Posts

Current Affairs

ஜியோ பார்சி திட்ட இணைய தளம்

இந்தியாவில் பார்சி சமூகத்தின் மக்கள்தொகை குறைவதைத் தடுப்பதற்காக மத்திய அரசானது ஜியோ பார்சி திட்டத்தின் இணைய தளம் என்ற மத்திய அரசின் துறை சார் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு அறிவியல் சார் நெறிமுறை மற்றும் கட்டமைக்கப்பட்ட திட்டங்களை ஏற்பதன் மூலம் பார்சி இன மக்கள்தொகை குறைந்து வரும் போக்கை மாற்றியமைப்பது மற்றும் அவர்களின் மக்கள்தொகையை உறுதிப்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பார்சியினத் தம்பதிகளுக்கு தரமான மருத்துவ நெறிமுறையின் கீழ் மருத்துவச் சிகிச்சை பெறவும், குழந்தை நலப் பராமரிப்பிற்காகவும், ஒருவரை சார்ந்து வாழும் முதியவர்களுக்கு உதவுவதற்காகவும் நிதி உதவி வழங்குகிறது.

Current Affairs

Jiyo Parsi scheme portal

❖ Centre launched the Jiyo Parsi Scheme portal, a Central Sector Scheme to arrest the population decline of the Parsi community in India. ❖ It aims to reverse the declining trend of Parsi population by adopting a scientific protocol and structured interventions, and to stabilise their population.  ❖ It provides the financial assistance to Parsi couples for medical treatment under standard medical protocol and towards childcare, and assistance to dependent elderly.

Current Affairs

பழங்குடியினக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் மதிப்பீடு

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மாநிலத்தில் 36பழங்குடியின உட்பிரிவுகள் உள்ளனர். அந்தப் பிரிவுகளில் முக்கியப் பழங்குடியின சமூகத்தினர் மலையாளி, தோடர்கள், குரும்பர்கள், பனியர்கள், இருளர்கள், காட்டுநாயக்கர்கள், கணிக்கர்கள், பள்ளியர்கள் மற்றும் காடர் ஆகியப் பிரிவுகள் ஆகும். இவற்றுள் தோடர்கள், கோத்தர், குரும்பர்கள், கட்டுநாயக்கர்கள், பனியர்கள், இருளர்கள் ஆகியோர் 'ஆதிகாலப் பழங்குடியினர்' என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்த மாநிலத்தின் ஒருங்கிணைந்தப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களின் மக்கள் தொகை ஆனது 7.94 லட்சமாக உள்ள நிலையில் இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவிகிதம் (இது 721 லட்சம்) ஆகும். 7.94 லட்சம் பழங்குடியின மக்களில் 50.5 சதவீதம் பேர் ஆண்கள், 49.5 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். * கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மாநிலத் திட்டக்குழு (SPC) விரிவான மதிப்பீட்டை மேற்கொண்டது. அடிப்படை உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி ஆகியவற்றில் பெரும் சவால்கள் நீடித்து காணப் படுவதனை இது கண்டறிந்தது. அரசுப் பேருந்து சேவைகளின் நிகழ் நிலை மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. * இந்த மலைப் பகுதிகளில் மாநில அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணச் சேவைத் திட்டமானது கிடைக்கப் பெறுவதில்லை என்பதும் கண்டறியப் பட்டது. கல்வியில் இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்கவும், மாணவர் சேர்க்கையை வெகுவாக அதிகரிக்கவும் அதிகப் பள்ளிகளை நிறுவி, தற்போதுள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது. + பழங்குடியினர் பகுதியில், அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் தவிர, அரசு அல்லது தனியார் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் எதுவும் இல்லை. பருவகாலம் காரணமாக ஒட்டு மொத்தக் குடும்பங்களும் வேலைவாய்ப்பிற்காக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது அவர்கள் கல்வியை இடைநிறுத்துவதற்கு வழி வகுத்துள்ளது. 97 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய இரண்டையும் வைத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.தோராயமாக 10 சதவீத குடும்பங்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சாதிச் சான்றிதழ்களை வைத்து இருக்கின்றனர், அதே சமயம் சுமார் 15 சதவீதத்தினரிடம் மட்டுமே பழங்குடியினர் அடையாள அட்டைகள் உள்ளன. பழைய மற்றும் பிரபலமான அரசு நலத் திட்டங்களைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் ஆனால் புதிய திட்டங்களைப் பற்றிய பெரும் ஒரு விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாகவே இருந்தது.

Current Affairs

Evaluation of Schemes in the Tribal Villages

❖ According to the 2011 Census, there are 36 sub-groups of tribes in the Tamilnadu State. ❖ The main tribes among them are Malayali, Toda, Kurumbas, Paniyan, Irular, Kattunayakan, Kanikkar, Palliyan, and Kadar. ❖ Of these, Toda, Kota, Kurumbas, Kattunayakan, Paniyan, and Irular have been designated as ‘Primitive Tribes’. ❖ The combined Scheduled Tribes population of the State, as per the 2011 Census, is 7.94 lakh, representing 1.10 per cent of the total population of the State (which is 721 lakh). ❖ Out of the 7.94 lakh tribal population, 50.5 per cent are males and 49.5 percent are females. ❖ The State Planning Commission (SPC) conducted a comprehensive evaluation of the implementation of government schemes in the densely-populated tribal districts of Salem, Kallakurichi, and Tiruvannamalai in the Eastern Ghats. ❖ It found persistent challenges pertaining to basic infrastructure, transportation, and education. ❖ There was a need to increase both the frequency and the number of government bus services. ❖ It had also found that the State government’s free bus travel for women scheme was not available in this hilly region. ❖ There is a need to establish more schools and upgrade existing high schools into higher secondary schools to reduce dropout rates and increase enrolment. ❖ In the tribal area, there are no government or private polytechnic and arts and science colleges, except for the government ITI. ❖ Seasonal migration of entire families to other states for employment has also led to the discontinuation of their education. ❖ The study also found that over 97 per cent of households possess both a voter identity card and an Aadhaar card. ❖ Approximately 10 per cent of households have a savings account at a post office. ❖ More than 85 per cent have an account with a commercial bank. ❖ Over 60 per cent of households hold community certificates, whereas only 15 per cent have tribal identity cards. ❖ People were well aware of old and popular government welfare schemes but they were less aware of new schemes.

Current Affairs

SSLV-D3EOS-08

இஸ்ரோ நிறுவனமானது EOS-08 எனப்படும் புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (SSLV)-D3 மூலம் விண்ணில் ஏவியுள்ளது. SSLV-D3 ஆனது அதன் மூன்றாவது மற்றும் இறுதி மேம்பாட்டு விமானமாகும். SSLV ஆனது சிறிய, குறுகிய அல்லது நுண் செயற்கைக்கோள்களை (10 முதல் 500 கிலோ எடை) 500 கிலோ மீட்டர் தொலைவிலான புவி தாழ் மட்ட சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது. புவிக் கண்காணிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள EOS-08 செயற்கைக்கோள் ஆனது, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு பணிகளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது. அகச்சிவப்புக் கதிர் சூழல்களில் படங்களைப் பிடிக்கவும், புற ஊதா கதிர்வீச்சைக் கண்காணிக்கவும், மண்ணின் ஈரப்பதம் மற்றும் பெருங்கடல் காற்றையும் அளவிடக் கூடிய பல கருவிகள் இதில் அடங்கும்.

Current Affairs

SSLV-D3 - EOS-08

❖ ISRO launched the EOS-08 Earth Observation Satellite onboard the Small Satellite Launch Vehicle (SSLV)-D3 from Sriharikota. ❖ The SSLV-D3 is its third and final development flight. ❖ The SSLV is capable of launching Mini, Micro or Nanosatellites (10 to 500kg mass) into a 500 km planar orbit. ❖ The EOS-08 satellite is designed for Earth observation and carries advanced technology for various tasks such as disaster monitoring, environmental observation, and surveillance. ❖ It includes multiple payloads that can capture images in infrared, monitor UV radiation, and measure soil moisture and ocean winds.

Current Affairs

குரங்குக் காய்ச்சல் சுகாதார அவசரநிலை

உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது குரங்குக்காய்ச்சலை "சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கும் வகையிலான பொது சுகாதார அவசரநிலை" (PHEIC) ஆக அறிவித்துள்ளது. குரங்குக்காய்ச்சல் ஆனது ஆர்த்தோபாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது. 1970 ஆம் ஆண்டில் மனிதர்களில் முதன்முதலில் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது என்றாலும் அது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப் பட்டது. இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 11 நாடுகளில் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 2,100க்கும் மேற்பட்ட நோய்ப் பாதிப்புகள் மற்றும் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. + ஆப்பிரிக்காவிற்கு வெளியே வேறு நாடுகளில் குரங்குக்காய்ச்சல் கிளேட் 1 திரிபின் பாதிப்பைப் பதிவு செய்த முதல் நாடு சுவீடன் என்றும் உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது.

Current Affairs

Mpox - Health Emergency

❖ The World Health Organization (WHO) has declared mpox as a “public health emergency of international concern” (PHEIC). ❖ Mpox is caused by an orthopox virus. ❖ It was first detected in humans in 1970 and is endemic to countries in central and west Africa.  ❖ More than 2,100 laboratory-confirmed cases of the disease, as well as 13 deaths, have been reported this year in the DRC and 11 other countries. ❖ WHO also reported that Sweden was the first country outside of Africa to report a case of the mpox Clade 1 variant.

Current Affairs

சிப்காட் குடியிருப்பு வளாக வசதி

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்காக 706 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்துறைக் குடியிருப்பு வளாகத்தைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார். இந்தக் குடியிருப்பு வளாகம் இந்தியாவில் பணியாளர்களுக்கான இந்த மாதிரியான வகையில் தற்போது மிகவும் பெரியதாகும். இந்த மாநிலத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 41000 நபர்களைப் பணியில் அமர்த்தி உள்ள நிலையில் அதில் 35000 நபர்கள் பெண் பணியாளர்கள் ஆவர். தற்போது சீனாவிற்கு வெளியே அதிகமான பணியாளர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் கொண்டுள்ள நிலையில் அதில் அதிகமான அளவில் பணியாளர்களைத் தமிழ்நாட்டில் கொண்டுள்ளது. சிப்காட்- SIPCOT (தமிழ்நாடு மாநிலத் தொழில் துறை மேம்பாட்டுக் கழகம்) விரைவில் அதன் தொழிற்பேட்டைகளில் குழந்தைகள் காப்பகங்களை அமைக்க உள்ளது. இந்தியாவிலேயே 42 சதவிகிதம் என்ற அளவில் மிக அதிகமாக பெண் தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

Current Affairs

Sipcot’s industrial housing facility

❖ TN Chief minister inaugurated a 706-crore industrial housing facility for women employees of Foxconn company’s Sriperumbudur plant. ❖ The residential complex is now the largest of its kind for workers in India.  ❖ Foxconn employs 41,000 workers in the state, of which 35,000 are women. ❖ Foxconn’s largest workforce outside China is India now, and the largest number is in Tamil Nadu. ❖ Sipcot (State Industries Promotion Corporation of Tamil Nadu) would soon build creches in its industrial estates. ❖ TN has the most women factory workers in the country at 42%.