Posts

Current Affairs

மீப்பெரு நீல நிலவு 2024

இது ஒரு மீப்பெரு மற்றும் நீல நிலவு ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையாக நிகழ்ந்த ஓர் அசாதாரண வான நிகழ்வாகும். 1979 ஆம் ஆண்டு ரிச்சர்ட் நோல்லே என்பவரால் மீப்பெரு நிலவு (சூப்பர் மூன்) என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும் அண்மை நிலை எனப்படும் பகுதியினை ஒரு முழு நிலவு அடையும் போது மீப்பெரு நிலவு ஏற்படுகிறது. இந்த அண்மை நிலையானது நிலவினை வழக்கத்தை விட மிகவும் பெரிதாகவும் மிகப் பிரகாசமாகவும் காட்டுகிறது. " நீல நிலவு" என்ற சொல் வரலாற்று ரீதியாக நான்கு முழு நிலவுகளைக் கொண்ட ஒரு பருவத்தில் மூன்றாவதாக ஏற்படும் முழு நிலவைக் குறிக்கிறது என்ற நிலையில் இந்த நிகழ்வு ஒப்பீட்டளவில் அரிதாகாகவே நிகழ்கிறது. இந்த சொல்லின் பயன்பாட்டிற்கான ஒரு ஆரம்ப காலப் பதிவு 1528 ஆம் ஆண்டிற்கு முந்தையதாகும். முழு நிலவுகளில் சுமார் 25% மட்டுமே மீப்பெரு நிலவுகள் ஆகும் என்ற ஒரு நிலையில் தோராயமாக 3% நீல நிலவுகள் ஆகும்.அடுத்த மீப்பெரு நீல நிலவு நிகழ்வுகள் ஆனது 2037 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Current Affairs

Super Blue Moon 2024

❖ It is featured as a unique combination of a supermoon and a Blue Moon, making it an extraordinary celestial event. ❖ The term supermoon was introduced by astrologer Richard Nolle in 1979. ❖ A supermoon occurs when a full or new Moon coincides with the Moon’s closest approach to Earth, known as perigee.  ❖ This proximity makes the Moon appear larger and brighter than usual. ❖ The term “Blue Moon” has historically referred to the third full Moon in a season that has four full Moons, a relatively rare occurrence. ❖ The earliest recorded use of the term dates back to 1528. ❖ Only about 25% of full Moons are supermoons, and approximately 3% are Blue Moons. ❖ The next super Blue Moons are expected in January and March 2037.

Current Affairs

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் AYUSH

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் AYUSH திட்டப் பலன்களையும் சேர்க்கும் பணியில் மத்திய அரசாந்து செயல்பட்டு வருகிறது. AYUSH என்பது ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்பதனைக் குறிக்கிறது. AB PM-JAY ஆனது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் சுகாதார காப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொது சுகாதாரம் என்பது ஒரு மாநிலப் பட்டியலில் உள்ள பிரிவு, எனவே AYUSH சிகிச்சை கிடைக்கப் பெறுவதனை உறுதி செய்யும் முதன்மைப் பொறுப்பு மாநில / ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களிடமே உள்ளது.

Current Affairs

AYUSH in Ayushman Bharat scheme

❖ The Union Government is working on the inclusion of an AYUSH package under the Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY). ❖ The term AYUSH stood for Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homeopathy. ❖ AB PM-JAY aims to provide the health coverage of ₹5 lakh per family per year for secondary and tertiary care hospitalisation. ❖ But public health is a state subject and the primary responsibility to ensure the availability of AYUSH treatment lies with State/UT governments.

Current Affairs

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024

முதல்வர் அவர்கள் 51,157 கோடி ரூபாய் தொகுப்பு முதலீட்டில் 28 தொழில்துறைத் திட்டங்களுக்கான அடிக்கல்லினை நாட்டினார். 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 கூடுதல் திட்டங்களுடன் மொத்தம் 47 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த முன்னெடுப்புகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட செம்கார்ப் நிறுவனமானது, தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி அலகுகளை நிறுவுவதற்கு 36,238 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி நிறுவனமான கிரீன்கோ குழுமமானது 20,114 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு நீரேற்ற நீர்த்தேக்க ஆற்றல் சேமிப்புத் திட்டங்களையும் அமைக்க உள்ளது. மாநில அரசானது TIDCO மற்றும் TATA Technologies ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் கோயம்புத்தூரில் தமிழ்நாடு பொறியியல் மற்றும் புத்தாக்க மையத்தை (TN ENGINE) நிறுவ உள்ளது.

Current Affairs

Tamil Nadu investment conclave 2024

❖ Chief Minister laid the foundation stone for 28 industrial projects with a collective investment of Rs 51,157 crore. ❖ He also inaugurated 19 additional projects with an investment of Rs 17,616 crore, totaling 47 projects. ❖ These initiatives are expected to generate the employment for over one lakh individuals. ❖ The Singapore-headquartered Sembcorp will invest Rs 36,238 crore for the establishment of a green hydrogen/green ammonia manufacturing unit in Tuticorin district. ❖ Renewable energy company Greenko Group will set up pumped storage projects across Tamil Nadu with an investment of Rs 20,114 crore. ❖ The government in association with TIDCO and TATA Technologies with establish the Tamil Nadu Engineering and Innovations Centre (TN ENGINE) at Coimbatore with an investment of Rs 400 crore.

Current Affairs

அதி இரசாயனத் தன்மை கொண்ட இரசாயனங்களின் தோற்றுரு

அதி இரசாயனத் தன்மை கொண்ட (அழிக்க முடியாத) இரசாயனங்களின் தோற்றம் மற்றும் அவை காணப்படும் இடங்களைக் கண்டறிவதற்காக அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முறையைக் கண்டறிந்துள்ளனர். இந்த இரசாயனங்கள் அறிவியல் ரீதியாக பெர் மற்றும் பாலிஃப்ளூரோ அல்கைல் பொருட்கள் (PFAS) என அழைக்கப் படுகின்றன. நீர் எதிர்ப்புத் திறன் கொண்ட, வெப்ப எதிர்ப்புத் திறன் கொண்ட சலவைப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் ஒட்டாதத் தன்மை தொழில்நுட்பங்கள் போன்ற பயன்பாடுகளில் அவை பொதுவாகப் பயனுள்ளதாக இருக்கும். அவை சுற்றுச்சூழலில் தங்கி மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் உடல் ஆரோக்கியத்தையும் மிகவும் மோசமாகப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு வழி வகுக்கின்றன.

Current Affairs

Origin of forever chemicals

❖ American researchers have found a method to be able to trace the origin and the destination of forever chemicals.  ❖ These chemicals that are scientifically known as per-and polyfluoroalkyl substances (PFAS). ❖ They are generally useful in applications such as water-proofing, heat resistance, detergents, food packaging and non-stick technologies. ❖ They are known to stay in the environment virtually forever and contribute to environmental degradation which adversely impacts the health of all organisms including human beings.

Current Affairs

பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுப் பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டம்

மத்தியத் துறைமுகக் கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் ஆனது, பசுமை நுட்பம் சார் இழுவைப் படகுப் பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டத்திற்கான (GTTP) சீர் தர இயக்கச் செயல்முறையினை (SOP) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ' பஞ்ச் கர்ம சங்கல்ப்' திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய முயற்சியாக பசுமை நுட்பம் சார் இழுவைப் படகு பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டம் (GTTP) தொடங்கப்பட்டது. GTTP ஆனது இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் இயங்கும் வழக்கமான எரி பொருள் அடிப்படையிலான துறைமுக இழுவைப் படகுகளை அகற்றி, தூய்மையான மற்றும் நிலையான மாற்று எரிபொருளால் இயக்கப்படும் பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுகளை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. GTTP திட்டத்தின் முதல் கட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டு 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்தக் கட்டத்தில் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம், தீன்தயாள் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் மற்றும் V.O. சிதம்பரனார் துறைமுகஆணையம் ஆகிய நான்கு முக்கியத் துறைமுகங்கள் ஆனது தலா இரண்டு பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுகளையாவது கொள்முதல் செய்யும் அல்லது அதன் உரிமத்தினைப் பெறும்.

Current Affairs

Green Tug Transition Program

❖ The Union Ministry of Port Shipping and Waterways has officially launched the Standard Operating Procedure (SOP) for Green Tug Transition Program (GTTP). ❖ The Green Tug Transition Program (GTTP) as a key initiative under the ‘Panch Karma Sankalp’. ❖ The GTTP is designed to phase out conventional fuel-based harbour tugs operating in Indian Major Ports and replace them with green tugs powered by cleaner and more sustainable alternate fuels. ❖ Phase 1 of the GTTP will begin on October 1, 2024, and continue until December 31, 2027. ❖ During this phase, four Major Ports—Jawaharlal Nehru Port Authority, Deendayal Port Authority, Paradip Port Authority, and V.O. Chidambaranar Port Authority—will procure or charter at least two green tugs each.