Posts

Current Affairs

அசாமின் பாரம்பரியத் தயாரிப்புகள் - புவிசார் குறியீடு

பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் பல தனித்துவமான அரிசித் தேறல் உட்பட அசாம் பகுதியினைச் சேர்ந்த பின்வரும் எட்டு தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப் படுகிறது.  முதலாவது தயாரிப்பு ஆனது அரிசித் தேறல் வகையான 'போடோ ஜூ க்வ்ரான்' என்ற பொருளில் அதிக சதவீத ஆல்கஹால் (சுமார் 16.11%) உள்ளது.  இரண்டாவது வகையானது 'மைப்ரா ஜூ பித்வி' ஆகும் என்ற நிலைமையில் இது உள் நாட்டில் 'மைப்ரா ஜ்வு பித்வி' அல்லது 'மைப்ரா ஸ்வு பித்வி' என்று அழைக்கப்படுகிறது. போடோ ஜூ கிஷி' எனப்படும் மூன்றாவது வகையும் மிகவும் பாரம்பரியமாக புளிக்க வைக்கப் பட்ட அரிசியிலிருந்து பெறப்படும் மதுபானமாகும்.  முக்கியமான மற்றும் விரும்பத்தகு உணவான 'போடோ நாபம்' எனப்படும் புளித்த மீன் உணவு வகைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  'போடோ ஒன்ட்லா' எனப்படும் மற்றொரு உணவு வகையானது, பூண்டு, இஞ்சி, உப்பு மற்றும் காரத்துடன் கூடிய அரிசித் தூள் மணமுடன் கூடிய ஒரு குழம்பு வகையாகும். 'போடோ குவ்கா' உணவு வகையும் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது. சணல் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பகுதியளவு புளித்த உணவான 'போடோ நர்சி' என்ற உணவு வகையும் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.  'போடோ அரோனை' என்ற சிறிய, அழகான துணியும் புவி சார் குறியீட்டினைப் பெற்று உள்ளது.

Current Affairs

Assam’s Traditional Products - GI Tags

❖ GI tag was given to following eight products from the Assam region, including traditional food items and several unique varieties of rice beer. ❖ The first is the variant of rice beer ‘Bodo Jou Gwran’, which has the highest percentage of alcohol (about 16.11%). ❖ The second variant is ‘Maibra Jou Bidwi’, known locally as ‘Maibra Jwu Bidwi’ or ‘Maibra Zwu Bidwi’. ❖ The third variant, called ‘Bodo Jou Gishi’, is also a traditionally fermented rice based alcoholic beverage. ❖ A GI tag has been secured by ‘Bodo Napham’, an important and favourite dish of fermented fish. ❖ The other one is ‘Bodo Ondla’, a rice powder curry flavoured with garlic, ginger, salt, and alkali. ❖ The ‘Bodo Gwkha’ has also received the GI tag. ❖ ‘Bodo Narzi’ is a semi-fermented food prepared with jute leaves. ❖ The ‘Bodo Aronai’, a small beautiful cloth, also has the GI tag.

Current Affairs

பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம்

பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம் ஆனது, அக்டோபர் 03 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளையோர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு ள்ளது. இது நடப்புலக வணிகச் சூழல் குறித்த புரிதலை வழங்குவதன் மூலம் இந்தியாவில் இளையோர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்தும்.  இது இளையோர்களுக்கு வேலையில் பயிற்சி அளிப்பது மற்றும் நடப்புலக வேலைச் சூழலை வெளிப்படுத்துவதற்கான திட்டம் ஆகும். DBT (நேரடிப் பயன் பரிமாற்றம்) மூலம் மத்திய அரசிடமிருந்துப் பயிற்சியாளர்களுக்கு நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியினால் வழங்கப்படும் கூடுதல் 500 ரூபாய் ஈட்டுத் தொகையுடன், மாதாந்திர உதவித் தொகையாக 4,500 ரூபாய் வழங்கப்படும். முழுநேர வேலையில் ஈடுபடாத 21 முதல் 24 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த ஓராண்டு காலப் பயிற்சித் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

Current Affairs

PM Internship Scheme 2024

❖ The Prime Minister’s Internship Scheme was launched on October 3. ❖ The PM Internship Scheme aims to provide internship opportunities to one crore youth in the top 500 companies over the next five years. ❖ It will enhance youth employability in India by offering them hands-on exposure to real-world business environments. ❖ The scheme represents a transformative opportunity to bridge the skills gap and drive sustainable growth in India. ❖ The scheme is to provide on-job training to youth and an exposure to real-life work environment. ❖ A monthly stipend of ₹4,500 will be provided to the interns from the central government via DBT (Direct Benefit transfer), with an additional ₹500 offset provided by the company’s CSR fund. ❖ The Candidates, aged between 21 and 24 years who are not engaged in full-time employment, are eligible for the one-year internship programme.

Current Affairs

உலக விண்வெளி வாரம் அக்டோபர் 04/10

இது விண்வெளி ஆய்வின் பல நன்மைகளை முன்னிலைப்படுத்துவதோடு விண்வெளி நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. இது பின்வரும் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்களை நினைவு கூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது: 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் ஏவப்பட்ட நிகழ்வு மற்றும் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அக்டோபர் 04 ஆம் தேதியன்று சோவியத் ஒன்றியத்தினால் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது என்பதோடு இதுவே சுற்றுப்பாதையில் மனிதகுலம் உருவாக்கிய முதல் செயற்கையான செயற்கைக் கோள் நிலை நிறுத்தப் பட்டதைக் குறித்தது. விண்வெளி ஒப்பந்தம் ஆனது சர்வதேச விண்வெளி சட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவதோடு, விண்வெளியில் அமைதியான பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளஊக்குவிக்கிறது.   இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Space and Climate Change" என்பதாகும்.

Current Affairs

World Space Week 2024 - October 04/10

❖ It wis highlighting the benefits of space exploration and promoting international cooperation in space activities. ❖ It is established by the United Nations to commemorates two significant milestones: o The launch of Sputnik 1 on October 4, 1957, and o The signing of the Outer Space Treaty on October 10, 1967. ❖ The launch of Sputnik 1 by the Soviet Union on October 4 marked humanity's first artificial satellite in orbit. ❖ The Outer Space Treaty establishing a framework for international space law and promoting peaceful exploration of space. ❖ This year’s theme is “Space and Climate Change.”

Current Affairs

புதிய செம்மொழிகள்

மராட்டியம், வங்காளம், பாலி, பிராகிருதம் மற்றும் அசாமியம் ஆகிய புதிய ஐந்து மொழிகளுக்கும் 'செம்மொழி' அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், இந்த அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கையானது ஆறில் இருந்து 11 ஆக (இரு மடங்காக) உயரும். இதற்கு முன்னதாக தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் இந்த அந்தஸ்தினைப் பெற்றுள்ளன. 2004 ஆம் ஆண்டில் தமிழுக்கு தான் முதன்முதலில் செம்மொழி அந்தஸ்து வழங்கப் பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டில் ஒடியா மொழிக்குத் தான் கடைசியாக செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.  புதியதாக செம்மொழி அந்தஸ்து பெறும் இந்த மொழிகளுக்கென தேசிய விருதுகள், பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பிரிவுகள் (இருக்கைகள்) மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை உரிய காலத்தில் அமைக்கப்படும்.

Current Affairs

New Classical Languages 2024

❖ The Union Cabinet approved giving the status of 'classical language' to five more languages - Marathi, Bengali, Pali, Prakrit and Assamese. ❖ With this cabinet decision, the number of languages that have the status will nearly double from six to 11. ❖ The languages that had the tag earlier were Tamil, Sanskrit, Telugu, Kannada, Malayalam and Odia ❖ Tamil was granted the status in 2004 and the last language to get it was Odia, in 2014. ❖ The new classical languages will also have the national awards, Chairs in universities, and centres for promotion set up for them in due course.

Current Affairs

2024 ஆம் ஆண்டில் வண்ணத்துப் பூச்சிகளின் இடம் பெயர்வு

தமிழ்நாடு மாநிலத்தில், செப்டம்பர் மாதத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி டானைனே துணைக் குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் பெரிய அளவில் இடம் பெயர்ந்துள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அருகில் உள்ள பல்வேறு மலைத் தொடர்களை நோக்கி அவை இடம் பெயர்கின்றன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பொதுவாக 'வரியன் மற்றும் கருப்பன்' என்று அழைக்கப் படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் சமவெளிகளை நோக்கி இடம் பெயர்கின்றன. இந்த இடம் பெயர்வு ஆனது தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் நிகழும். 

Current Affairs

Butterfly migration in 2024

❖ Tamil Nadu has witnessed large-scale migration of butterflies belonging to the Danainae sub-family from the Eastern Ghats and plains towards the Western Ghats during September. ❖ They migrate from the Eastern Ghats and plains towards various nearest hill ranges of the Western Ghats before the start of northeast monsoon. ❖ During April and May, these butterflies, generally called ‘tigers and crows’ migrate from the Western Ghat hill ranges towards the Eastern Ghats and plains of Tamil Nadu. ❖ This is happened before the onset of the southwest monsoon.