Posts

Current Affairs

புதிய FAST தொகுப்பு ஆய்வகம்

ஐந்நூறு மீட்டர் கொண்ட துணை கோள வடிவ தொலைநோக்கி (FAST) ஆனது, தென் மேற்கு சீனாவின் குய்சோவில் உள்ள கார்ஸ்ட் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது ஒவ்வொன்றும் 131 அடி (40 மீட்டர்) விட்டம் கொண்ட 24 புதிய நகரக் கூடிய ரேடியோ தொலைநோக்கிகள் இரண்டாவது கட்டமாக சேர்க்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கத்திற்கு FAST தொகுப்பு ஆய்வக அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொலைநோக்கியைச் சுற்றி 3-மைல் (5 கிலோமீட்டர்) சுற்றளவில் இருக்கும் "ஒலி எழுப்பாத" மின்காந்த சூழலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Current Affairs

New FAST Core Array

❖ The Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) is situated in karst region in Guizhou, southwest China. ❖ Now a second phase will add 24 new moveable radio telescopes, each with a diameter of 131 feet (40 meters). ❖ This expansion is named the FAST Core Array. ❖ It aims to make use of the "quiet" electromagnetic environment that exists within a 3-mile (5 kilometers) radius around the telescope

Current Affairs

அமெரிக்க நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான முன்னணி மூலங்கள்

உலகின் சர்வதேச புலம்பெயர்ந்தோரில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் அமெரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டில் பிறந்த வந்த நபர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 47.8 மில்லியனை எட்டியது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட 1.6 மில்லியன் அதிகரித்துள்ளது. மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவில் வசிக்கும் புலம் பெயர்ந்தோரின் பிறப்பிடங்களில் முதன்மையானவையாகும். அமெரிக்காவில் 10.6 மில்லியன் மெக்சிகன்கள் வாழ்வதுடன் மெக்சிகோ மிகப்பெரிய புலம் பெயர்ந்தோர் பிறப்பிட நாடாக உள்ளது என்பதோடு 6% இந்தியர்களும், அதைத் தொடர்ந்து 5% சீனர்களும் அங்கு வாழ்கின்றனர்.

Current Affairs

Top Immigrants source of USA

❖ The United States of America is home to nearly one-fifth of world’s international migrants. ❖ The foreign-born population in the US reached a record 47.8 million in 2023, increasing by 1.6 million from the previous year. ❖ Mexico, China, and India are among the top birthplaces for immigrants residing in the US. ❖ Mexico remains the largest single country of origin, with 10.6 million Mexicans living in the US, immigrants from India make up 6%, followed by China with 5%.

Current Affairs

வெப்ப அலைத் தாக்கத்தின் தணிப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்டம்

வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை இழக்க நேரிடும் என்று உலகளாவிய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. * மிகவும் வெப்பமான வெப்பமண்டல வானிலையுடன் கூடிய தமிழ்நாடு, வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத் திட்ட ஆணையமானது, 'வெப்பத்தின் தாக்கத்தினைத் தணித்தல் தமிழ்நாடு வெப்பத் தணிப்பு உத்தி' என்ற அறிக்கையை வெளியிட்டது. மனிதர்கள் வாழக்கூடிய வெப்பநிலை வரம்பு ஆனது 60% ஈரப்பதத்துடன் கூடிய 25 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையாகும். இருப்பினும், தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த வரம்பு தொடர்ந்து விஞ்சப்படுகிறது. தற்போது, மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 74% பேர் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை உள்ள காற்று சூழலில் உள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெப்ப அலை தாக்கத் தணிப்பு செயல் திட்டத்தைத் தயார் செய்தது.

Current Affairs

Heat wave Mitigation Road map

❖ Global reports indicate that India will lose up to 5% of its Gross Domestic Product by 2030 to rising temperatures. ❖ Tamil Nadu with its warm tropical weather, is projected to be severely impacted by heat. ❖ The State Planning Commission brought a report, ‘Beating the Heat-Tamil Nadu Heat Mitigation Strategy’. ❖ The temperature range at which humans can thrive is 25 degrees Celsius to 30 degrees Celsius, with 60% humidity. ❖ However, in many parts of Tamil Nadu, this threshold is regularly breached. ❖ At present, nearly 74% of the State’s population is exposed to air temperature of over 35°C. ❖ The Tamil Nadu State Disaster Management Authority prepared the Heat Wave Action Plan in 2019, and in 2023.

Current Affairs

250 ஆண்டுகள் பழமையான நினைவு கல் சிற்பம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்காவில் 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் ஏதுமின்றி இந்தச் சிற்பம், சூரியன் மற்றும் சந்திரனின் உருவங்களுடன் கூடிய இணையர் உருவத்தினைக் கொண்டுள்ளது. இதில் விவரங்கள் ஏதும் இல்லாததால், இந்தக் கல் எதற்காக செதுக்கப்பட்டது என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை.

Current Affairs

250-year-old memorial stone

❖ A stone sculpture believed to be from the 17th or 18th centuries was unearthed in Modakkurichi taluk of Erode district. ❖ The sculpture, which has no inscriptions, depicts a couple along with images of the sun and moon. ❖ Since there were no inscriptions, exact details on why the stone was carved are unknown.

Current Affairs

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு

1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 45ZB பிரிவின் படி இந்திய ரிசர்வ் வங்கியானது நாணயக் கொள்கைக் குழுவை (MPC) மறுசீரமைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இந்தக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கியினைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் என ஆறு உறுப்பினர்களைக் கொண்டது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த 3 உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகள் வரையில் இப் பதவியில் இருப்பர்.

Current Affairs

RBI Monetary Policy Committee 2024

❖ The Reserve Bank of India has reconstituted the Monetary Policy Committee (MPC) as per section 45ZB of the Reserve Bank of India Act, 1934.  ❖ As per the provisions of the RBI Act, the Monetary Policy Committee (MPC) consists of six members: three Members from RBI and three are appointed by the Central Government. ❖ The 3 Members appointed by the Central Government shall hold office for a period of four years.