University (76) and Periyar University (100) are State-run institutions. ❖ Anna University tops the public funded State universities in the country and is ranked 13 among universities. ❖ The Tamil Nadu Agriculture University is ranked 6 in its category and the TN Veterinary and Animal Sciences University is ranked 17 . ❖ JSS College of Pharmacy, Ooty, is ranked 6th, the College of Pharmacy of Madras Medical College is ranked 78. ❖ Of the six architecture and planning colleges four are in Chennai. ❖ Madras Medical College is ranked 10 while Christian Medical College is ranked 3rd among medical colleges. ❖ Presidency College is ranked 13 from 3rd last year in arts and science colleges and Loyola has been ranked 8th

Current Affairs

மாபெரும் நிலநடுக்க முன்னெச்சரிக்கை

தெற்கு ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான ஒரு நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அந்த நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் ஆண்டு அதன் முதலாவது "மாபெரும் நிலநடுக்க முன்னெச்சரிக்கையினை" வெளியிட்டுள்ளது. நாங்காய் அகழிப் பகுதியில் இயல்பை விட வலுவான நில அதிர்வு மற்றும் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளதாக எச்சரிக்கை கூறியது. * நாங்காய் அகழி மண்டலம் ஆனது, ஜப்பானின் தென்மேற்கு பசிபிக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள 900 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கண்டத் தட்டு மூழ்கு நிலைப் பகுதியாகும். இந்த அகழியானது 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய நிலநடுக்கங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது பொதுவாக இணையாகவே வரும் என்பதோடு இதில் இரண்டாவதாக வரும் நில நடுக்கம் ஆனது அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்திய அந்த "இரட்டை" நில நடுக்கங்கள் 1944 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்தன. ஜப்பானின் வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிக்கையானது வெறும் எச்சரிக்கை தானே அன்றி முன்னறிவிப்பு அல்ல.

Current Affairs

பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்- 2023

2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள பொது மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் 1.727 மில்லியன் அலகு (MU) மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன. 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள பொது மின்னேற்ற நிலையங்களின் ஒட்டுமொத்த மின் நுகர்வு 113.58 MU ஆக இருந்தது. தமிழ்நாட்டில் 163 பொது மின்னேற்ற நிலையங்கள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.032 MU மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ள அதே நேரத்தில் 154 பொது மின்னேற்ற நிலையங்கள் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் 0.695 MU மின்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளன. கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை வடக்கு மற்றும் வேலூர் ஆகியவை பொது மின்னேற்ற நிலையங்களை கொண்ட தமிழ்நாட்டின் சில முக்கியப் பகுதிகளாகும். 2023-24 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள பொது மின்னேற்ற நிலையங்கள் 13.383 MU மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பதிவான மின்சார நுகர்வு முறையே 1.438 MU மற்றும் 1.422 MU ஆக இருந்தது. நாட்டில் விற்கப்படும் நான்கு சக்கர மின்சார வாகனங்களில் சுமார் 40% மற்றும் இரு சக்கர மின்சார வாகனங்களில் 70% ஆனது தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் படுகின்றன. டெல்லி (54.43 MU), மகாராஷ்டிரா (28.64 MU), குஜராத் (8.78MU) ஆகியவை பொது மின்னேற்ற நிலையங்களின் மின்சார நுகர்வு அடிப்படையில் முதலிடத்தில் உள்ளன.

Current Affairs

கஸ்தூரி பருத்தி பாரதம் திட்டம்

ஜவுளி அமைச்சகத்தின் இந்தத் திட்டமானது இந்தியப் பருத்தி வகையின் கண்டறிதல், சான்றளிப்பு மற்றும் வர்த்தக முத்திரையிடல் போன்றவற்றில் ஒரு முன்னோடிமிக்க முன்னெடுப்பாகும். தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் இது தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. உலகப் பருத்தி உற்பத்தியில் இந்தியா 25% பங்களிக்கிறது.

Current Affairs

Megaquake advisory

❖ After a 7.1-magnitude earthquake shook the southern Japan, the country’s meteorological agency issued its first-ever “megaquake advisory” ❖ The warning said the likelihood of strong shaking and large tsunamis is higher than normal on the Nankai Trough. ❖ Nankai Trough is a 900 km long subduction zone along Japan’s southwest Pacific coast. ❖ The trough has produced large earthquakes roughly every 100 to 150 years. ❖ These tremors usually come in pairs, with the second often rupturing in the subsequent two years. ❖ The most recent “twin” earthquakes took place in 1944 and 1946. ❖ This advisory by the Japan’s meteorological agency was just a warning not a prediction.