Posts

Current Affairs

ஒவிட்ராப் பொறிகள் - கர்நாடகா

கொசுக்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் ஒவிட்ராப் (கொசுக்கள் முட்டையிடும் அமைப்புகளை ஒத்தப் பொறிகள்) பொறிகளைக் கர்நாடக அரசு நிறுவத் தொடங்கி உள்ளது. வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் நிறுவப்பட்டுள்ள, இந்தப் பொறிகளின் உள்ளே தெளிக்கப் படும் இரசாயனமானது கொசுக்களைப் பொறிக்குள் கவர்ந்து இழுக்கிறது. ஓவிட்ராப் பொறிகள் ஆனது கொசுக்களை, குறிப்பாக சில கொள்கலன்களில் இனப் பெருக்கம் செய்யும் ஏடிஸ் இஜிப்தி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் போன்ற சில இனங்களைக் கவர்ந்து இழுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புச் சாதனங்களாகும். இந்தியா உட்பட பல நாடுகள் கொசுக்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்தக் பொறிகளைப் பயன்படுத்துகின்றன.

Current Affairs

Ovitrap Baskets – Karnataka

❖ Karnataka started to installing Ovitrap baskets that attract mosquitoes. ❖ These baskets are installed 20 feet from houses, and a chemical sprayed inside attracts mosquitoes, luring them into the basket. ❖ Ovitrap baskets are specialised devices designed to attract and trap mosquitoes, particularly species that breed in containers, such as Aedes aegypti and Aedes albopictus. ❖ Several countries including India have implemented the use of this baskets for monitoring and controlling mosquito populations

Current Affairs

நான் முதல்வன் - உயர்வுக்குப் படி திட்டம்

தமிழக மாநில அரசானது, பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் மாநில வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் (உயர்வுக்குப் படி) கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாநிலத் திட்ட இயக்குநரகத்தினால் இந்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில் உள்ள பொறியியல், பலதொழில் நுணுக்கப் பயிற்சி, கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளில் உயர்கல்வி பயிலப் பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கல்லூரிகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாக மாணாக்கர் சேர்க்கையும் மேற்கொள்ளப்படும். 2022-23 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 3,97,809 மாணாக்கர்களில், 2,39,270 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் மற்றும் 45,440 மாணாக்கர்கள் உயர்கல்வியினைப் பெற விண்ணப்பித்துள்ளனர். சுமார் 1,13,099 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை அல்லது பதிவு செய்ததற்கான போதுமான விவரங்களை வழங்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 3,31,540 மாணாக்கர்களில், 1,97,510 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 1,34,030 மாணாக்கர்கள் விண்ணப்பிக்கவில்லை அல்லது விண்ணப்பம் குறித்த போதுமான விவரங்களை வழங்கவில்லை.

Current Affairs

Naan Mudhalvan - Uyarvukku Padi program

❖ The Tamilnadu State government is conducting special camps across the State for the class XII students to ensure that they clear the board exam and pursue higher education. ❖ The special camps will be organised by the School State Project Directorate in each district under the Naan Mudhalvan’s scheme (Uyarvukku Padi). ❖ The special camp will be organised for the students, who failed to register for pursuing higher education in Engineering, Polytechnic, Arts, Science and Vocational colleges in the State. ❖ Spot admissions will also be made for the students based on the vacancies in the colleges. ❖ Of 3,97,809 Class XII students during 2022-23, 2,39,270 students have enrolled in higher education and 45,440 students have applied for higher education. ❖ 1,13,099 students have either not applied or not provided sufficient details of enrolment. ❖ In 2023-2024, of the 3,31,540 Class XII students, 1,97,510 students have applied for higher education. ❖ 1,34,030 students have either not applied or not provided sufficient details of application.

Current Affairs

பூமியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தெற்கு ஈரானில் உள்ள ஒரு கிராமத்தில், 97°F (36.1°C) உறை வெப்பநிலையுடன் 82.2°C (180°F) வெப்பநிலை என்ற பூமியின் மிக உயர்ந்த வெப்ப நிலை பதிவாகியது. 102°F (38.9°C) என்ற காற்றின் வெப்பநிலை மற்றும் 85% ஈரப்பதம் ஆகியவற்றின் கலப்பு மூலம் இந்த அதிகபட்ச புள்ளிவிவரங்கள் உருவாக்கப்பட்டன. சவுதி அரேபியாவின் தஹ்ரானில் உள்ள வானிலை நிலையம் சமீபத்திய நாட்களில் 93°F (33.9 ° C) வரையிலான உறை வெப்ப நிலையினைப் பதிவு செய்துள்ளது. இது தற்போது உலகளவில் அதிகபட்சமாக 95°F (35°C) என்ற உறை வெப்பநிலையினைக் கொண்டுள்ளது.

Current Affairs

Earth's highest ever heat index

❖ A village in southern Iran has recorded the earth's highest ever heat index at 82.2°C (180°F) with a dew point of 97°F (36.1°C). ❖ The extreme figures were generated through a combination of an air temperature of 102°F (38.9°C) and 85% relative humidity. ❖ The weather station in Dhahran, Saudi Arabia has recorded a dew point as high as 93°F (33.9°C) in recent days. ❖ It currently holds the world record dew point of 95°F (35°C).

Current Affairs

இந்தியாவின் தங்க நுகர்வு குறித்த கணிப்பு

உலக தங்கச் சபையானது (WGC) 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க நுகர்வு ஆனது 750 டன்னிலிருந்து 850 டன்னாக உயரும் என்று கணித்துள்ளது. ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டில், இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 10% அதிகரித்து 230 டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இறக்குமதி வரி காரணமாக ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் தங்கத்தின் தேவை ஆண்டிற்கு 5% குறைந்து 158.1 டன்னாக இருந்தது.  ஜூலை 23 ஆம் தேதியன்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6% ஆக அரசாங்கம் குறைத்ததன் மூலம், தங்கத்தின் தேவை விரைவாக உயர்ந்தது.

Current Affairs

India’s Gold Consumption Forecast 2024

❖ The World Gold Council (WGC) has raised its projection for India's gold consumption in 2024 to 850 tonnes from 750 tonnes. ❖ In the July-September quarter, the gold demand in India is expected to be 230 tonnes, up 10% year-on-year. ❖ The Gold demand in the April-June quarter fell 5% year-on-year to 158.1 tonnes owing to high import duty. ❖ With the government reducing the importing duty on gold to 6% from 15% in the Union budget on July 23, demand saw a quick uptick

Current Affairs

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்

சென்னையின் சாலைகளில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்ட்டர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்போட்டி நாட்டின் முதலாவது இரவு நேரப் பந்தயமாகும். தெற்காசியாவில் பார்முலா 4 சாலைப் பந்தயத்தை இரவு நேரத்தில் நடத்திய முதல் நகரம் சென்னையாகும். தெற்காசியாவிலேயே மிக நீளமான சாலைச் சுற்றுவட்டத்தில் இந்தக் கார் பந்தயம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். உலகின் முதல் பாலின-நடுநிலை பேணப்பட்ட கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியான இது மோட்டார் ஸ்போர்ட் (வாகனப் பந்தயம்) உள்ளடக்கம் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கிறது.

Current Affairs

Chennai Formula 4 car race

❖ Australian Hugh Barter made a history as the first winner of the Formula 4 race held around the streets of Chennai. ❖ This is the country's first-ever night racing event, in Chennai. ❖ Chennai is the first city in South Asia to hosted a Formula 4 street race at night. ❖ It is noteworthy that the race was held on the longest street circuit in South Asia. ❖ This is the world’s first gender-neutral racing championship, promoting inclusivity and competitive spirit in motorsports.