Posts

Current Affairs

தூய்மை/ பசுமை வழி தாவரங்கள் திட்டம் 2024

மத்திய அமைச்சரவையானது பசுமை வழி தாவரங்கள் (Clean Plant) திட்டத்திற்கு (CPP) ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவில் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. நாடு முழுவதும் உள்ள பழப் பயிர்களின் தரத்தை உயர்த்துவதையும் CPP இலக்காகக் கொண்டுள்ளது. பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், வருமான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வைரஸ்தொற்று இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களைப் பெற விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை 24 மில்லியன் ஹெக்டேராக இருந்த தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பானது 28.63 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. 277.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி என்பது தற்போது 352 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இந்தியா புதிய (செயல்முறைக்கு உட்படுத்தாத) பழங்களை அதிகளவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில், இந்தியா சுமார் 1.15 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய பழங்களை ஏற்றுமதி செய்தது அதே நேரத்தில் சுமார் 2.73 பில்லியன் டாலர் மதிப்புள்ள பழங்களை இறக்குமதி செய்தது.

Current Affairs

Clean Plant Program 2024

❖ The Union Cabinet approved the Clean Plant Program (CPP). ❖ It is aimed at increasing the yield and productivity of horticulture crops in India. ❖ The CPP is also targeted at enhancing the quality of fruit crops across the nation. ❖ The programme has three main components geared towards helping farmers obtain virus-free, high-quality planting material to increase crop yields and improve income opportunities. ❖ India is the second largest producer of fruits and vegetables in the world after China. ❖ From 2013-14 to 2023-24, the area under horticulture crops has risen from 24 million hectares to 28.63 million hectares. ❖ Its Production has increased from 277.4 million metric tonnes (mt) to 352 million mt. ❖ India is also a major importer and exporter of fresh fruits. ❖ In the financial year 2023-24, India exported fresh fruits worth $1.15 billion, while it imported fruits worth $2.73 billion.

Current Affairs

புதிய இராம்சர் தளங்கள் இந்தியா

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சமீபத்தில் சர்வதேச அங்கீகாரத்தினை பெற்றுள்ளன. இந்தப் புதிய சேர்க்கைகளின் மூலம், தமிழகத்தில் உள்ள இராம்சர் தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆனது தற்போது இராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள இராம்சர் தளங்களின் (மொத்த இராம்சர் தளங்களின் பரப்பு 13,58,068 ஹெக்டேர் பரப்பளவு) எண்ணிக்கையை 85 ஆக உயர்த்தியுள்ளது. 1982 முதல் 2013 ஆம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள இராம்சர் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன. 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்தியா 59 புதிய ஈரநிலங்களை இராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.தற்போது, தமிழ்நாடு அதிகபட்ச இராம்சர் தளங்களை (18 தளங்கள்) கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10 தளங்கள்) இடம் பெற்றுள்ளது. ஐக்கியப் பேரரசு (175) மற்றும் மெக்சிகோ (142) ஆகியவை மிகவும் அதிகபட்ச இராம்சர் தளங்களைக் கொண்டுள்ளன. பொலிவியா நாடானது அதிக பரப்பளவை (148,000 சதுர கிமீ) இந்த உடன்படிக்கையின் பாதுகாப்பை பெறுவதற்கான இப்பட்டியலில் சேர்த்துள்ளது.

Current Affairs

New Ramsar sites 2024 - India

❖ Nanjarayan bird sanctuary in Tirupur and Kazhuveli bird sanctuary in Villupuram had recently received international recognition. ❖ With this new addition, the number of Ramsar sites in Tamil Nadu has increased to 18, highest among the states. ❖ Tawa Reservoir in Madhya Pradesh is also included in the Ramsar list. ❖ This takes our tally to 85 Ramsar sites, covering an area of 13,58,068 hectare in India. ❖ From 1982 to 2013, a total of 26 sites were added to the list of Ramsar sites in the country. ❖ From 2014 to 2024, the country has added 59 new wetlands to the list of Ramsar sites. ❖ Currently, Tamil Nadu harbours the maximum number of Ramsar sites (18 sites), followed by Uttar Pradesh (10 sites). ❖ The United Kingdom (175) and Mexico (142) have the maximum Ramsar sites. ❖ Bolivia spans the largest area, with the 148,000 sq. km. under the Convention’s protection.

Current Affairs

TENG தொழில்நுட்பம்

இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வேண்டி பத்து இணை உராய்வு மின்னியல் சார் சிறிய மின்னியற்றி (TENG) அடிப்படையிலான காலணிகளின் அடித்தோல் பகுதியில் அமைந்த ஆற்றல் உருவாக்க அலகுகளை வழங்கியுள்ளது. இந்த காலணிகள், மனித இயக்கத்திலிருந்து உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தச் செய்வதற்காக வேண்டி வடிவமைக்கப் பட்டுள்ளன என்ற நிலையில் இது மின்னணுச் சாதனங்களுக்கான நிலையான ஆற்றல் மூலத்தை வழங்குகிறது. இந்த காலணிகள் மனிதர்களின் ஒவ்வொரு அடியிலும் ஆற்றலை உருவாக்குவதற்காகமேம்பட்ட உராய்வு மின்னியல் இணைகளைப் பயன்படுத்துகின்றன. - இந்தக் காலணிகளில் RFID மற்றும் நேரடி இருப்பிட கண்காணிப்புக்கான செயற்கைக் கோள் அடிப்படையிலான புவியிடங்காட்டி தொகுதி போன்றவை உள்ளிட்ட அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பமும் பொருத்தப் பட்டுள்ளது.

Current Affairs

TENG technology

❖ IIT Indore has delivered ten pairs of Tribo-Electric Nanogenerator (TENG) based shoe sole energy harvesting units to DRDO. ❖ These shoes are designed to harness energy from human motion, providing a sustainable power source for electronic devices. ❖ These shoes utilize advanced tribo-pairs to generate power with each step.  ❖ The shoes are also equipped with sophisticated tracking technology, including RFID and a satellite-based GPS module for live location tracking.

Current Affairs

தமிழக அரசின் விருதுகள் 2024

2024 ஆம் ஆண்டிற்கான நல்லாட்சி விருதுகள், புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான முதலமைச்சரின் காவல்துறை பதக்கம் மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்குவோருக்கான முதல்வரின் காவல்துறை பதக்கம் ஆகிய விருதுகளை வென்றவர்களின் பட்டியலினைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஒரு புதுமையான முன்னெடுப்புகளுக்கான சான்றிதழ்களைப் பெறுபவர்களின் பட்டியலினையும் அறிவித்தது. பின்வரும் ஆறு அதிகாரிகள் நல்லாட்சி விருதுகளைப் பெற்றுள்ளனர். J.இன்னசென்ட் திவ்யா, S.திவ்யதர்ஷினி, V.P.ஜெயசீலன், இளம்பஹவத், N.கோபால கிருஷ்ணன் மற்றும் D.வனிதா ஆகியோர் ஆவர். புலனாய்வுத் துறையில் சிறப்பான பங்கினை ஆற்றியதற்காக வேண்டி 10 காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் காவல் துறைப் பதக்கத்தைப் பெற உள்ளனர். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் N.சுரேஷ், S.சௌமியா மற்றும் 5.புகழேந்தி கணேஷ்; காவல் துறை ஆய்வாளர்கள் K.புனிதா, D.வினோத்குமார், 1.சொர்ணவள்ளி, N.பார்வதி, P.ராதா, R.தெய்வராணி, A.அன்பரசி ஆகியோர் ஆவர். தலைமைக் காவல் ஆய்வாளர் T.S. அன்பு, காவல் துறை கண்காணிப்பாளர் E.கார்த்திக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் C.R. பூபதிராஜன், காவல் துறை ஆய்வாளர் K.சீனிவாசன், P.V. முபைதுல்லா பொதுச் சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல் அமைச்சரின் காவல் துறைப் பதக்கத்தைப் பெற உள்ளார்.  மூன்று அதிகாரிகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் D.ஜகந்நாதன் மற்றும் P.மதுசூதன் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி R.சுதன் ரெட்டி ஆகியோர் இந்த ஆண்டிற்கான புதுமையான முயற்சிகளுக்கான சான்றிதழ்களைப் பெற உள்ளனர்.

Current Affairs

Tamil Nadu Government awards 2024

❖ Tamil Nadu government announced the recipients of Good Governance Awards, Chief Minister’s Police Medal for Excellence in Investigation and Chief Minister’s Police Medal for Excellence in Public Service for 2024. ❖ It also announced recipients for certificates for innovative initiatives. ❖ Six officers will receive Good Governance Awards. o They are: J. Innocent Divya, S. Divyadharshini, V.P. Jeyaseelan, K. Elam bahavath, N. Gopalakrishnan and D. Vanitha. ❖ 10 police officers would receive the Chief Minister’s Police Medal for Excellence in Investigation. o They are: Deputy Superintendents of Police N. Suresh, S. Sowmiya and S. Pugazhenthi Ganesh; Inspectors K. Punitha, T. Vinothkumar, I. Sornavalli, N. Parvathi, P. Radha, R. Dheivarani and A. Anbarasi. ❖ IGP T.S. Anbu, SP E. Karthik, DSP C.R. Boopathirajan, Inspector K. Srinivasan and SI P.V. Mubaidullah would receive the Chief Minister’s Police Medal for Excellence in Public Service. ❖ Three officers - IAS officers D. Jagannathan and P. Madhusudhan and retired IAS officer R. Sudhan Reddy would receive certificates for innovative initiatives for this year.

Current Affairs

2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க எண்ணிக்கை

2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆனது தலா 40 தங்கப் பதக்கங்களுடன் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஒரு நாடு என்ற பட்டத்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.அமெரிக்கா 126 (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது. சீனா 91 (40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்) மொத்தப் பதக்க எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவானது, ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களுடன், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 71வது இடத்தைப் பெற்றுள்ளது. இது 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக 48வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கையினை விடக் குறைவாகும். இந்த ஆண்டு பதக்கம் வென்ற வீரர்கள்: மனு பாக்கர் -வெண்கலம் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் ஸ்வப்னில் குசலே வெண்கலம் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் நீரஜ் சோப்ரா - வெள்ளி அமன் செஹ்ராவத் வெண்கலம்

Current Affairs

Paris Olympics 2024 medal tally

❖ The U.S. and China will share the title for most golds in 2024 with 40 gold medals each. ❖ The U.S. won the total medal count with 126 (40 gold, 44 silver, and 42 bronze). ❖ China came in second in the total medal race with 91 (40 gold, 27 silver, and 24 bronze). ❖ India, with a total of 6 medals, including one silver and five bronze medals, got the 71st spot in the overall medal tally. ❖ It is lower than their 48th overall finish at the 2020 Tokyo Olympics with 7 medals, including one gold, two silver, and four bronze medals. ❖ This year’s winners o Manu Bhaker - Bronze o Manu Bhaker and Sarabjot Singh – Bronze o Swapnil Kusale – Bronze o Indian hockey team – Bronze o Neeraj Chopra – Silver o Aman Sehrawat - Bronze