Posts

Current Affairs

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024 - பதக்கப் பட்டியல்

ஜூடோ வீரரான கபில் பர்மார் (மத்தியப் பிரதேசம்), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்று வரலாறு படைத்து உள்ளார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் (உத்தரப் பிரதேசம்) 2.08 மீ உயரம் தாண்டி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.  ஆடவருக்கான குண்டெறிதல் F57 பிரிவில் இந்திய வீராங்கனை ஹொகாடோ ஹோடோஜெ செமா (நாகாலாந்து) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீனா (220), கிரேட் பிரிட்டன் (124), அமெரிக்கா (105), பிரேசில் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இப்பதக்கப் பட்டியலில் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 ஆக நிறைவானது.  இது நாட்டிற்கு அதிக பதக்கங்களை பெற்றுத் தந்த போட்டி பங்கேற்பாக அமைந்தது. * இதில் தடகளப் போட்டிகளில் 17 பதக்கங்கள் பெறப்பட்டன, அவற்றில் நான்கு தங்கப் பதக்கங்கள் ஆகும். மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாடு) மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கமும், 2020 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 2024 பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது.

Current Affairs

Paris Paralympics 2024 - Medal tally

❖ Judoka Kapil Parmar (Madhya Pradesh) created history by winning India's firstever medal in judo at a Paralympic Games. ❖ Praveen Kumar (Uttar Pradesh) wins gold in the men's high jump T64 final with a record-breaking jump of 2.08m. ❖ Indian athlete Hokato Hotozhe Sema (Nagaland) has won the bronze medal in the men's shot put F57 class. ❖ China (220), Great Britain (124), USA (105), Brazil and Ukraine finishing as the top 5 nations by total no of medals. ❖ India's medals tally at the Paris Paralympics has ended at 29 - seven golds, nine silvers and 13 bronze. ❖ This was making it the most rewarded campaign for the country. ❖ Track-and-field has contributed 17 medals to this tally, four of them gold

Current Affairs

அதிகளவிலான அந்நியச் செலாவணிப் பதிவு 2024

ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆனது 2.3 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 683.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது அதிகபட்சமான டாலர் வரவினால் ஏற்பட்ட தொடர்ச்சியான மூன்றாவது வாராந்திர அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு ஆகும்.  கடந்த மூன்று வாரங்களில் கையிருப்பு ஆனது 13.9 பில்லியன் உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 60 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் தங்க கையிருப்பு 862 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து, மொத்தமாக 61.859 பில்லியன் டாலராக உள்ளது.

Current Affairs

New record of Forex 2024

❖ India's foreign exchange reserves rose $2.3 billion in the week ending August 30 to a new record high of $683.99 billion. ❖ This is the third consecutive weekly rise of forex reserves backed by healthy dollar inflows. ❖ In the past three weeks, reserves rose by 13.9 billion. ❖ In 2024 alone, they have risen by over $60 billion cumulatively. ❖ The Gold reserves during the week increased by $862 million, bringing the total to $61.859 billion.

Current Affairs

இணைய வெளிப் பாதுகாப்பு கொள்கை 2.0

தமிழக அரசானது சமீபத்தில் இணையவெளிப் பாதுகாப்புக் கொள்கை 2.0யினை வெளியிட்டுள்ளது. * இது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு இணைய வெளிப் பாதுகாப்புக் கொள்கை 2020யினை மாற்றியமைத்துள்ளது. இணையவெளி அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களின் ஆய்வு, இணக்கம் மற்றும் கண்காணிப்புக்கான வழிகாட்டுதல்கள், சீர்தர இயக்கச் செயல்முறைகள் (SOP) மூலம் அரசாங்கச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இது பட்டியலிடுகிறது. இக்கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் சார் சொத்துக்களை (உள்கட்டமைப்பு, மென்பொருள், குடிமக்கள் சேவைகள்) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் அவற்றின் கிடைக்கும் தன்மையை அதிகப் படுத்துவதோடு, நிறுவப்பட்ட உள்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒரு நிறுவனம் சார்ந்த நெறிமுறையை உருவாக்கும்.

Current Affairs

Cyber Security Policy 2.0

❖ Cyber Security Policy 2.0 was recently released by the Tamil Nadu government. ❖ It superseded the Tamil Nadu Cyber Security Policy 2020 issued in September 2020. ❖ It lists out steps for ensuring the protection of assets of the government through guidelines, Standard Operating Procedures (SOP) for audit, compliance and monitoring of cyber threats and attacks. ❖ The policy aims to protect information assets of government (infrastructure, software, citizen services). ❖ This will maximize their availability to government and citizens and to create an institutional mechanism to monitor the established infrastructure.

Current Affairs

2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி (இறுதிப் பதிப்பு)

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வில்வித்தை வீரர் என்ற வரலாற்றை ஹர்விந்தர் சிங் (அரியானா) படைத்துள்ளார். உலகச் சாம்பியனான குண்டெறி வீரரான சச்சின் சர்ஜேராவ் கிலாரி (மாகாராஷ்டிரா) மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். சுமித் ஆன்டில் (அரியானா) தங்கம் வென்றதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆண் மற்றும் இந்தியாவில் இரண்டாவது நபர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.  மகளிருக்கான 400 மீட்டர் T20 இறுதிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி (தெலங்கானா) வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவிற்கான 16வது பதக்கத்தை வென்றார்.

Current Affairs

Paralympics 2024 – Final Update

❖ Harvinder Singh (Haryana) scripted history by becoming the first Indian archer to clinch a gold at the Paralympics. ❖ World champion shot-putter Sachin Sarjerao Khilari (Maharashtra) has won the silver medal at the Paralympics. ❖ Sumit Antil (Haryana) becomes the first Indian man and second from the country to successfully defend a Paralympic title by winning gold. ❖ Deepthi Jeevanji (Telangana) has bagged the 16th medal for India as she won the bronze in the women's 400m T20 final.

Current Affairs

இந்தியாவின் 23வது சட்ட ஆணையம்

23வது சட்ட ஆணையத்தின் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. * இந்த ஆணையத்தின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த ஆணையத்தில் ஒரு முழு நேரத் தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர்-செயலாளர் உட்பட நான்கு முழுநேர உறுப்பினர்களும் இருப்பர். இது வழக்கற்றுப் போன மற்றும் ரத்து செய்யக் கூடிய சட்டங்களை அடையாளம் கண்டு, ஏழைகளைப் பாதிக்கும் சட்டங்களை மதிப்பீடு செய்து, எந்தவொரு சட்டத்தின் மீதுமான தனது கருத்துக்களைத் தெரிவிக்கும். 23வது ஆணையம் ஆனது உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் உலகமயமாக்கலின் தாக்கத்தை ஆராய்ந்து, விளிம்புநிலை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டு உள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக அல்லது "பிற நிலையில் பணியாற்றும் நபர்களாக" இருக்கலாம். பொதுவாக இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியே நியமிக்கப் படுவார். 22வது சட்ட ஆணையத்தின் தலைவராக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி இருந்தார். 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆனது ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவு அடைந்தது.

Current Affairs

23rd Law Commission of India

❖ The Centre has notified the constitution of the 23rd Law Commission. ❖ The term of the Commission will be for period of three years till 31st August 2027. ❖ The Commission will have a full-time chairperson and four full-time members including a member-secretary.  ❖ It will identify laws that have become obsolete and can be repealed, carry out audits of laws that affect the poor and give its views on any law. ❖ The 23rd Commission has been asked to examine the impact of globalisation on food security, unemployment and recommend measures for the protection of the interests of the marginalised. ❖ The chairperson and members could be serving judges of the Supreme Court or High Courts or “other category of persons”. ❖ Usually, the chairperson of the commission is a retired judge. ❖ The 22nd Law Commission was chaired by former Karnataka High Court Chief Justice Ritu Raj Awasthi. ❖ The 22nd Law Commission’s term came to an end on August 31.