Posts

Current Affairs

காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான புதிய கொள்கை 2024

காற்றாலை மின் திட்டங்களுக்கான 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் கால நீட்டிப்புக் கொள்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களை பழைய காற்றாலை விசையாழிகளை மாற்ற ஊக்குவிப்பது மற்றும் காற்றாலை ஆற்றல் வளங்களின் உகந்த முறையிலான பயன்பாட்டை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. * 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு மாநிலமானது 22,754 மெகாவாட் திறன் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டில், சுமார் 55 கிலோவாட் முதல் 600 கிலோவாட் வரையிலான இயந்திர உற்பத்தித் திறன்களுடன் தமிழ்நாட்டில் காற்றாலை மின்னாற்றல் உற்பத்தியானது தொடங்கப் பட்டது.

Current Affairs

New Policy for Wind Power Projects 2024

❖ The Tamil Nadu Repowering, Refurbishment & Life Extension Policy for Wind Power Projects – 2024 has been released recently. ❖ It aims to encourage developers to replace old wind turbines and promote optimum utilisation of wind energy resources. ❖ TN having a substantial renewable energy generation capacity of 22,754 MW as on 30 June, 2024. ❖ The Wind energy generation in Tamil Nadu commenced in 1986 with machine capacities ranging from 55 kW to 600 kW.

Current Affairs

7வது அனுபவ் விருதுகள் 2024

ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் அயராத மிகப் பெரும் பங்களிப்பை முன்னிலைப் படுத்துவதற்கும் அதனை அங்கீகரிப்பதற்குமான ஒரு தளமாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'அனுபவ்' இணைய தளம் தொடங்கப்பட்டது. இந்த புதுமையான திட்டம் ஆனது, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களை அவர்களின் பணி ஆண்டுகளில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை ஆவணப் படுத்த ஊக்குவிக்கிறது. 7வது விருது வழங்கும் விழாவில், இதுவரையில் இல்லாத அளவுக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் 33% ஆக உள்ளது என்பது நிர்வாகத்தில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிக்கிறது. 5 அனுபவ் விருதுகள் மற்றும் 10 தேர்வாளர்கள் சான்றிதழ்களை உள்ளடக்கிய இந்த விருதுகளானது பல்வேறு பிரிவுகளில் சிறந்தப் பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு வழங்கப்பட்டன.

Current Affairs

7th Anubhav Awards 2024

❖ The ‘Anubhav’ portal was launched in March 2015 as a platform to highlight and recognise the tireless contributions of retiring government officials. ❖ This innovative project encourages the retiring civil servants to document their experiences and insights gained during their years of service. ❖ The 7th Awards Ceremony has highest-ever representation of women awardees at 33%, reflecting their growing role in governance. ❖ The awards, comprising 5 Anubhav Awards and 10 Jury Certificates, recognised outstanding contributions across various categories.

Current Affairs

இந்திய ரிசர்வ் வங்கியின் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகள்

5வது உலக நிதி சார் தொழில்நுட்பத் திருவிழாவானது (2024) மும்பை நகரத்தில் நடைபெற்றது. "Blueprint for the Next Decade of Finance: Responsible Al | Inclusive | Resilient" என்பதாகும். இந்த நிகழ்வின் போது, இந்தியாவின் நிதியக் கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு அவசியமான பின்வரும் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டுக் காட்டினார். அவை நிதி உள்ளடக்கம் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் (DPI) இணைய வெளிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் நிலையான நிதி வழங்கீட்டினை மேம்படுத்துதல் நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

Current Affairs

RBI’s Five Strategic Priorities

❖ The 5th edition of Global Fintech Festival 2024 was held in in Mumbai. ❖ Theme of the event is “Blueprint for the Next Decade of Finance: Responsible AI | Inclusive | Resilient”. ❖ During the event, RBI Governor outlined five strategic priorities that are essential for shaping the future of India's financial landscape. o Financial Inclusion o Enhancing Digital Public Infrastructure (DPI) o Strengthening Cybersecurity o Promoting Sustainable Finance o Reinforcing Financial Infrastructure

Current Affairs

இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB)

இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கியானது செப்டம்பர் 01 ஆம் தேதியன்று அதன் 7வது துவக்க தினத்தைக் கொண்டாடியது. இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ராஞ்சி (ஜார்க்கண்ட்) மற்றும் ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) ஆகிய இடங்களில் ஒரு சோதனைத் திட்டமாகத் தொடங்கப் பட்டது. IPPB ஆனது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. IPPB ஆனது பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் கீழான பயனாளிகளுக்கு நேரடிப் பலன் பரிமாற்றங்களில் (DBT) 45,000 கோடி ரூபாய்க்கு மேலான பண வழங்கீட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையானது கடந்த ஏழு ஆண்டுகளில் 161,000 அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் 1,90,000 அஞ்சல் ஊழியர்களின் விரிவான வலையமைப்பைக் கொண்டுள்ளது.

Current Affairs

India Post Payments Bank (IPPB)

❖ India Post Payments Bank celebrates 7th Foundation Day on September 01. ❖ It was first started as a pilot project on January 30, 2017 in Ranchi (Jharkhand) and Raipur (Chhattisgarh). ❖ IPPB was launched on September 1, 2018. ❖ IPPB has successfully disbursed over Rs 45,000 crore in Direct Benefit Transfers (DBT) to beneficiaries under various government schemes.   ❖ India Post have extensive network of over 161,000 post offices and 1,90,000 postal employees during the last seven years.

Current Affairs

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 (திருத்தப் பட்டது)

தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ், இருவரும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர் - பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவு. இந்திய பாரா ஷட்டில்லர்களான துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவு. பூப்பந்தாட்டப் போட்டியில் ஒரு பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்ணாக துளசி உருவெடுத்துள்ளார். இந்தியப் பூப்பந்தாட்ட வீரரான உத்தரப் பிரதேசத்தின் சுஹாஸ் யதிராஜ் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் கலப்பு பிரிவு வில்வித்தைப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் வெண்கலம் வென்றனர். * ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் போட்டியில் அரியானாவின் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் வட்டு எறிதல் F56 போட்டியில் இந்தியாவின் அரியானாவின் யோகேஷ் கதுனியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T47 இறுதிப் போட்டியில் இமாச்சலப் பிரதேசத்தின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Current Affairs

Paris Paralympics 2024 (updates)

❖ The Indian para-shuttlers, Thulasimathi Murugesan and Manisha Ramadass, both from Tamilnadu, secured silver and bronze medals respectively in the women's singles SU5 category. ❖ Thulasi became the first Indian woman to win a medal in badminton. ❖ Indian para-shuttler Suhas Yathiraj of Uttar Pradesh won his second successive Paralympic silver. ❖ Sheetal Devi and Rakesh Kumar, both from Jammu and Kashmir, won bronze in the mixed compound archery event at the Paris Paralympics 2024. ❖ Nitesh Kumar of Haryana clinched the gold medal in the Men's Singles SL3 badminton event. ❖ India’s Yogesh Kathuniya of Haryana won second successive silver medal in Men’s Discus Throw F56 at the Paralympics. ❖ Nishad Kumar of Himachal Pradesh won the silver medal in men’s high jump T47 final.