Posts

Current Affairs

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி ஸ்ரீராமுக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 43 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழ் மொழி பேசும் தலைமை நீதிபதி பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னதாக இப்பதவி வகித்த தமிழ் பேசும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி M.M. இஸ்மாயில் 1981 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் தேதியன்று இராஜினாமா செய்தார்.

Current Affairs

Chief Justice of Madras High Court 2024

❖ Tamil Nadu Governor administered the oath of office to Justice Shriram on his assumption of office as the 53rd Chief Justice of the Madras High Court. ❖ The Madras High Court has got a Tamil-speaking Chief Justice after a long gap of 43 years. ❖ The last Tamil-speaking Chief Justice of the High Court was M.M. Ismail who resigned on July 9, 1981.

Current Affairs

இந்தியாவின் முதல் காகிதம் இல்லா தேர்தல் - மத்தியப் பிரதேசம்

முதன்முறையாக, மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் ஆனது போபாலில் உள்ள பஞ்சாயத்து இடைத்தேர்தலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் காகிதமில்லா வாக்களிப்பை வெற்றிகரமாக நடத்தியது. பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எளிமையான, சுமூகமான மற்றும் வெளிப்படையான வாக்குப்பதிவை நடத்தும் ஒரு நோக்கத்திற்காக காகிதம் இல்லா வாக்குச் சாவடிகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த காகிதமில்லா வாக்குப் பதிவு செயல்பாட்டில், துல்லியமான அடையாள சரி பார்ப்பு மற்றும் வாக்குப் பதிவுகளை உறுதி செய்வதற்காக வேண்டி வாக்காளர்களின் கையொப்பங்கள் மற்றும் கட்டைவிரல் பதிவுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப் படுகின்றன.  வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் வாக்குப்பதிவு கணக்கீடு ஆகியவையும் இயங்கலை வழியாகவே மேற்கொள்ளப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களுக்கும் வாக்குச் சாவடி முகவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக் கணக்குகள் அனுப்பப் படும்.

Current Affairs

India's first paperless election - Madhya Pradesh

❖ In a first, the Madhya Pradesh State Election Commission has successfully conducted paperless voting at a booth in a panchayat by poll in Bhopal. ❖ The Paperless booths have been planned for the purpose of conducting a simple, smooth and transparent voting process in panchayats and urban bodies. ❖ In this paperless process, voters' signatures and thumb impressions are recorded electronically to ensure accurate identity verification and voting records. ❖ The voting percentage and ballot accounting are also being done online. ❖ After the voting ends, the ballot accounting will also be provided to the candidates and polling agents via email.

Current Affairs

Kavach 4.0 in India

❖ As per the Union railway ministry, 10,000 locomotives & 9,000 km of railway tracks would equip with the Kavach 4.0 in the first phase. ❖ The nationwide implementation is aimed by December 2030. ❖ When the train is running at 130 kmph, the KAVACH automatically reduced the speed to 120 kmph through the caution zone and restored it back to 130 kmph after exiting. ❖ The train will be stopped 50 m from a red signal without the driver's intervention. ❖ The driver didn’t use the horn, but KAVACH automatically sounded it while passing the level crossing gate. ❖ The train will automatically be stopped at a red signal even when the driver has attempted to cross it.

Current Affairs

மலேரியா ஒழிப்பு இலக்கு

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு பாதிப்புகள் கூட பதிவாகாத நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் மலேரியாவை ஒழிப்பதில் தமிழ்நாடு ஒரு படி முன்னிலையில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து தேசியக் கட்டமைப்பை படிப்படியாக ஏற்று, 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த நோயினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 2020 ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் 891 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கையானது ஓராண்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் (ஆகஸ்ட் வரை) பாதிப்பு எண்ணிக்கை 233 ஆகக் குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 80% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சியின் பங்கு ஆனது 2023 ஆம் ஆண்டில் 45% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு மேலும் 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் 40% ஆக பதிவாகியுள்ளது. 1990 முதல் 1998 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பாதிப்புகள் பதிவாகின.

Current Affairs

Malaria elimination goal 2024

❖ Tamil Nadu is a step closer to eliminating malaria with 33 districts in the State recording zero indigenous cases in 2024. ❖ The State has been working towards eliminating malaria by 2030, adopting the national framework step by step from 2014. ❖ There were no deaths due to the disease from 2020 till August 2024. ❖ The number of cases reported a year has been steadily declining in the State — from 891 cases in 2020. ❖ The number has dropped to 233 in 2024 (till August). ❖ Chennai Corporation’s contribution to the total number of malaria cases in the State has dipped from 80% in 2020 to 45% in 2023; and 40% so far in 2024. ❖ Almost 50,000 cases were reported every year during 1990 to 1998.

Current Affairs

நாய் வடிவ எந்திரம் இந்திய இராணுவம்

இந்திய இராணுவம் ஆனது 100 நாய் வடிவ சுமக்கும் சாதனங்களை (கால்களைக் கொண்ட பல்பயன்பாட்டு உபகரணம்) வாங்கியுள்ளது என்ற நிலைமையில் இது முன்னோக்கி நகர்த்துவதற்கு, குறிப்பாக அதிக உயரத்தில் உள்ள பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும். உயரமான பகுதிகளுக்கான புதிய கூடாரம் ஆனது -40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் நிலைப்படுத்துவதற்கான மதிப்பாய்வுக் கட்டத்தில் உள்ளது. இந்தச் சாதனமானது ஒரு அதி நவீன செயல் திறன் கொண்ட, சுறுசுறுப்பான மற்றும் அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடிய, பரந்த அளவிலான கட்டமைக்கப்படாத நகர்ப்புற மற்றும் கடினமான இயற்கை சூழல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு ரோபோ ஆகும்.

Current Affairs

Robotic Dog - Indian Army

❖ The Army has procured and inducted 100 robotic mules (multi-utility legged equipment) to support and movement to forward areas, especially in the higher altitudes. ❖ A new tent for high-altitude areas is under evaluation for the deployment at temperatures up to -40 degrees Celsius. ❖ The robotic mule is a high-endurance, agile and durable all-weather ground robot for use in a broad range of unstructured urban and natural environments for defence applications.

Current Affairs

வெள்ளை காண்டாமிருகங்களின் பாதுகாப்பு நிலை 2024

வெள்ளை காண்டாமிருகம் ஆனது அதன் ஆப்பிரிக்க சார்பு இனமான கருப்பு காண்டா மிருகத்துடன் ஒப்பிடும்போது அதன் வாயின் வடிவத்தின் காரணமாக சதுர உதடு காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படுகிறது.  வெள்ளை காண்டாமிருகத்தில் இரண்டு கிளையினங்கள் உள்ளன. அவை O தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள்: செரடோதெரியம் சிமம் சிமம் 0 வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்: செரடோதெரியம் சிமம் காட்டனி  தெற்கு வெள்ளை காண்டாமிருகம் என்பது மிகவும் பரவலாக காணப் படுகின்ற இனங்களில் ஒன்றாகும். இதில் சுமார் 17,000 உள்ளன. கென்யாவில் உள்ள பெஜெட்டா வளங்காப்பகத்தில் வசிக்கும் கடைசி இரண்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகம் மிக அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளது.