Posts

Current Affairs

பசுமை கண்துடைப்பு வழிகாட்டுதல்கள்

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமானது (CCPA), பசுமை கண்துடைப்பு அல்லது தவறான சுற்றுச்சூழல் காப்பு கோரல்களைத் தடுப்பதற்கும் அவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவதற்குமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் வழிகாட்டுதல்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான விளம்பரங்களில் பசுமை கண்துடைப்பு செய்யப்பட்டுவதைத் தடுக்கும். 2022 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, பல்வேறு தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரங்களைத் தடுப்பதற்கும், தவறான விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தடுப்பதற்காகவும் தற்போதுள்ள வழிகாட்டுதல்களை இந்தப் புதிய விதிமுறைகள் நன்கு பூர்த்தி செய்யும். பசுமை கண்துடைப்பு என்பது நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது நாடுகள் தனது செயல்பாடுகள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவோ அல்லது பருவநிலைக்கு நன்கு ஏற்றதாகவோ இருப்பதாக நம்பமுடியாத அல்லது சரி பார்க்கப் படாத உரிமைகோரல்களை உருவாக்கும் போக்கைக் குறிக்கிறது. "தூய்மையானது", "பசுமை முறையில் தயாரிக்கப்பட்டது", "சுற்றுச்சூழலுக்கு உகந்தது", "புவிக்கு தீங்கற்றது", "விலங்குகள் மீது பரிசோதிக்கப்படாதது", "கார்பன் நடுநிலைத் தன்மை கொண்டது", "இயற்கையானது", "கரிமமற்றது", "சுற்றுச் சூழலுக்கு தீங்கற்றது" அல்லது இது போன்ற பொதுவான சொற்கள், அந்த நிறுவனத்தினால் அந்தக் கோரல்களை பெரும் ஆதாரத்துடன் நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஒரு தயாரிப்புக்கான விளக்க விவரங்களில் பதிவிட அனுமதிக்கப்படும்.

Current Affairs

Greenwashing Guidelines

❖ The Guidelines for Prevention and Regulation of Greenwashing or Misleading Environment Claims were issued by the Central Consumer Protection Authority (CCPA). ❖ Its guidelines are limited to curbing greenwashing in advertisements of products or services. ❖ The new norms would complement the existing Guidelines for Prevention of Misleading Advertisements and Endorsement for Misleading Advertisements, framed in 2022 ❖ Greenwashing refers to the growing tendency of companies, organisations or even countries to make dubious or unverifiable claims about their activities, products or services being environment-friendly or climate-friendly. ❖ Generic terms like “clean”, “green”, “eco-friendly”, “good for planet”, “cruelty-free”, “carbon neutral”, “natural”, “organic”, “sustainable”, or similar other descriptions for a product would be allowed only if the company is able to substantiate these with evidence.

Current Affairs

நைல் நதிப் படுகை கூட்டுறவு கட்டமைப்பு ஒப்பந்தம்

நைல் நதியின் நீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆனது எகிப்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.  நைல் நதிப்படுகை முன்னெடுப்பு ஆனது, 10 நதிக் கரையோர நாடுகளின் கூட்டணி ஆகும் என்பதோடு இதன் தலைமையிடம் உகாண்டாவின் என்டெபே எனுமிடத்தில் அமைந்துள்ளது. நைல் நதியானது, 11 நாடுகளில் பரவி விரிந்து பாய்கிறது, ஆனால் இதில் ஐந்து நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.  எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை. அவை இரண்டும் கிராண்ட் எத்தியோப்பிய ரினையசன்ஸ் அணை (GERD) தொடர்பாக நைல் நதியின் நீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆனது எகிப்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.  நைல் நதிப்படுகை முன்னெடுப்பு ஆனது, 10 நதிக் கரையோர நாடுகளின் கூட்டணி ஆகும் என்பதோடு இதன் தலைமையிடம் உகாண்டாவின் என்டெபே எனுமிடத்தில் அமைந்துள்ளது. நைல் நதியானது, 11 நாடுகளில் பரவி விரிந்து பாய்கிறது, ஆனால் இதில் ஐந்து நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை. அவை இரண்டும் கிராண்ட் எத்தியோப்பிய ரினையசன்ஸ் அணை (GERD) தொடர்பாக

Current Affairs

Nile River Basin Cooperative Framework Agreement

❖ The multinational agreement is regulating the use of the Nile River’s waters has officially entered into force, despite strong opposition from Egypt. ❖ The Nile Basin Initiative is a partnership of 10 riparian countries headquartered in Entebbe, Uganda. ❖ The Nile is spanning 11 countries but only five countries signed and ratified the treaty. ❖ Egypt and Sudan have yet to sign the agreement. ❖ They both have long been embroiled in a dispute with Ethiopia over the Grand Ethiopian Renaissance Dam (GERD). ❖ The GERD, a massive hydropower project on the Blue Nile, is providing electricity to Ethiopia’s 120 million citizens. ❖ Egypt views the dam as an existential threat, as the Nile supplies 97 percent of its water needs. ❖ The Nile Basin Initiative includes Burundi, the Democratic Republic of Congo, Egypt, Ethiopia, Kenya, Rwanda, South Sudan, Sudan, Tanzania, and Uganda, while Eritrea participates as an observer

Current Affairs

ShakthiSAT திட்டம் 2024

விண்வெளி சார் புத்தொழில் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா "ShakthiSAT" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 108 நாடுகளில் சுமார் 12,000 சிறுமிகளுக்கு விண்வெளித் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிப்பதற்கான உலகளாவியத் திட்டமாகும். இது இஸ்ரோவின் சந்திரயான்-4 என்ற திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள் ஏவுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு (14 முதல் 18 வயது வரை) 120 மணி நேர இயங்கலை வழி பயிற்சி வழங்குவதை உள்ளடக்கியுள்ளது. இது விண்வெளித் தொழில்நுட்பம், விண்கல கருவிப் பொருட்கள் உருவாக்கம் மற்றும் விண்கல அமைப்புகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கும்.

Current Affairs

Shakthi SAT Mission 2024

❖ Aerospace startup Space Kidz India has launched "Shakthi SAT". ❖ It is a global mission to train about 12,000 girls across 108 countries on space technology. ❖ It is aiming for a satellite launch under ISRO's Chandrayaan-4 mission. ❖ The mission includes 120 hours of online training for high school girl students (aged 14-18). ❖ It will teach them about various aspects of space technology, payload development, and spacecraft systems

Current Affairs

e-Migrate இணைய தளம் v2.0

இந்தியாவானது புதுப்பிக்கப்பட்ட e-Migrate இணைய தளம் மற்றும் கைபேசிச் செயலி v2.0 ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெளிநாடு செல்லும் இந்தியத் தொழிலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான, மிக வெளிப்படையான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய வகையிலான தொழிலாளர் இடம் பெயர்வினை நோக்கிய ஒரு படிநிலையைக் குறிக்கிறது.  இது ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் பொறுப்பான இடம்பெயர்வுகளைப் பெருமளவில் ஊக்குவிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் 10வது நிலையான மேம்பாட்டு இலக்கு உடன் ஒருங்கிணைகிறது.

Current Affairs

e-Migrate Portal v2.0

❖ India launched the updated e-Migrate portal and mobile app version 2.0. ❖ It is marking a step towards safer, transparent, and inclusive labour mobility for Indian workers going abroad. ❖ It aligns with the United Nations' Sustainable Development Goal 10, promoting orderly and responsible migration.

Current Affairs

ஐந்தாவது தேசிய நீர் விருதுகள் 2023

ஐந்தாவது தேசிய நீர் விருதுகளின் (2023) வெற்றியாளராக ஒடிசா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், குஜராத் மற்றும் புதுச்சேரி இணைந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. * இந்த விருதானது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள நீர்ப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மிகவும் சிறந்தப் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கியது. * சிறந்த முறையில் நீரைப் பயன்படுத்தும் சங்கம் பிரிவில், புதுக்கோட்டையில் உள்ள பரம்பூர் ஏரி நீர் பயன்பாட்டுச் சங்கம் மூன்றாம் பரிசைப் பெற்றது. கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது, மிகவும் சிறந்த நிறுவனம் (பள்ளி/கல்லூரி தவிர) பிரிவில் முதல் பரிசைப் பெற்றது. * சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது சிறந்த நிறுவனம் (பள்ளி/கல்லூரி தவிர) பிரிவில் மூன்றாம் பரிசை வென்றது. சிறந்த தொழில் துறைப் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்ட அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் (ADL) நிறுவனம் 2வது பரிசை வென்றது.

Current Affairs

5th National Water Awards 2023

❖ Odisha has been selected as the winner of the 5th National Water Awards 2023. ❖ UP is securing the second spot, and Gujarat and Puducherry jointly securing the third spot. ❖ The award covers nine categories, honouring outstanding contributions to water conservation and management across India. ❖ Parambur Big Tank Water User Association, Pudukkotai won third prize in Best Water User Association category. ❖ Tamil Nadu Agricultural University, Coimbatore Won 1st Prize in Best Institution (Other Than School/College) Category. ❖ IIT Madras has won third prize in Best Institution (Other Than School/College) Category. ❖ Apollo tyres limited (ATL), Kanchipuram won 2nd prize in best industry category.