Posts

Current Affairs

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024

இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்டு மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சக்தி வாய்ந்த இயந்திரக் கற்றலின் அடிப்படையை உருவாக்கும் பல்வேறு முறைகளை உருவாக்குவதற்காக அவர்கள் இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர். * ஜான் ஹாப்ஃபீல்ட் ஓர் இணை நினைவு தொடர்புறு நினைவகத்தை உருவாக்கினார், இதனால் தரவுகளில் உள்ள படங்கள் மற்றும் பிற வடிவங்களைச் சேமித்து அதனை மறு கட்டமைக்க முடியும். ஜெஃப்ரி ஹிண்டன், தரவுகளில் உள்ள பண்புகளைத் தானாகவே கண்டறியும் ஒரு முறையைக் கண்டுபிடித்துள்ளார் என்ற நிலையில், இது படங்களில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காண வழி வகுக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான பரிசு ஆனது எலக்ட்ரான்கள் கொண்டு அவர்கள் ஆற்றியப் படைப்பிற்காக இயற்பியலாளர்களான ஆன் எல்'ஹுல்லியர், பியர் அகோஸ்டினி மற்றும் ஃபெரென்க் க்ராஸ்ஸுக்கு வழங்கப்பட்டது.

Current Affairs

Nobel Prize in Physics 2024

❖ The Nobel Prize in Physics was awarded to John Hopfield and Geoffrey Hinton. ❖ They have used physics tools to develop methods that form the basis of today’s powerful machine learning. ❖ John Hopfield has created an associative memory that can store and reconstruct images and other patterns in data. ❖ Geoffrey Hinton invented a method that can automatically find properties in data, allowing it to identify specific elements in pictures. ❖ The 2023 prize went to physicists Anne L'Huillier, Pierre Agostini, and Ferenc Krausz for their work with electrons.

Current Affairs

நீக்ரோ நதி நீர்மட்டம்

அமேசான் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான நீக்ரோ நதியின் நீர்மட்டம் ஆனது இதுவரை பதிவு செய்யப்படாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. மனௌஸ் என்ற துறைமுகத்தில் நீக்ரோ ஆற்றின் நதியின் நீர்மட்டம் சமீபத்தில் 12.66 மீட்டராக இருந்தது. சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைவான பதிவு இதுவாகும். நீக்ரோ நதி அமேசான் படுகையின் 10 சதவீதப் பகுதிகளுக்கு நீர் வழங்குகிறது, மேலும் நீர் கொள்ளளவின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய நதியாகும். 2250 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதி கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசில் வழியாகச் செல்கிறது.

Current Affairs

First Mpox diagnostic test

❖ WHO has listed the first Mpox in vitro diagnostic under its Emergency Use Listing procedure. ❖ The Alinity m MPXV assay is a real-time PCR test that enables detection of monkeypox virus (clade I/II) DNA from human skin lesion swabs. ❖ Currently, 35 laboratories across India are equipped to test suspected cases of Mpox. ❖ In 2024, over 30,000 suspected cases were reported across the African region.

Current Affairs

Negro River water Level

❖ Negro, One of the Amazon River's main tributaries has dropped to its lowest level ever recorded. ❖ The level of the Negro River at the port of Manaus was at 12.66 metres recently. ❖ Its normal level is about 21 metres. ❖ It is the lowest since measurements started 122 years ago. ❖ The Negro River drains about 10 per cent of the Amazon basin and is the world's sixth-largest by water volume. ❖ The 2250 Km long river passes through Colombia, Venezuela, and Brazil.

Current Affairs

குரங்கம்மையினைக் கண்டறியும் முதல் சோதனை

உலக சுகாதார அமைப்பானது அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கான மருந்துகளின் பட்டியலில், குரங்கம்மையினைக் கண்டறியும் முதல் ஆய்வகச் சோதனை முறையினைப் பட்டியலிட்டுள்ளது. * அலினிட்டி m MPXV மதிப்பீடு என்பது நிகழ்நேர PCR சோதனையாகும் என்பதோடு இது மனிதத் தோல் புண் மாதிரிகளில் இருந்து குரங்கம்மை வைரஸ் (வகை I/II) டிஎன்ஏவை கண்டறிய உதவுகிறது. தற்போது, இந்திய நாடு முழுவதிலும் சுமார் 35 ஆய்வகங்களில், சந்தேகத்திற்கிடமான குரங்கம்மை பாதிப்புகளைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கப் பிராந்தியம் முழுவதும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Current Affairs

தேசிய வேளாண் விதிகள்

இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) தேசிய வேளாண் விதிகளை (NAC) உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. * இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசியக் கட்டிட விதிகள் மற்றும் தேசிய மின் விதிகள் ஆகியவற்றினைப் போன்றது. வேளாண்மையில், இயந்திரங்கள் (இழுவை இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள்) மற்றும் பல்வேறு உள்ளீடுகள் (உரங்கள், பூச்சிக்கொல்லிகள்) ஆகியவற்றிற்கான தர நிலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் வயல்களைப் பயிரிடத் தயார் செய்தல், சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பயன்பாடு போன்ற வேளாண் நடைமுறைகளுக்கு எந்த தர நிலைகளும் இல்லை. சாகுபடிக்கான பயிர்களை தேர்வு செய்தல், நிலத்தினை தயார் செய்தல், விதைத்தல் / நாற்று நடுதல், நீர்ப்பாசனம்/வடிகால், மண் வள மேலாண்மை, தாவரங்களின் ஆரோக்கியத்தினைப் பேணுதல், அறுவடை/கதிரடித்தல், முதல்நிலை பதப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய நடைமுறைகள், நிலைத்தன்மை மற்றும் பதிவுகளைக் கையாளுதல் போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கான விதிகளை இந்தப் புதிய NAC கொண்டிருக்கும். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு போன்ற உள்ளீடு மேலாண்மைக்கான தரநிலைகளும், பயிர்களின் சேமிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் கண்காணிப்பு அமைப்புகளுக்குமான தரநிலைகளும் இதில் அடங்கும்.

Current Affairs

National Agriculture Code

❖ The Bureau of Indian Standards (BIS) has begun the process of formulating a National Agriculture Code (NAC). ❖ This is same as the existing National Building Code and National Electrical Code. ❖ In agriculture, it has already set standards for machinery (tractors, harvesters, etc.) and various inputs (fertilisers, pesticides, etc.) ❖ But there is no standard for agriculture practices like preparation of fields, micro irrigation and water use. ❖ The new NAC will cover all agriculture processes and post-harvest operations, such as crop selection, land preparation, sowing/transplanting, irrigation /drainage, soil health management, plant health management, harvesting / threshing, primary processing, post-harvest, sustainability, and record the maintenance. ❖ It will also include the standards for input management, like use of chemical fertilisers, pesticides, and weedicides, as well as standards for crop storage and traceability.

Current Affairs

இணை மாவட்டம் - அசாம்

இணை மாவட்டங்கள் என்பது தற்போதுள்ள மாவட்டங்களுக்குள் உருவாக்கப்பட்ட அசாம் மாநில அரசாங்கத்தின் முன்னோடி மிக்க ஒரு முன்னெடுப்பாகும். அம்மாநில அரசானது முதல் கட்டமாக 39 இணை மாவட்டங்களை உருவாக்கியது. அடிமட்ட அமைப்புகளுக்கு நிர்வாகத்தை கொண்டு செல்வதன் மூலம் அத்தியாவசிய அரசுச் சேவைகளை மிகவும் சரியான நேரத்தில் அணுகுவதை உறுதி செய்வதையும் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை நெறிப்படுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த 'இணை மாவட்டங்கள்' ஆனது உதவி மாவட்ட ஆணையர் பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் மாவட்டங்களுக்குக் கீழே உள்ள சிறிய நிர்வாக அலகுகளாக செயல்படும்.

Current Affairs

Co-District – Assam

❖ Co-districts is a pioneering initiative by the Assam government within the existing districts. ❖ They rolled out 39 co-districts in the first phase. ❖ It aims to ensure timely access to essential govt services and streamline citizen-centric services by bringing governance to the grassroots. ❖ These ‘co-districts’ will serve as smaller administrative units below the districts led by an officer of the rank of Assistant District Commissioner.