Posts

Current Affairs

தமிழ்நாட்டில் காடுகளின் நிலை 2024

20 ஆண்டு காலத் தரவுகளை ஆய்வு செய்து, தமிழகத்தில் வனப் பரப்பினை அதிகரிப்பதற்கான கொள்கை சார் முக்கியத்துவம் வழங்க வேண்டியப் பகுதிகளை மாநில திட்டக்குழு கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கை அந்த ஆணையத்தின் தமிழ்நாடு மாநில நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி தற்போது 2003 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 226 சதுர கிலோ மீட்டர் அளவிலான அடர்ந்த காடுகள், 2011-2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 348 சதுர கிலோ மீட்டர் மிதமான அடர்ந்த காடுகளின் இழப்புடன் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நம் மாநிலத்தின் வனப் பரப்பில் சென்னை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் 1.89% பங்கினை மட்டுமே கொண்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தின் வனப்பரப்பு கடந்த இருபது ஆண்டுகளில் 20.47% குறைந்து உள்ளது, அதைத் தொடர்ந்து விழுப்புரம் (13.85%), காஞ்சிபுரம் (13.03%) ஆகியவை இடம் பெற்றுள்ளன. தருமபுரி ஆனது 409 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி காடுகளை இழந்து உள்ளது. 2001 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மாநிலத்தில் 1,630 சதுர கி.மீ பரப்பளவில் மரங்களின் பரவல் பதிவாகியுள்ளது. தேசிய சதுப்புநிலங்களின் பரப்பில் தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களின் பங்கு 0.9% மட்டுமேயாகும். தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 23 சதுர கிலோ மீட்டராக இருந்த சதுப்பு நிலப் பரப்பு ஆனது 2017 ஆம் ஆண்டில் 49 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாகப் பதிவாகி உள்ளது.  ஆனால் தமிழகம் 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 4 சதுர கிலோ மீட்டர் அளவிலான சதுப்பு நிலங்களை இழந்துள்ளது.

Current Affairs

Status of Forests in Tamil Nadu 2024

❖ The State Planning Commission has identified policy focus areas to improve the forest cover in Tamil Nadu after analysing 20 years of data. ❖ It has been brought out by the Tamil Nadu State Land Use Research Board of the Commission. ❖ The Nilgiris now tops the table with a loss of 226 sq. km between 2003 and 2011 of dense forests and 348 sq. km of moderately dense forests between 2011-2021. ❖ The five - Chennai, Tiruvarur, Karur, Nagapattinam, and Perambalur districts accounts for only 1.89% of the State’s Forest cover. ❖ Sivagangai district’s forest cover came down by 20.47% in the last two decades, followed by Villupuram (13.85%), and Kancheepuram (13.03%). ❖ Dharmapuri has lost 409 sq. km of open forests. ❖ The tree cover in the State from 2001 to 2021 to an extent of 1,630 sq. km. ❖ The share of Tamil Nadu in the national mangrove cover is only 0.9%. ❖ Tamil Nadu has recorded an increase in the mangrove cover from 23 sq. km in 2001 to 49 sq. km in 2017. ❖ But the State had lost 4 sq. km of the mangroves between 2017 and 2021.

Current Affairs

ஜுவாங்கா பழங்குடியினர் வன உரிமைச் சட்டம்

ஒடிசாவில் ஜெஜ்பூரின் ஜுவாங் பழங்குடியினர் நாட்டின் ஐந்தாவது மற்றும் அந்த மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் வாழிட உரிமைகளைப் பெற்ற இரண்டாவது PVTG குழுவினராக மாறியுள்ளனர். இந்த உரிமைகளானது ஜுவாங்ஸ் அவர்களின் மூதாதையர் நிலம் மற்றும் வளங்களை தடையின்றி அணுகல் மற்றும் சட்ட அங்கீகாரத்தினை வழங்கும். பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற மரபு சார் வனவாசிகள் 2006 ஆம் ஆண்டு (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டத்தின் 3(1) (e) பிரிவின் கீழ் PVTG பிரிவினர்களுக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப் படுகின்றன. ஜெய்ப்பூரின் சுகிந்தா தொகுதிக்கு உட்பட்ட 13 கிராமங்களில் ஜூவாங் பழங்குடியினர் வசிக்கின்றனர்.

Current Affairs

Juanga Tribe - FRA Act

❖ The Juangs of Jajpur in Odisha have become the fifth Particularly Vulnerable Tribal Group (PVTG) in the country. ❖ They are the second in the state to get habitat rights under the Forest Rights Act (FRA), 2006. ❖ The rights will provide the Juangs uninterrupted access and legal recognition to their ancestral land and resources. ❖ Habitat rights are given to PVTGs under section 3(1) (e) of The Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006. ❖ Juang tribals reside in 13 villages under Sukinda block of Jajpur.

Current Affairs

ஜெனீவா உடன்படிக்கையின் 75வது ஆண்டு நிறைவு

2024 ஆம் ஆண்டானது, 1949 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஜெனீவா உடன்படிக்கைகள் என்பது போரின் போது மனிதாபிமானம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான சட்டத் தரநிலைகளை நிறுவும் சர்வதேச ஒப்பந்தங்களின் ஒரு தொகுப்பாகும். போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களைப் பாதுகாப்பதற்காக 1864 ஆம் ஆண்டில் முதல் ஜெனீவா ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் நான்கு உடன்படிக்கைகள்: முதல் உடன்படிக்கை: போரின் போது போர்க் களத்தில் காயமடைந்த மற்றும் நோய் வாய்ப்பட்ட வீரர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாவது உடன்படிக்கை: கடலில் காயமடைந்த, நோய் வாய்ப்பட்ட மற்றும் விபத்துக்குள்ளான கப்பல் படைகளின் இராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது. மூன்றாவது உடன்படிக்கை: போர்க் கைதிகளை முறையாக நடத்துவதில் கவனம் செலுத்துகிறது. 4வது உடன்படிக்கை: ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தச் செய்வதிலிருந்து நன்கு பாதுகாக்கிறது. இந்த நான்கு உடன்படிக்கைகள் ஆனது, 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சர்வதேச மற்றும் சர்வதேசம் சாராத ஆயுத மோதல்களில் பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டு கூடுதல் நெறிமுறைகள் 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டன. செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்துடன் சேர்த்து செம்படிகத்தினைக் கூடுதல் சின்னமாக அங்கீகரிப்பதற்கு 2005 ஆம் ஆண்டில் மூன்றாவது நெறிமுறை சேர்க்கப் பட்டது.

Current Affairs

75th anniversary of Geneva Conventions

❖ 2024 commemorate the 75th Anniversary of the adoption of the Geneva Conventions of 1949. ❖ The Geneva Conventions are a set of international treaties that establish legal standards for humanitarian treatment during war. ❖ The first Geneva Convention was adopted in 1864 to protect wounded soldiers on the battlefield. ❖ The Four Conventions: o 1st Convention: Protects wounded and sick soldiers on land during war. o 2nd Convention: Extends protection to wounded, sick, and shipwrecked military personnel at sea. o 3rd Convention: Focuses on the treatment of prisoners of war. o 4th Convention: Protects civilians, including those in occupied territories, from inhumane treatment. ❖ These four Conventions were adopted on 12 August 1949. ❖ Two Additional Protocols were adopted in 1977 to strengthen protections in both international and non-international armed conflicts. ❖ A third protocol was added in 2005 to recognize the Red Crystal as an additional emblem alongside the Red Cross and Red Crescent.

Current Affairs

மொத்த நிறுவப்பட்ட மின்னாற்றல் உற்பத்தித் திறன் - ஜூலை 2024

மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 40,527.24 மெகாவாட் ஆகும். நிலக்கரி மின் உற்பத்தி திறன் ஆனது 12,771.99 மெகாவாட்டாக இருந்தது. இதில், 4,320 மெகாவாட் திறன் ஆனது அரசுத் துறையிடமிருந்தும் 5,426.67 மெகாவாட், திறன் தனியார் துறையிடமிருந்தும் சுமார் 3,025.32 மெகா வாட் திறன் மத்தியத்துறையிடமிருந்தும் பெறப்படுகிறது. தமிழகத்தின் லிக்னைட் அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி திறன் 1,959.16 மெகா வாட்டாக இருந்த நிலையில் மத்திய நிறுவன சார் உற்பத்தித் திறன் 1,709.16 மெகாவாட் மற்றும் தனியார் துறை உற்பத்தித் திறன் 250 மெகாவாட் ஆக இருந்தது. எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 1,027.18 மெகாவாட் ஆகும் என்ற நிலையில் இதில் 524.08 மெகாவாட் மாநிலத் துறையிலிருந்தும், 503.10 மெகா வாட் தனியார் துறையிலிருந்தும் பெறப்படுகிறது. தனியார் துறையானது டீசல் அடிப்படையிலான மின்னாற்றல் உற்பத்தித் திறன் 211.70 மெகாவாட்டாக உள்ள நிலையில் இதில் 1,448 மெகாவாட் அணுசக்தி திறன் மத்தியத் துறையிலிருந்து பெறப்படுகிறது. மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த மரபு சார்ந்த மூலங்கள் சார்ந்த மின் நிறுவல் திறன் 17,418.03 மெகாவாட் ஆகும். மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் நிறுவப்பட்ட திறன் 23,109.21 மெகா வாட்டாக இருந்தது. இதில், 2,178.20 மெகாவாட் நீர் மின்னாற்றல்; 10,881,34 மெகாவாட் காற்று; மற்றும் 8,831.86 மெகாவாட் சூரிய சக்தி ஆற்றலாகும். மீதமுள்ள புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திறன்கள் ஆனது உயிரி எரிபொருள் மற்றும் இணை தயாரிப்பு கரும்புச் சக்கை சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் பெறப் படுகின்றன.

Current Affairs

Total installed power capacity July 2024

❖ Tamil Nadu’s total installed power capacity was 40,527.24 MW as on July 31, 2024, according to data from the Central Electricity Authority (CEA). ❖ The coal-fired power capacity stood at 12,771.99 MW. ❖ Of this, 4,320 MW was from the State sector; 5,426.67 MW, the private sector; and 3,025.32 MW, the Central sector. ❖ Tamil Nadu’s lignite-based thermal capacity stood at 1,959.16 MW, with a contribution of 1,709.16 MW from the Central sector and 250 MW from the private sector. ❖ Gas-based power plants’ capacity was 1,027.18 MW, with 524.08 MW coming from the State Sector and 503.10 MW from the private sector. ❖ The private sector accounted for diesel-based power capacity of 211.70 MW, while 1,448 MW of nuclear power capacity came from the Central sector. ❖ The overall conventional power installed capacity in the State was 17,418.03 MW. ❖ The State’s renewable energy installed capacity stood at 23,109.21 MW. ❖ Of this, 2,178.20 MW was of hydro power; 10,881.34 MW, wind; and 8,831.86 MW, solar. ❖ Biomass, and co-generation bagasse power plants, among others, accounted for the rest of the renewable energy capacity.

Current Affairs

பல்பரிமாண பாதிப்புக் குறியீடு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒரு புதிய தரவு சார்ந்த "பாதிப்பு" குறியீட்டை அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசின் கட்டமைப்பு பாதிப்புகள் மற்றும் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெகிழ் திறன் இல்லாமை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டக் குறிகாட்டிகளை உள்ளடக்கியது. இது சிறிய தீவு நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் குறைந்த வட்டி சார்ந்த நிதி உதவியினைப் பெற உதவும். "பல்பரிமாண பாதிப்புக் குறியீடு" (MVI) ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இதர மேம்பாட்டு அளவீடுகளுக்கு ஒரு இணை நிரப்பியாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, சிறிய வளர்ந்து வரும் தீவு நாடுகள் (SIDS) ஆனது தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் குறைந்த வட்டி சார் மேம்பாட்டுநிதியுதவியை அணுகுவதற்கு என்று போதுமான வறுமை நிலையைக் கொண்டிருக்க வில்லை.

Current Affairs

Multidimensional Vulnerability Index

❖ The UN General Assembly has officially launched a new data-driven vulnerability index. ❖ It incorporates indicators linked to a state's structural vulnerabilities and lack of economic, environmental and social resilience. ❖ It would help small island states and developing nations gain access to lowinterest financing. ❖ The "Multidimensional Vulnerability Index" (MVI) is set to act as a complement to GDP and other development metrics. ❖ Since the 1990s, small island developing states (SIDS) that are not poor enough in terms of GDP per capita to access low-interest development financing.