Posts

Current Affairs

அக்னி ஏவுகணைகளின் தந்தை

இந்தியாவில் 'அக்னி ஏவுகணைகளின் தந்தை' என்று அழைக்கப்படும் இராம் நரேன் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாத்தில் காலமானார். அவர் அக்னி ஏவுகணை திட்ட இயக்குநராகவும், ஐதராபாத்தில் உள்ள ASL (மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் ஆய்வகம்) இயக்குநராகவும் பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2005 ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும் வரை அந்தத் திட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். மத்திய அரசானது அவருக்கு 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கியது. 1983 ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐந்து ஏவுகணைகளில் அக்னி ஏவுகணை மிகவும் இலட்சிய நோக்கமிக்கது ஆகும். மற்ற 4 ஏவுகணைகள் - பிருத்வி, ஆகாஷ், நாக் மற்றும் திரிசூல் ஆகியனவாகும்.

Current Affairs

Father of Agni missiles

❖ Ram Narain Agarwal, regarded as the 'father of Agni missiles' in India, died recently at Hyderabad.  ❖ He had served as the Agni programme director and also as the director of ASL (Advanced Systems Laboratory) in Hyderabad. ❖ He led India's Agni missile programme from its inception in 1983 until his retirement in 2005. ❖ The Centre conferred him with Padma Shri in the year 1990 and Padma Bhushan in 2000. ❖ The Agni missile is the most ambitious of the five missiles sought to be developed under the Integrated Guided Missile Development Programme launched by the Union government in 1983. ❖ The others were Prithvi, Akash, Nag, and Trishul.

Current Affairs

இந்தியாவில் அந்நிய தொகுப்பு முதலீடு 2023-24

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த அந்நியத் தொகுப்புகளின் எண்ணிக்கை 11,219 அளவை எட்டியுள்ளது. இது 11,081 ஆக பதிவான முந்தைய ஆண்டின் அளவை விட சற்று அதிகமாகும். 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டாளர்களில் (FPIs) அதிக பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. மொத்தமாக இங்கு பதிவு செய்யப்பட்ட அந்நிய தொகுப்பு முதலீடுகளில், சுமார் 3,457 முதலீட்டாளர்களுடன் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து லக்ஸம்பர்க் 1,393 மற்றும் கனடா 804 என்ற எண்ணிக்கையுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான அந்நிய தொகுப்பு முதலீடு ஆனது 1992-93 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக முதலீடு ஆகும்.

Current Affairs

FPI investment in India 2023-24

❖ The total number of registered FPIs in India reached 11,219.  ❖ This marks a slight increase from the previous year, where the number stood at 11,081. ❖ The United States accounts for the highest share of Foreign Portfolio Investors (FPIs) investing in India during the fiscal year 2023-24. ❖ Out of the total registered FPIs, the United States led with 3,457 investors. ❖ It is followed by Luxembourg with 1,393 and Canada with 804. ❖ FPI in India during 2023-24 was the highest since 1992-93.

Current Affairs

பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனாவிற்கான வழிகாட்டுதல்கள்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது பிரதான் மந்திரி- சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மாதிரி சூரிய சக்தி உற்பத்தி கிராமம் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதற்காக வேண்டி பல்வேறு செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 'மாதிரி சூரிய சக்தி உற்பத்தி கிராமம்' என்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் ஒருமாவட்டத்திற்கு ஒரு மாதிரி சூரிய சக்தி உற்பத்திக் கிராமத்தினை உருவாக்க இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மொத்தமாக 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி சூரிய சக்தி உற்பத்தி கிராமத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப் படுகிறது. போட்டி முறையின் கீழ் ஒரு கிராமமாக கருதப்படுவதற்கு, ஒரு கிராமம் ஆனது 5,000 (அல்லது சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு 2,000) என்ற அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையினைக் கொண்ட வருவாய் கிராமமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனுடன் வெற்றி பெறும் கிராமம், 1 கோடி ரூபாய் மத்திய நிதி உதவி மானியத்தினைப் பெறும். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியன்று பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது மேற்கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி கலங்களின் உற்பத்தி திறனின் பங்கை அதிகரிக்கச் செய்வதையும், குடியிருப்புக்களை சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்ய அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது 75,021 கோடி ரூபாய் செலவில் 2027 ஆம் நிதியாண்டு வரை செயல் படுத்தப் பட உள்ளது.

Current Affairs

PM-Surya Ghar Muft Bijli Yojana guidelines

❖ The Ministry of New & Renewable Energy (MNRE) has issued the operational guidelines for implementing the model solar village under the ‘PM-Surya Ghar: Muft Bijli Yojana’. ❖ Under the scheme component ‘Model Solar Village,’ emphasis has been made on creating one model solar village per district across India. ❖ A total financial outlay of ₹800 crore has been allocated for this component. ❖ It is providing ₹1 crore per selected model solar village. ❖ In order to be considered a village under the competition mode, a village must be a revenue village with a population size above 5,000 (or 2,000 for special category States). ❖ The winning village in each district, with the highest RE capacity, will receive a central financial assistance grant of ₹1 crore. ❖ The Government of India has approved the PM-Surya Ghar: Muft Bijli Yojana on February 29, 2024. ❖ It aims to increase the share of solar rooftop capacity and empower residential households to generate their own electricity. ❖ The scheme has an outlay of ₹75,021 crore and is to be implemented till FY27.

Current Affairs

70வது தேசிய திரைப்பட விருதுகள்

2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தினால் (CBFC) சான்றளிக்கப்பட்ட முழு நீளத் திரைப் படங்கள் மற்றும் குறும்படங்கள் இந்த விருதிற்குத் தகுதி பெற்றன. மலையாள மொழித் திரைப்படமான ஆட்டம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. ரிஷப் ஷெட்டி, காந்தாரா என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசிபரேக் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் - பகுதி 1 திரைப்படம் ஆனது அதிக (4) விருதுகளை வென்றது; - சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை). சிறந்த இசை அமைப்பாளர் விருது ப்ரீதம் (பாடல்கள்), ஏ.ஆர். ரஹ்மான் (பின்னணி இசை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இது ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற 7வது தேசிய திரைப்பட விருதாகும்.

Current Affairs

70th National Film Awards

❖ Feature and non-feature films certified by the Central Board of Film Certification (CBFC) between January 1, 2022, and December 31, 2022, were eligible for contention. ❖ The Malayalam-language drama Aattam won the Best Feature Film award. ❖ Rishab Shetty won the Best Actor award for Kantara. ❖ The Best Actress honour was shared by Nithya Menen (Thiruchitrabalam) and Manasi Parekh. ❖ Ponniyin Selvan - Part1 won the most (4) awards - Best Tamil Film, Best Sound Design, Best Cinematography and Best Music Director (Background Music). ❖ Best Music Director award was given to Pritam (Songs), AR Rahman (Background Score). ❖ This is the 7th National Film Awards for AR Rahman.

Current Affairs

ஐக்கிய நாடுகள் சபையின் இணைய வெளிக் குற்றங்கள் தொடர்பான ஒப்பந்தம்

கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இணைய வெளிக் குற்றங்கள் தொடர்பான உடன்படிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.இது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி போன்ற இணைய வெளிக் குற்றங்களை மிகவும் திறன் மிக்க முறையிலும் மிகவும் தீவிரமாகவும் தடுப்பதையும் அதனை எதிர்த்துப் போராடுவதையும்" நோக்கமாகக் கொண்டுள்ளது. முதன்முறையாக, உலகளவிலான அளவில் இணைய வெளிக் குற்றங்கள் மற்றும் தரவு அணுகலைச் செயல்படுத்தும் சட்டக் கட்டமைப்பை இது முன்மொழிகிறது. இணைய வெளிக் குற்றங்களிலிருந்து சமூகத்தைப் பாதுக்காப்பதற்காக வேண்டி இது "உலகளாவிய குற்றவியல் நீதிக் கொள்கையை" நிறுவுகிறது. மக்கள் அணுக முடியாத தகவல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்பை மீறும் செயல் முறையினை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை அமல்படுத்துமாறு அரசுகளுக்கு இது அழைப்பு விடுக்கிறது. எனினும் 40 உறுப்பினர் நாடுகள் இந்த உடன்படிக்கையினை அங்கீகரித்தப் பிறகே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

Current Affairs

UN cybercrime treaty 2024

❖ The United Nations Cybercrime Convention which has been under negotiation for the past three years, was unanimously approved by UN members. ❖ It aims to "prevent and combat cybercrime more efficiently and effectively," notably regarding child sexual abuse imagery and money laundering.  ❖ For the first time, it proposes a global-level cybercrime and data access-enabling legal framework. ❖ It establishes “a global criminal justice policy,” to protect society against cybercrime. ❖ It calls states to put in place legislation that will make it illegal to breach an information and communications system people don’t have access to. ❖ The treaty would enter into force once 40 member nations will ratify it.