Posts

Current Affairs

தேசிய வேளாண் விதிகள்

இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) தேசிய வேளாண் விதிகளை (NAC) உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.  இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசியக் கட்டிட விதிகள் மற்றும் தேசிய மின் விதிகள் ஆகியவற்றினைப் போன்றது. வேளாண்மையில், இயந்திரங்கள் (இழுவை இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள்) மற்றும் பல்வேறு உள்ளீடுகள் (உரங்கள், பூச்சிக்கொல்லிகள்) ஆகியவற்றிற்கான தர நிலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் வயல்களைப் பயிரிடத் தயார் செய்தல், சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பயன்பாடு போன்ற வேளாண் நடைமுறைகளுக்கு எந்த தர நிலைகளும் இல்லை. சாகுபடிக்கான பயிர்களை தேர்வு செய்தல், நிலத்தினை தயார் செய்தல், விதைத்தல் / நாற்று நடுதல், நீர்ப்பாசனம்/வடிகால், மண் வள மேலாண்மை, தாவரங்களின் ஆரோக்கியத்தினைப் பேணுதல், அறுவடை/கதிரடித்தல், முதல்நிலை பதப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய நடைமுறைகள், நிலைத்தன்மை மற்றும் பதிவுகளைக் கையாளுதல் போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கான விதிகளை இந்தப் புதிய NAC கொண்டிருக்கும். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு போன்ற உள்ளீடு மேலாண்மைக்கான தரநிலைகளும், பயிர்களின் சேமிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் கண்காணிப்பு அமைப்புகளுக்குமான தரநிலைகளும் இதில் அடங்கும்.

Current Affairs

National Agriculture Code

❖ The Bureau of Indian Standards (BIS) has begun the process of formulating a National Agriculture Code (NAC). ❖ This is same as the existing National Building Code and National Electrical Code. ❖ In agriculture, it has already set standards for machinery (tractors, harvesters, etc.) and various inputs (fertilisers, pesticides, etc.) ❖ But there is no standard for agriculture practices like preparation of fields, micro irrigation and water use. ❖ The new NAC will cover all agriculture processes and post-harvest operations, such as crop selection, land preparation, sowing/transplanting, irrigation /drainage, soil health management, plant health management, harvesting / threshing, primary processing, post-harvest, sustainability, and record the maintenance. ❖ It will also include the standards for input management, like use of chemical fertilisers, pesticides, and weedicides, as well as standards for crop storage and traceability.

Current Affairs

இணை மாவட்டம் - அசாம்

இணை மாவட்டங்கள் என்பது தற்போதுள்ள மாவட்டங்களுக்குள் உருவாக்கப்பட்ட அசாம் மாநில அரசாங்கத்தின் முன்னோடி மிக்க ஒரு முன்னெடுப்பாகும். அம்மாநில அரசானது முதல் கட்டமாக 39 இணை மாவட்டங்களை உருவாக்கியது. அடிமட்ட அமைப்புகளுக்கு நிர்வாகத்தை கொண்டு செல்வதன் மூலம் அத்தியாவசிய அரசுச் சேவைகளை மிகவும் சரியான நேரத்தில் அணுகுவதை உறுதி செய்வதையும் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை நெறிப்படுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த 'இணை மாவட்டங்கள்' ஆனது உதவி மாவட்ட ஆணையர் பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் மாவட்டங்களுக்குக் கீழே உள்ள சிறிய நிர்வாக அலகுகளாக செயல்படும்.

Current Affairs

Co-District – Assam

❖ Co-districts is a pioneering initiative by the Assam government within the existing districts. ❖ They rolled out 39 co-districts in the first phase. ❖ It aims to ensure timely access to essential govt services and streamline citizen-centric services by bringing governance to the grassroots. ❖ These ‘co-districts’ will serve as smaller administrative units below the districts led by an officer of the rank of Assistant District Commissioner.

Current Affairs

இந்தியாவில் யானைகளின் நிலை 2022-23

சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது, 'இந்தியாவில் யானைகளின் நிலை 2022-23' என்ற தலைப்பிலான அதன் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை நிலுவையில் வைத்து உள்ளது. இந்த வெளியிடப்படாத அறிக்கையின் தரவுகள் ஆனது கிழக்கு-மத்திய மற்றும் தெற்கு நிலப்பரப்புகளில் காணப்படும் யானைகளின் எண்ணிக்கையில் மிக அதிகப்படியான வீழ்ச்சியைக் காட்டுகின்றன.  தெற்கு மேற்கு வங்காளம் (84%), ஜார்க்கண்ட் (64%), ஒடிசா (54%) மற்றும் கேரளாவில் (51%) யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு அளவானது குறிபிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. 2002 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஆனது "மொத்த நேரடி எண்ணிக்கை" முறையில் கணக்கிடப்பட்டன. 2002 ஆம் ஆண்டில் தென் மாநிலங்களில் "மறைமுக சாணக் கணக்கெடுப்பு முறை" அறிமுகப் படுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் ஒரு தொகுதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் சாணக் கணக்கெடுப்பு ஆகிய முறைகளை இணைத்து ஒரு கணக்கெடுப்பு நெறிமுறையைப் பயன்படுத்தின.

Current Affairs

Status of Elephant in India 2022-23

❖ The Environment Ministry has shelved its elephant census report, ‘Status of Elephant in India 2022-23’. ❖ Data from the unreleased report show a sharp decline in elephant populations in the east-central and southern landscapes. ❖ The slide in numbers is especially dramatic in Southern West Bengal (84%), Jharkhand (64%), Odisha (54%), and Kerala (51%)  ❖ Until 2002, elephants were counted in India by the “total direct count” method. ❖ In 2002, the “indirect dung count method” was introduced in the southern states. ❖ In 2023, Karnataka, Tamil Nadu, and Kerala used a protocol combining the block count and dung count methods

Current Affairs

பேறுகால தாய்மார்கள் இறப்பு வீதத்தினைக் குறைக்க புதிய செயற்குழு

தமிழ்நாடு அரசானது, பேறுகால தாய்மார்கள் இறப்புகளைக் குறைப்பதற்காக மாநில அளவிலான செயற்குழுவை அமைத்துள்ளது.  மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை (MMR) ஒரு லட்சத்துக்கு 10க்கும் குறைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.  தற்போது MMR ஆனது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக உள்ளது. இந்த செயற்குழுவானது நிபுணர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும்.

Current Affairs

New Task Force to Reduce MMR

❖ Tamil Nadu has constituted a State-level task force to reduce maternal deaths. ❖ The aim is to bring down the Maternal Mortality Ratio (MMR) to less than 10 per one lakh live births in the next two years.  ❖ The present MMR is 45.5 per one lakh live births. ❖ It will comprise experts, and representatives from the Indian Medical Association, the WHO and UNICEF.

Current Affairs

உலக அஞ்சல் தினம் அக்டோபர் 09

இந்த நாளானது 1874 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்ன் நகரில் உலகளாவிய தபால் ஒன்றியம் நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவாகும். 2024 ஆம் ஆண்டில், உலகளாவிய தபால் ஒன்றியம் (UPU) ஆனது அதன் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "150 years of enabling communication and empowering peoples across nations" என்பதாகும்.

Current Affairs

World Postal Day 2024 - October 09

❖ This day is the anniversary of the establishment of the Universal Postal Union in 1874 in the Swiss Capital, Bern. ❖ In 2024, the Universal Postal Union (UPU) celebrates its 150th anniversary. ❖ The theme for 2024 is “150 years of enabling communication and empowering peoples across nations”.