Posts

Current Affairs

குளிர்காலக் கூட்டத்தொடர் 2024

பாராளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்காலக் கூட்டத் தொடரும் தேதி எதுவும் அறிவிக்கப் படாமல் ஒத்தி வைத்ததுடன் முடிவடைந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா அனுசரிப்பு, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகியவை இடம் பெற்றன. "ஒரு தேசம் ஒரு தேர்தல்" திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக மேற் கொள்ளப் படும் அரசியலமைப்பு (129) திருத்த மசோதா, 2024 மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 போன்ற விவாதத்திற்குரிய மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. மக்களவையில் வெறும் நான்கு மசோதாக்களும், மாநிலங்களவையில் வெறும் மூன்று மசோதாக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இதில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் 54.5% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 40% ஆகவும் இருந்தது. பட்டியலிடப்பட்ட 16 மசோதாக்களில், பாரதிய வாயுயான் விதேயக், 2024 என்ற ஒரே ஒரு மசோதா மட்டுமே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையின் முதல் ஆறு மாதங்களில் ஒரே ஒரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்ப ட்டது. கடந்த ஆறு மக்களவைகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த செயல்திறன் கொண்டதாகும். மாநிலங்களவையில், மொத்தம் 19 நாட்களில் 15 நாட்கள் அளவிலான கேள்வி நேரம் செயல்படுத்தப்படவில்லை. மக்களவையில், 20 நாட்களுள் 12 நாட்களில் 10 நிமிடங்களுக்கு மேல் கேள்வி நேரம் செயல்படுத்தப்படவில்லை. * மக்களவையில் தனிநபர் மசோதா குறித்த விவாதங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை மற்றும் மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் மட்டுமே விவாதிக்கப்பட்டது.

Current Affairs

Winter Session 2024

❖ Both Houses of the Parliament were adjourned sine die of the frostiest winter sessions. ❖ The session was marked by debate on the Constitution’s 75th anniversary, notice of no-confidence moved by the Opposition against the Rajya Sabha Chairman. ❖ The government managed to introduce the debatable Bills - the Constitution (129) Amendment Bill, 2024 and the Union Territories Laws (Amendment) Bill, 2024 to give effect to “One Nation One Election”. ❖ Only four Bills were passed in the Lok Sabha and three Bills in the Rajya Sabha ❖ The productivity of the Lok Sabha was 54.5% and that of the Rajya Sabha 40%. ❖ Of the scheduled 16 Bills, only one Bill, the Bharatiya Vayuyan Vidheyak, 2024, was passed in both Houses. ❖ Only one Bill passed in the first six months of the Lok Sabha term. ❖ It is the lowest performance in comparison to the last six Lok Sabhas. ❖ Question Hour did not function in the Rajya Sabha for 15 out of 19 days. ❖ In the Lok Sabha, Question Hour did not function for more than 10 minutes in 12 out of 20 days. ❖ No private member’s business was transacted in the Lok Sabha and only one resolution was discussed in the Rajya Sabha

Current Affairs

இந்தியக் காடுகளின் நிலை குறித்த அறிக்கை 2023

இந்திய வனக் கணக்கெடுப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படும், இரண்டாண்டிற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடு ஆன 18வது இந்தியக் காடுகளின் நிலை குறித்த ஒரு அறிக்கையானது (ISFR) ஓராண்டிற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, 24.62 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் மொத்தக் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு ஆனது 2023 ஆம் ஆண்டில் 25.17 சதவீதமாக அதிகரித்து உள்ளது. முதன்முறையாக வேளாண் காடு வளர்ப்பின் கீழ் வளர்க்கப்படும் மரங்களும் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு ISFR அறிக்கையில் பதிவான காடுகளின் பரப்பளவு மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17 சதவீதமாக இருந்தது. மொத்தக் காடுகளின் பரப்பளவு 7,15,342,61 சதுர கிலோமீட்டர் ஆகும் என்ற நிலையில் இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதமாகும். இந்த இரண்டையும் கணக்கில் கொண்டு கூறுகையில், மொத்தக் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 8,27,356.95 சதுர கிலோ மீட்டர் ஆகும். நாட்டின் புவியியல் பரப்பில் 3.41 சதவீதம் மரங்கள் உள்ளன. காடு மற்றும் மரங்களின் பரப்பில் அதிகபட்ச அதிகரிப்புப் பதிவாகியுள்ள முதல் நான்கு மாநிலங்கள் சத்தீஸ்கர் (684 ச. கிமீ), உத்தரப் பிரதேசம் (559 ச. கிமீ), ஒடிசா (559 ச. கிமீ) மற்றும் இராஜஸ்தான் (394 ச. கிமீ) ஆகியவையாகும். காடுகளின் பரப்பில் அதிகபட்ச அதிகரிப்பு பதிவாகியுள்ள முதல் மூன்று மாநிலங்கள் மிசோரம் (242 ச. கிமீ), குஜராத் (180 ச. கிமீ) மற்றும் ஒடிசா (152 ச. கிமீ) ஆகியவையாகும். பரப்பளவு வாரியாக மிகப்பெரிய காடு மற்றும் மரங்களின் பரவல் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (85,724 ச. கிமீ), அருணாச்சலப் பிரதேசம் (67,083 ச. கிமீ) மற்றும் மகாராஷ்டிரா (65,383 ச. கிமீ) ஆகியவையாகும். மொத்தப் புவியியல் பரப்பளவில் காடுகளின் பரவல் சதவீதத்தின் அடிப்படையில், லட்சத்தீவு (91.33 சதவீதம்) அதிகப் பரவலைக் கொண்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவு (81.62 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன. + இந்தியாவின் மொத்த சதுப்புநிலப் பரப்பு 4,992 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

Current Affairs

India State of Forest Report 2023

❖ The latest 18th biennial assessment ISFR of India’s forests by the Forest Survey of India was delayed by over a year. ❖ India's total forest and tree cover has increased to 25.17 per cent in 2023 from 24.62 per cent as per the latest report. ❖ For the first-time trees grown under agroforestry have also been covered. ❖ The ISFR 2023 report recorded forest cover and tree cover was 25.17 per cent. ❖ The total forest cover was 7,15,342.61 sq km which is 21.76 per cent of the geographical area of the country. ❖ With these two, total forest and tree covers are 8,27,356.95 sq km. ❖ The tree cover is 3.41 per cent of the geographical area of the country. ❖ The Top four states showing maximum increase in forest and tree cover are Chhattisgarh (684 sq km) followed by Uttar Pradesh (559 sq km), Odisha (559 sq km) and Rajasthan (394 sq km). ❖ Top three states showing maximum increase in forest cover are Mizoram (242 sq km) followed by Gujarat (180 sq km) and Odisha (152 sq km). ❖ Area wise top three states having the largest forest and tree cover are Madhya Pradesh (85,724 sq km) followed by Arunachal Pradesh (67,083 sq km) and Maharashtra (65,383 sq km).  ❖ In terms of percentage of the forest cover with respect to total geographical area, Lakshadweep (91.33 percent) has the highest forest cover followed by Mizoram (85.34 percent) and Andaman & Nicobar Island (81.62 percent). ❖ The total mangrove cover is 4,992 sq km in the country.

Current Affairs

தமிழகத்தின் பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் நலத் திட்டம்

தமிழக அரசு ஆனது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல் படுத்தப் படும் பல்வேறு நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் வணிக வாகையர் திட்டம் ஆனது, பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோரின் பெரும் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்கிறது. இந்த முன்னெடுப்பின் கீழ் மொத்தம் 1,303 பயனாளிகள் சுமார் 159.76 கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்களைப் பெற்றுள்ளனர்.  அயோத்தி தாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆனது, சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி வழங்கச் செய்வதற்காகவும் செயல்படுத்தப்பட்டது. 2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,966 திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. தொல்குடி திட்டத்தின் கீழ், சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. பழங்குடியின மக்களுக்காக மொத்தம் 3,594 வீடுகள் கட்டப்படும். 117.27 கோடி ரூபாய் செலவில் 120 இடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அறிவு மையங்களை இத்துறை அமைத்துள்ளது. 300 கோடி ரூபாய் செலவில் 60 விடுதிகளும், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளும் கட்டப்பட்டது. வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையையும் இதில் வழங்கப் படுகிறது.

Current Affairs

Welfare scheme for SC/ST in TN 2024

❖ The Tamil Nadu government listed various welfare schemes being implemented by the Adi Dravidar and Tribal Welfare Department. ❖ The Annal Ambedkar Business Champions Scheme is ensuring the very economic development of entrepreneurs belonging to the SC/ST. ❖ A total of 1,303 beneficiaries have received subsidies worth ₹159.76 crore under the initiative. ❖ The Iyothee Thass Pandithar Habitation Development Scheme is implemented to improve amenities such as roads and street lights, and provide drinking water to Adi Dravidar habitations in urban and rural areas. ❖ A total of 1,966 projects had been taken up under the scheme in 2024-25. ❖ Under the Tholkudi scheme, infrastructure would be improved in tribal habitations at a cost of ₹1,000 crore. ❖ A total of 3,594 houses would be constructed for tribal people. ❖ The Department is setting up of knowledge centres for Adi Dravidar and Tribal students in 120 places at a cost of ₹117.27 crore. ❖ It constructed 60 hostels at a cost of ₹300 crore and additional classrooms in Adi Dravidar Welfare Schools. ❖ It is also offering incentives to students pursuing higher education abroad.

Current Affairs

இந்திய மருத்துவத் தொழில்நுட்பத் தொழில் துறை 2024

இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் (CII) 21வது சுகாதார உச்சி மாநாடு ஆனது, "2047 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான - அதாவது விக்சித் பாரத் 2047 - சுகாதாரப் பாதுகாப்பை மாற்றியமைத்தல்" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது. இந்திய மருத்துவச் சாதனங்கள் துறையின் மதிப்பானது சுமார் 14 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு 2030 ஆம் ஆண்டிற்குள் அது 30 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் நான்காவது பெரிய மருத்துவச் சாதன உற்பத்தி சந்தையாக இந்தியா உள்ளது. மேலும், உலகின் முன்னணி 20 உலகளாவிய மருத்துவச் சாதனச் சந்தைகளில் இந்திய நாடும் ஒன்றாக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் மருத்துவச் சாதனப் பூங்காக்களை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் ஆனது 400 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

Current Affairs

Indian Medtech sector 2024

❖ The 21st Health Summit of the Confederation of Indian Industry (CII) was held under the theme of “Transforming Healthcare for Viksit Bharat 2047”. ❖ The Indian medical devices sector is estimated to be around $14 billion and it is expected to grow to $30 Billion by 2030. ❖ India is the fourth largest medical devices market in Asia after Japan, China, and South Korea. ❖ Also, India is among the top 20 global medical devices markets in the world. ❖ The Scheme for Promotion of Medical Devices Parks was launched with a ₹400 crore outlay, providing ₹100 crore each to Uttar Pradesh, Tamil Nadu, Madhya Pradesh, and Himachal Pradesh for infrastructure development.

Current Affairs

e-Shram இணைய தளத்தில் பதிவு

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் e-Shram இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். 2014-15 ஆம் ஆண்டில் சுமார் 15.84 கோடி பேர் பதிவு செய்திருந்தனர், ஆனால் 2023-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 29 கோடியாக உயர்ந்துள்ளது.  e-Shram இணைய தளம் ஆனது, அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கச் செய்வதற்காகவும் அதிகாரமளிப்பதற்காகவும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதிக்குள், e-Shram இணைய தளத்தில் 30,48,02,313 பதிவுகள் பதிவாகியுள்ளன. எனவே, அமைப்புசாராத தொழிலாளர்களின் உலகின் மிகப்பெரிய தரவுதளமாக இது உருவெடுத்துள்ளது.

Current Affairs

E-Shram Portal registration 2024

❖ Over 30 crore labourers have registered on the e-Shram portal in the last three years. ❖ In 2014-15, 15.84 crore people had registered but the number has gone up to over 29 crores in 2023-24. ❖ The E-Shram Portal, to support and empower the unorganized workforce, was Launched by the Ministry of Labour and Employment on 26th August 2021. ❖ By December 19, 2024, the E-Shram portal has 30,48,02,313 registrations. ❖ Thus, it has emerged as the world’s largest database of unorganized workers.