Posts

Current Affairs

இராஜஸ்தானில் சிறுஞ்சில்லை பறவை

பறவைக் கண்காணிப்பாளர்கள் இராஜஸ்தானில் இதுவரை கண்டிராத சிறுஞ்சில்லை எனும் பறவையினைக் கண்டுள்ளனர். லிட்டில் பன்டிங் எனும் சிறுஞ்சில்லை பறவையானது, பொதுவாக வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கு சீனாவில் குளிர்காலங்களில் வலசை போகும் ஒரு சிறிய பறவை ஆகும். இது வடகிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவின் டைகா ஆகிய பகுதிகளில் இனப் பெருக்கம் செய்கிறது.

Current Affairs

Little Bunting in Rajasthan

❖ Birdwatcher spotted a little bunting, a bird never seen before in Rajasthan. ❖ Little bunting, a small migratory bird, typically winters in the northeast India and southern China. ❖ It breeds in the taiga regions of northeast Europe and northern Asia.

Current Affairs

காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான UNGA தீர்மானம்

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக் கோரும் தீர்மானங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்மானமானது இந்தியா உட்பட 158 நாடுகளின் ஆதரவு வாக்குகளுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்ற நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதிலிருந்து 13 நாடுகள் விலகிக் கொண்டதோடு ஒன்பது நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான அமைப்பின் (UNRWA) பணிக்கு இது ஆதரவு தெரிவித்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தத் தீர்மானம் மீது வாக்களிப்பதில் இருந்து விலகிய ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியன முதல்முறையாக காசா போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

Current Affairs

UNGA Resolution for Ceasefire in Gaza

❖ The United Nations (UN) General Assembly overwhelmingly approved resolutions demanding an immediate ceasefire in Gaza. ❖ It was adopted with 158 votes in favour including India and got nine votes against with 13 abstentions. ❖ It expressed support for the work of the UN’s agency for Palestinian refugees (UNRWA). ❖ For the first time, Germany and Italy, who abstained last December, have voted in favour of a Gaza ceasefire.

Current Affairs

விவசாயிகளுக்குப் பிணையமில்லாத கடன் வரம்பு

இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்திய நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு கடன் வாங்குபவருக்கு 2 லட்சம் வரையிலான வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்களுக்கான பிணைய மற்றும் அதன் வரம்பு தேவைகளை தள்ளுபடி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. கடன் வாங்குபவர்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.6 லட்சம் ரூபாய் என்ற கடன் வரம்பு ஆனது, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்ற நிலையில் இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் பெரும் நடவடிக்கையானது சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களாக உள்ள 86% விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும்.

Current Affairs

Collateral-Free Loan Limit for Farmers

❖ RBI instructs banks nationwide to waive collateral and margin requirements for agricultural and allied activity loans up to ₹2 lakh per borrower. ❖ The existing loan limit of ₹1.6 lakh per borrower has been raised to ₹2 lakh, effective from January 1, 2025. ❖ This measure will significantly benefit over 86% of the farmers who are small and marginal landholders.

Current Affairs

இந்தியாவின் அணு சக்தி உற்பத்தித் திறன்

2014 ஆம் ஆண்டில் 4,780 மெகாவாட்டாக இருந்த இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி திறன் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்து 2024 ஆம் ஆண்டில் 8,180 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அணுசக்தி உற்பத்தித் திறன் ஆனது, 2031-32 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர்ந்து 22,480 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பின் மீதான் திருத்தம் ஆனது, அணுமின் நிலையங்களில் இருந்து அது அமைந்துள்ள மாநிலங்களுக்கான மின்சாரப் பங்கினை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதில் 35 சதவீதம் ஆனது அண்டை மாநிலங்களுக்கும், 15 சதவீதம் ஆனது தேசிய மின் கட்டமைப்பிற்கும் வழங்கப்படும்.

Current Affairs

India’s Atomic Power Capacity 2024

❖ India's nuclear power generation capacity has nearly doubled in the last 10 years from 4,780 MW in 2014 to 8,180 MW in 2024. ❖ The capacity is projected to triple to 22,480 MW by 2031-32. ❖ The revision of India's power distribution framework has increased the home state's share of electricity from atomic plants to 50 per cent. ❖ 35 per cent is given to neighbouring states, and 15 per cent to the national grid.

Current Affairs

குறைந்தபட்ச உள்நாட்டு மின்சாரச் செலவினம்

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சராசரியாக 100 அலகு மின்சார 113 ரூபாயாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற மாநிலங்களில் மின்சாரச் செலவினம் அதிகமாக - மகாராஷ்டிரா மாநிலத்தில் 643 ரூபாய், இராஜஸ்தான் மாநிலத்தில் 833 ரூபாய், மத்தியப் பிரதேசத்தில் 618 ரூபாய், உத்தரப் பிரதேசத்தில் 689 ரூபாய், மேற்கு வங்காளத்தில் 654 ரூபாய், மற்றும் ஒடிசாவில் 426 ரூபாய் ஆக உள்ளது. தமிழக விவசாயிகள், முழு மானியத்துடன் கூடிய 2 லட்சம் வேளாண் பயன்பாட்டு நீரேற்றிகள் உள்ளிட்ட இலவச மின்சார வசதிகளைப் பெறுகின்றனர்.இங்கு விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 அலகு இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 300 அலகு இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது.  கூடுதலாக, வீடுகளுக்கு 100 அலகு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

Current Affairs

Lowest Domestic Electricity

❖ The average cost of electricity in Tamil Nadu, as of March 2023, stands at Rs 113 for 100 units. ❖ In comparison, the cost is much higher in other states - Rs 643 in Maharashtra, Rs 833 in Rajasthan, Rs 618 in Madhya Pradesh, Rs 689 in Uttar Pradesh, Rs 654 in West Bengal, and Rs 426 in Odisha. ❖ Farmers in Tamil Nadu receive free electricity, including 2 lakhs agricultural pumpsets which are fully subsidised. ❖ The Powerloom weavers benefit from 1,000 free units of power, while handloom weavers are provided 300 free units every two months. ❖ Additionally, domestic consumers enjoy 100 free units of electricity.