Posts

Current Affairs

உலக விண்வெளி வாரம் அக்டோபர் 04/10

இது விண்வெளி ஆய்வின் பல நன்மைகளை முன்னிலைப்படுத்துவதோடு விண்வெளி நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. * இது பின்வரும் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்களை நினைவு கூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது: 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் ஏவப்பட்ட நிகழ்வு மற்றும் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அக்டோபர் 04 ஆம் தேதியன்று சோவியத் ஒன்றியத்தினால் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது என்பதோடு இதுவே சுற்றுப்பாதையில் மனிதகுலம் உருவாக்கிய முதல் செயற்கையான செயற்கைக் கோள் நிலை நிறுத்தப் பட்டதைக் குறித்தது. விண்வெளி ஒப்பந்தம் ஆனது சர்வதேச விண்வெளி சட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவதோடு, விண்வெளியில் அமைதியான பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளஊக்குவிக்கிறது.   இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Space and Climate Change" என்பதாகும்.

Current Affairs

World Space Week 2024 - October 04/10

❖ It wis highlighting the benefits of space exploration and promoting international cooperation in space activities. ❖ It is established by the United Nations to commemorates two significant milestones: o The launch of Sputnik 1 on October 4, 1957, and o The signing of the Outer Space Treaty on October 10, 1967. ❖ The launch of Sputnik 1 by the Soviet Union on October 4 marked humanity's first artificial satellite in orbit. ❖ The Outer Space Treaty establishing a framework for international space law and promoting peaceful exploration of space. ❖ This year’s theme is “Space and Climate Change.”

Current Affairs

புதிய செம்மொழிகள்

மராட்டியம், வங்காளம், பாலி, பிராகிருதம் மற்றும் அசாமியம் ஆகிய புதிய ஐந்து மொழிகளுக்கும் 'செம்மொழி' அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், இந்த அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கையானது ஆறில் இருந்து 11 ஆக (இரு மடங்காக) உயரும். இதற்கு முன்னதாக தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் இந்த அந்தஸ்தினைப் பெற்றுள்ளன. 2004 ஆம் ஆண்டில் தமிழுக்கு தான் முதன்முதலில் செம்மொழி அந்தஸ்து வழங்கப் பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டில் ஒடியா மொழிக்குத் தான் கடைசியாக செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.  புதியதாக செம்மொழி அந்தஸ்து பெறும் இந்த மொழிகளுக்கென தேசிய விருதுகள், பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பிரிவுகள் (இருக்கைகள்) மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை உரிய காலத்தில் அமைக்கப்படும்.

Current Affairs

New Classical Languages 2024

❖ The Union Cabinet approved giving the status of 'classical language' to five more languages - Marathi, Bengali, Pali, Prakrit and Assamese. ❖ With this cabinet decision, the number of languages that have the status will nearly double from six to 11. ❖ The languages that had the tag earlier were Tamil, Sanskrit, Telugu, Kannada, Malayalam and Odia ❖ Tamil was granted the status in 2004 and the last language to get it was Odia, in 2014. ❖ The new classical languages will also have the national awards, Chairs in universities, and centres for promotion set up for them in due course.

Current Affairs

2024 ஆம் ஆண்டில் வண்ணத்துப் பூச்சிகளின் இடம் பெயர்வு

தமிழ்நாடு மாநிலத்தில், செப்டம்பர் மாதத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி டானைனே துணைக் குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் பெரிய அளவில் இடம் பெயர்ந்துள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அருகில் உள்ள பல்வேறு மலைத் தொடர்களை நோக்கி அவை இடம் பெயர்கின்றன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பொதுவாக 'வரியன் மற்றும் கருப்பன்' என்று அழைக்கப் படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் சமவெளிகளை நோக்கி இடம் பெயர்கின்றன. இந்த இடம் பெயர்வு ஆனது தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் நிகழும். 

Current Affairs

Butterfly migration in 2024

❖ Tamil Nadu has witnessed large-scale migration of butterflies belonging to the Danainae sub-family from the Eastern Ghats and plains towards the Western Ghats during September. ❖ They migrate from the Eastern Ghats and plains towards various nearest hill ranges of the Western Ghats before the start of northeast monsoon. ❖ During April and May, these butterflies, generally called ‘tigers and crows’ migrate from the Western Ghat hill ranges towards the Eastern Ghats and plains of Tamil Nadu. ❖ This is happened before the onset of the southwest monsoon.

Current Affairs

புதிய FAST தொகுப்பு ஆய்வகம்

ஐந்நூறு மீட்டர் கொண்ட துணை கோள வடிவ தொலைநோக்கி (FAST) ஆனது, தென் மேற்கு சீனாவின் குய்சோவில் உள்ள கார்ஸ்ட் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது ஒவ்வொன்றும் 131 அடி (40 மீட்டர்) விட்டம் கொண்ட 24 புதிய நகரக் கூடிய ரேடியோ தொலைநோக்கிகள் இரண்டாவது கட்டமாக சேர்க்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கத்திற்கு FAST தொகுப்பு ஆய்வக அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொலைநோக்கியைச் சுற்றி 3-மைல் (5 கிலோமீட்டர்) சுற்றளவில் இருக்கும் "ஒலி எழுப்பாத" மின்காந்த சூழலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Current Affairs

New FAST Core Array

❖ The Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) is situated in karst region in Guizhou, southwest China. ❖ Now a second phase will add 24 new moveable radio telescopes, each with a diameter of 131 feet (40 meters). ❖ This expansion is named the FAST Core Array. ❖ It aims to make use of the "quiet" electromagnetic environment that exists within a 3-mile (5 kilometers) radius around the telescope

Current Affairs

அமெரிக்க நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான முன்னணி மூலங்கள்

உலகின் சர்வதேச புலம்பெயர்ந்தோரில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் அமெரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டில் பிறந்த வந்த நபர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 47.8 மில்லியனை எட்டியது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட 1.6 மில்லியன் அதிகரித்துள்ளது. மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவில் வசிக்கும் புலம் பெயர்ந்தோரின் பிறப்பிடங்களில் முதன்மையானவையாகும். அமெரிக்காவில் 10.6 மில்லியன் மெக்சிகன்கள் வாழ்வதுடன் மெக்சிகோ மிகப்பெரிய புலம் பெயர்ந்தோர் பிறப்பிட நாடாக உள்ளது என்பதோடு 6% இந்தியர்களும், அதைத் தொடர்ந்து 5% சீனர்களும் அங்கு வாழ்கின்றனர்.

Current Affairs

Top Immigrants source of USA

❖ The United States of America is home to nearly one-fifth of world’s international migrants. ❖ The foreign-born population in the US reached a record 47.8 million in 2023, increasing by 1.6 million from the previous year. ❖ Mexico, China, and India are among the top birthplaces for immigrants residing in the US. ❖ Mexico remains the largest single country of origin, with 10.6 million Mexicans living in the US, immigrants from India make up 6%, followed by China with 5%.