Posts

Current Affairs

பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் மகாராஷ்டிரா

பஞ்சாரா சமூகத்தின் மிகவும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிராவில் உள்ள வாஷிமில் போஹராதேவியில் பஞ்சாரா விராசத் என்ற ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாரா சமூகம் என்பது இராஜஸ்தானைச் சேர்ந்த நாடோடி பழங்குடியினரின் குழு ஆகும் என்பதோடு அக்குழுவினர் தற்போது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடியேறியுள்ளனர்.போஹராதேவி என்ற பகுதியானது இச் சமூகத்தினரால் மிகப் புனிதமான இடமாகக் கருதப் படுவதோடு அவர்கள் அந்தப் பகுதியினை "பஞ்சாரா சமூகத்தின் காசி" என்று குறிப்பிடுகிறார்கள்.  பஞ்சாரா சமூகத்தினர் வரலாற்று ரீதியாக இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள், வணிகர்கள், கால்நடை இனப்பெருக்குனர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வோர் என்ற ரீதியில் காணப்படுகின்றனர்.

Current Affairs

Banjara Virasat Museum - Maharashtra

❖ The Banjara Virasat Museum has been inaugurated in Pohardevi at Washim in Maharashtra to celebrate the rich heritage of the Banjara community ❖ Banjara community is a group of nomadic tribes originally from Rajasthan who have now settled in Karnataka, Andhra Pradesh, Madhya Pradesh, Gujarat and Maharashtra. ❖ Poharadevi is considered a sacred site by the community, they often refer to it as the “Kashi of the Banjara community.” ❖ The Banjaras were historically pastoralists, traders, breeders and transporters of goods in the inland regions of India.

Current Affairs

ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கண்டறிதல்

இந்த முறையானது மீயொலி மூலம் நமது உடலின் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை இரத்தத்தில் வெளியிடப்படும் திவளைகளாக மாற்றுகிறது. இந்தக் குமிழ்களில் RNA, DNA மற்றும் புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் உள்ளன என்ற நிலையில் அவை அறிவியல் ஆய்வாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட வகை புற்றுநோயை அடையாளம் காண வழி வகுக்கின்றன.  உயர் ஆற்றல் கொண்ட மீயொலி ஆனது புற்றுநோய் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை பல்வேறு திவளைகளாக உடைத்து, அவற்றின் உள்ளடக்கங்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடும்.  இந்த வகை சோதனைக்கு நூறு மடங்கு குறைவாகவே, சுமார் 100 டாலர் (8,400 ரூபாய்) மட்டுமே செலவாகும்.

Current Affairs

Cancer detection with sound waves

❖ The method uses ultrasound to turn a small part of our body’s tissue into droplets that are released into the blood. ❖ These bubbles contain the molecules like RNA, DNA, and proteins that allow the scientists to identify particular types of cancer. ❖ The high-energy ultrasound can break off a small piece of cancerous tissue into droplets and release their contents into the bloodstream. ❖ This version of the test would cost a hundred-times less, around $100 (Rs 8,400)

Current Affairs

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024

இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்டு மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சக்தி வாய்ந்த இயந்திரக் கற்றலின் அடிப்படையை உருவாக்கும் பல்வேறு முறைகளை உருவாக்குவதற்காக அவர்கள் இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர். ஜான் ஹாப்ஃபீல்ட் ஓர் இணை நினைவு தொடர்புறு நினைவகத்தை உருவாக்கினார், இதனால் தரவுகளில் உள்ள படங்கள் மற்றும் பிற வடிவங்களைச் சேமித்து அதனை மறு கட்டமைக்க முடியும். ஜெஃப்ரி ஹிண்டன், தரவுகளில் உள்ள பண்புகளைத் தானாகவே கண்டறியும் ஒரு முறையைக் கண்டுபிடித்துள்ளார் என்ற நிலையில், இது படங்களில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காண வழி வகுக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான பரிசு ஆனது எலக்ட்ரான்கள் கொண்டு அவர்கள் ஆற்றியப் படைப்பிற்காக இயற்பியலாளர்களான ஆன் எல்'ஹுல்லியர், பியர் அகோஸ்டினி மற்றும் ஃபெரென்க் க்ராஸ்ஸுக்கு வழங்கப்பட்டது.

Current Affairs

Nobel Prize in Physics 2024

❖ The Nobel Prize in Physics was awarded to John Hopfield and Geoffrey Hinton. ❖ They have used physics tools to develop methods that form the basis of today’s powerful machine learning. ❖ John Hopfield has created an associative memory that can store and reconstruct images and other patterns in data. ❖ Geoffrey Hinton invented a method that can automatically find properties in data, allowing it to identify specific elements in pictures. ❖ The 2023 prize went to physicists Anne L'Huillier, Pierre Agostini, and Ferenc Krausz for their work with electrons.

Current Affairs

நீக்ரோ நதி நீர்மட்டம்

அமேசான் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான நீக்ரோ நதியின் நீர்மட்டம் ஆனது இதுவரை பதிவு செய்யப்படாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. மனௌஸ் என்ற துறைமுகத்தில் நீக்ரோ ஆற்றின் நதியின் நீர்மட்டம் சமீபத்தில் 12.66 மீட்டராக இருந்தது. சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைவான பதிவு இதுவாகும். நீக்ரோ நதி அமேசான் படுகையின் 10 சதவீதப் பகுதிகளுக்கு நீர் வழங்குகிறது, மேலும் நீர் கொள்ளளவின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய நதியாகும். 2250 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதி கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசில் வழியாகச் செல்கிறது.

Current Affairs

First Mpox diagnostic test

❖ WHO has listed the first Mpox in vitro diagnostic under its Emergency Use Listing procedure. ❖ The Alinity m MPXV assay is a real-time PCR test that enables detection of monkeypox virus (clade I/II) DNA from human skin lesion swabs. ❖ Currently, 35 laboratories across India are equipped to test suspected cases of Mpox. ❖ In 2024, over 30,000 suspected cases were reported across the African region.

Current Affairs

Negro River water Level

❖ Negro, One of the Amazon River's main tributaries has dropped to its lowest level ever recorded. ❖ The level of the Negro River at the port of Manaus was at 12.66 metres recently. ❖ Its normal level is about 21 metres. ❖ It is the lowest since measurements started 122 years ago. ❖ The Negro River drains about 10 per cent of the Amazon basin and is the world's sixth-largest by water volume. ❖ The 2250 Km long river passes through Colombia, Venezuela, and Brazil.

Current Affairs

குரங்கம்மையினைக் கண்டறியும் முதல் சோதனை

உலக சுகாதார அமைப்பானது அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கான மருந்துகளின் பட்டியலில், குரங்கம்மையினைக் கண்டறியும் முதல் ஆய்வகச் சோதனை முறையினைப் பட்டியலிட்டுள்ளது.  அலினிட்டி m MPXV மதிப்பீடு என்பது நிகழ்நேர PCR சோதனையாகும் என்பதோடு இது மனிதத் தோல் புண் மாதிரிகளில் இருந்து குரங்கம்மை வைரஸ் (வகை I/II) டிஎன்ஏவை கண்டறிய உதவுகிறது. தற்போது, இந்திய நாடு முழுவதிலும் சுமார் 35 ஆய்வகங்களில், சந்தேகத்திற்கிடமான குரங்கம்மை பாதிப்புகளைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கப் பிராந்தியம் முழுவதும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.