மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய்க்கான புதிய சிகிச்சை 2024
பல/விரிவான மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட காசநோயாளிகளுக்கு BPaL (பெடா குலைன், ப்ரீடோமானிட் மற்றும் லைன்ஜோலிட்) என்ற மருந்து தொகுப்புகளை வழங்க இந்தியா தயாராகி வருகிறது. இந்தப் புதிய மருந்துத் தொகுப்புடன் M/XDR காசநோய்ப் பாதிப்பிற்கு மிகவும் எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்தச் சிகிச்சை முறையானது பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, உக்ரைன் போன்ற நாடுகளில் நல்ல விளைவுகளை வழங்கியுள்ளது. தற்போது, இந்தியாவில் MDR/RR-TB நோயாளிகளுக்கான சிகிச்சைகளின் பலனளிப்பு விகிதம் 56% ஆகவும், XDR-TB நோயாளிகளுக்கான சிகிச்சையின் பலனளிப்பு விகிதம் 48% ஆகவும் உள்ளது. 2022 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பானது BPaL (பெடாகுலைன், ப்ரீடோமானிட் மற்றும் லைன்ஜோலிட்) மற்றும் BPaLM (பெடாகுலைன், ப்ரீடோமானிட் மற்றும் லைன்ஜோலிட் + மாக்ஷிஃப்லாக்சின்) ஆகிய ஆறு மாத மருந்து தொகுப்பு சிகிச்சைமுறைகளை மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட காசநோய்ப் பாதிப்பிற்கான சிகிச்சை விருப்பத் தேர்வுகளாக பரிந்துரைத்தது. இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் 1.4 லட்சமாக இருந்த மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட காசநோய் பாதிப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் 21% குறைந்து 1.1 லட்சமாக உள்ளது.