Posts

Current Affairs

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024

பொருளாதாரத்திற்கான நோபல் நினைவு பரிசு ஆனது, பல்வேறு நாடுகளுக்கு இடையேயான செழுமையின் வேறுபாடுகள் குறித்த பெரும் ஆராய்ச்சிக்காக டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் A ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஒரு நாட்டின் செழுமைக்குச் சமூக நிறுவனங்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை அவர்கள் நிரூபித்துள்ளனர்.  மோசமான சட்ட ஆட்சியைக் கொண்ட சமூகங்கள் மற்றும் மக்களைச் சுரண்டும் கட்டமைப்புகள் வளர்ச்சியையோ அல்லது மிகவும் நல்ல மாற்றத்தையோ உருவாக்கச் செய்வது இதில்லை. அசெமோக்லு மற்றும் ஜான்சன் ஆகியோர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணிபுரிகின்ற நிலையில் ராபின்சன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். பொருளாதாரத்திற்கான இந்தப் பரிசு ஆனது தொழில்நுட்ப ரீதியாக நோபல் பரிசாகக் கருதப் படாவிட்டாலும், இந்த விருதானது எப்போதும் மற்ற நோபல் பரிசு விருதுகள் அறிவிப்புடன் சேர்த்தே வழங்கப்படுகிறது.

Current Affairs

Nobel in Economics 2024

❖ The Nobel Memorial Prize in economics was awarded to Daron Acemoglu, Simon Johnson and James A Robinson for their research into differences in prosperity between nations. ❖ They have demonstrated the importance of societal institutions for a country’s prosperity. ❖ Societies with a poor rule of law and institutions that exploit the population do not generate growth or change for the better. ❖ Acemoglu and Johnson work at the Massachusetts Institute of Technology while Robinson is a researcher at the University of Chicago. ❖ Even though this prize for economics is not technically a Nobel Prize, it has always been presented along with others.

Current Affairs

இந்தியா - கனடா இடையேயான அரசுமுறை நெருக்கடி

இந்தியாவினால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஆம் ஆண்டில் கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு இந்திய உளவுத்துறை மீது கனடா குற்றம் சாட்டியது. தற்போது நிலவி வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கனடா 41 தூதரக அதிகாரிகளைஇந்தியாவில் இருந்து திரும்ப வரவழைத்தது. * சமீபத்தில், உயர் ஆணையர் உள்ளிட்ட ஆறு இந்தியத் தூதர்களை வெளியேற்றுவதாக கனடா அறிவித்தது. * இது டெல்லியில் உள்ள கனடா நாட்டின் ஆறு உயர் ஆணைய உறுப்பினர்களை வெளியேற்ற உள்ளதாக இந்தியா முடிவெடுப்பதற்கு வழி வகுத்தது.

Current Affairs

India – Canada Diplomatic crisis 2024

❖ Khalistani extremist Hardeep Singh Nijjar, who India designated as a terrorist, is shot dead in British Columbia of Canada in 2023. ❖ Canada accused Indian intelligence for this incident. ❖ Canada have withdrawn 41 diplomats from India amid the ongoing dispute. ❖ Recently, Canada announced the expulsion of six Indian diplomats, including the high commissioner. ❖ This led to India announcing the expulsion of six members of the Canadian high commission in Delhi.

Current Affairs

TDP1 நொதிகள்

கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் (IACS) அறிவியல் ஆய்வாளர்கள், டைரோசில்-DNA பாஸ்போடையீஸ்ட்டிரேஸ் 1 (TDP1) எனப்படும் டிஎன்ஏ மறுசீரமைப்பு நொதியைத் தூண்டுவிப்பதன் மூலம் ஒரு புதிய சிகிச்சை முறையினை அடையாளம் கண்டுள்ளனர். * தற்போது பயன்பாட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. புற்றுநோய் செல்கள் ஆனது பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்குவதால், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சில மாற்று சிகிச்சை உத்திகளைக் கண்டறிய இது வழி வகுக்கிறது. TDP1 நொதியினைத் தூண்டுவதன் மூலமான Top1 நொதியை இலக்காகக் கொண்ட கீமோதெரபி சிகிச்சையில் இருந்து தப்பும் புற்றுநோய் செல்கள் உயிரணுப் பிரிகையின் போது சேதமடைந்த டிஎன்ஏவை சரி செய்ய உதவும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த செயல்முறையானது புற்றுநோய் செல்கள் கீமோதெரபி சிகிச்சையின் சில விளைவுகளை எதிர்க்கவும், தொடர்ந்து பெருகவும் வழி வகுக்கிறது.

Current Affairs

TDP1 enzyme

❖ The Scientists from the Indian Association for the Cultivation of Science (IACS), Kolkata, have identified a new therapeutic target by activating a DNA repair enzyme called Tyrosyl-DNA phosphodiesterase 1 (TDP1). ❖ Current anticancer drugs like Camptothecin, Topotecan, and Irinotecan focus on inhibiting the enzyme Topoisomerase 1 (Top1). ❖ Cancer cells often develop resistance to these drugs, leading the researchers to explore alternative treatment strategies. ❖ The researchers have discovered that cancer cells can survive Top1-targeted chemotherapy by activating TDP1, which helps repair damaged DNA during cell division. ❖ This process allows the cancer cells to counteract the effects of chemotherapy and continue proliferating.

Current Affairs

பாலினத்திற்கு ஏற்றப் பருவநிலைக் கொள்கைகள்

உலகளவில் பாலினத்திற்கு ஏற்ற பருவநிலை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. பாரீஸ் உடன்படிக்கையின் 81 சதவீத ஒப்பந்தத் தரப்பினர் அவற்றின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDC) பாலினம் சார்ந்த பல நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளனர். இன்று வரை, 195 ஒப்பந்ததாரர்களின் மொத்த NDC பங்களிப்புகளின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது. * 62.3 சதவீத நாடுகள் அனைத்துப் பருவநிலை நடவடிக்கைகளிலும் பாலினத்தினைக் கருத்தில் கொள்வதை நெறிப்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன் வைத்துள்ளன. * 11.5 சதவீத நாடுகள், தகவமைப்பு நடவடிக்கையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை ஆதரிப்பதில் ஈடுபட்டுள்ள பாலினச் சமச்சீர் குழுக்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளை முன் வைத்துள்ளன. சுமார் 55.7 சதவீத நாடுகள் பாலினச் சமத்துவத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. பிராந்தியத்தைப் பொறுத்து, வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகள் தற்போது 45-80 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் பெண் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Current Affairs

Gender-Responsive Climate Policies

❖ There has been a rise in gender-responsive climate policies and actions globally. ❖ Around 81 per cent of the Parties to the Paris Agreement referred to gender in their Nationally Determined Contributions (NDC). ❖ Till that date, the total number of NDCs of 195 Parties was 168. ❖ 62.3 per cent described efforts to strengthen institutional mechanisms for mainstreaming gender considerations across climate action. ❖ Some 11.5 per cent described initiatives aimed at increasing the gender balanced groups engaged to support monitoring and evaluation of adaptation action. ❖ Around 55.7 per cent affirmed their commitment to gender equality. ❖ Women farmers currently account for 45-80 per cent of all food production in developing countries depending on the region. ❖ About two-thirds of the female labour force in developing countries and more than 90 per cent in many African countries are engaged in agricultural work.

Current Affairs

2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான மின் தேவை

2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது 6.2% அதிகரித்து 68,967 மில்லியன் அலகுகளாக (MU) உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த மின் தேவையானது 64,958 MU ஆக இருந்தது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில், மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையானது 20,784 மெகாவாட்டாக இருந்தது என்ற நிலையில் இது கடந்த ஆண்டில் இதன் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் 19,045 மெகாவாட்டாக இருந்தது. இந்தியாவில் உள்ள மொத்தத் தொழிற்சாலைகளில், 15.66 சதவீதப் பங்குடன் (2,53,334) தமிழகம் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில், மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற எப்போதும் இல்லாத அளவினை எட்டிய மாநிலத்தின் மின் தேவையானது ஒரு புதிய சாதனை அளவினை எட்டியது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு அளவானது 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த நிறுவப் பட்ட மின் உற்பத்தி திறன் 41, 126.68 மெகாவாட் ஆகும்.

Current Affairs

Power demand in first half 2024-25

❖ Tamil Nadu’s power demand increased 6.2% to 68,967 million units (MU) in the first half of the financial year 2024-25. ❖ It was 64,958 MU in the same period last year. ❖ During the April-September period in 2024, the State saw a peak power demand of 20,784 MW as against 19,045 MW in the comparable period last year. ❖ The State has the highest number of factories, accounting for 15.66% of the total number of factories in India (2,53,334). ❖ During summer this year, the State’s power demand hit a new record, touching an all-time-high of 20,830 MW on May 2. ❖ The daily consumption hit a new high of 454.32 MU on April 30. ❖ Tamil Nadu’s total installed power capacity was 41,126.68 MW, as on September 30, 2024.