உலகளாவியப் புத்தாக்கக் குறியீடு 2024
ஜெனீவா நகரில் உள்ள உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஆனது இந்த முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (GII) இந்தியா 39 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா தற்போது 38 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுள் முதல் இடத்தில் உள்ளது. சுமார் 133 உலக நாடுகளின் புத்தாக்க செயல்திறனை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது. 2015 ஆம் ஆண்டில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (S&T) தொகுப்பு தரவரிசையில் இந்தியா 4வது இடத்தையும் பெற்றுள்ளது. இதில் சீனா 11வது இடத்தைப் பெற்று, முதல் 30 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக உள்ளது. சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.