Posts

Current Affairs

UDAN திட்டத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு

UDAN திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தப்பட்டது. UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) என்பது பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும், விமானச் சேவையினை மலிவு விலையிலானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 601 வழித்தடங்களும் 71 விமான நிலையங்களும் செயல் பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 71 விமான நிலையங்கள், 13 ஹெலிபோர்ட்கள் (ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்) மற்றும் 2 நீர் வழி இயங்கும் விமானங்கள் என மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் சுமார் 74 ஆக இருந்த செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 157 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Current Affairs

8 years of UDAN

❖ The UDAN scheme was introduced on October 21, 2016. ❖ UDAN (Ude Desh ka Aam Nagrik) is aimed at enhancing regional air connectivity and making flying more affordable. ❖ As many as 601 routes and 71 airports have been operationalised under the UDAN scheme. ❖ A total of 86 aerodromes, comprising 71 airports, 13 heliports, and 2 water aerodromes have been operationalised. ❖ The number of operational airports in the country has doubled from 74 in 2014 to 157 in 2024

Current Affairs

விஜயநகரப் பேரரசு கால செப்புத் தகடுகள்

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் இரண்டு பிரசுரங்கள் கொண்ட செப்புத் தகடு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன. இது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு ஆனது சமஸ்கிருதம் மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்டதாகும். இது 1513 ஆம் ஆண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பொறிக்கப்பட்டது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசலப்பட்டகா கிராமம் பரிசாக வழங்கப்பட்டுள்ள ஒரு தகவலானது இந்தத் தகடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Current Affairs

Copper plates from Vijayanagara Kingdom

❖ A set of copper plate inscriptions with two leaves have been discovered at the Sri Singeeswarar temple at Mappedu village in Tiruvallur district. ❖ It is dating back to the 16th Century CE. ❖ The inscription was written in Sanskrit and Nandinagari script. ❖ It was engraved in 1513 during the reign of King Krishandevaraya. ❖ The plates recorded the gift of a village Vasalabattaka, renamed Krishnarayapura, to several Brahmins by the king.  

Current Affairs

செம்பழுப்பு நிற வால் கொண்ட பாறை பூங்குருவி

 கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் செம்பழுப்பு நிற வால் கொண்ட பாறை பூங்குருவி (மான்டிகோலா சாக்சடிலிஸ்) தென்பட்டுள்ளது. இப்பறவையானது தமிழ்நாட்டில் தென்படுவது இது முதல் முறையாகும்.  இதற்கு முன்னதாக, இந்தப் பறவையானது கேரளாவில் சில முறையும், பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் அவற்றின் வலசை போதல் நிகழ்வின் போது தென்பட்டது. இவை தெற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியா முதல் வடக்கு சீனா வரையிலான சில பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இனப்பெருக்கம் செய்யாதப் பருவங்களில் அவை ஆப்பிரிக்காவிற்கு பெரும் வலசை போகின்றன.

Current Affairs

Rufous-tailed rock thrush

❖ Rufous-tailed rock thrush (Monticola saxatilis) was spotted in Kanniyakumari Wildlife Sanctuary. ❖ This is the first record of the bird in Tamil Nadu. ❖ Earlier, the bird has been spotted a few times in Kerala and largely on northwestern parts of India during migration. ❖ They breed in Southern Europe across Central Asia to Northern China. ❖ It migrates to Africa during the non-breeding season

Current Affairs

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி

இந்தியத் தலைமை நீதிபதியான D.Y. சந்திரசூட் அவர்கள், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தற்போதையத் தலைமை நீதிபதி நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். * நீதிபதி கண்ணா 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றவில்லை. அவர் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளார்.

Current Affairs

Next Chief Justice of India 2024

❖ Chief Justice of India D.Y. Chandrachud has recommended the Justice Sanjiv Khanna to the government for appointment as the 51st Chief Justice of India. ❖ Current CJI is scheduled to retire on November 10. ❖ Justice Khanna did not serve as the chief justice of any high court before his appointment as a judge in the Supreme Court in January 2019. ❖ He is due to retire on May 13, 2025

Current Affairs

தமிழக அரசின் எண்ணெய் கசிவு எதிர் நடவடிக்கைத் திட்டம் 2024

தமிழக அரசானது, இத்தகைய பேரிடர்களைத் தணிப்பதற்காக வேண்டி ஓர் எதிர் நடவடிக்கைத் திட்டத்தினை இறுதி செய்துள்ளது. நான்கு கடலோர மாவட்டங்கள் ஆனது எண்ணெய் கசிவு நிகழ்வினால் 'மிக அதிக அளவில்' பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான எந்தவிதமான பெரும் பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தாமல், எண்ணெய்க் கசிவினால் மாசுபட்ட வாழ்விடத்தை அல்லது கரையோரப் பகுதிகளை அதன் முந்தைய நிலைக்கு என்று மீட்டு கொண்டு வருவதற்குத் தேவையானப் படிநிலைகள் மற்றும் நடைமுறைகளை இந்தத் திட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது மாநிலத்தின் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் (24 கிலோ மீட்டர்) தொலைவு வரையிலான கடல் பரப்பில் ஏற்படும் எந்த வகையான கடல் எண்ணெய்ப் பெரும் கசிவுகளுக்குமான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப் பட்டு உள்ளது. இது 40 கிலோ மீட்டர் நிலப்பரப்பு அல்லது அலை ஒதத்தின் தாக்கங்கள் காணப்படக் கூடிய இடம், இவற்றுள் எது அதிகமான தூரமோ அது வரை நீண்டு அமைந்திருக்கும் நதி நீர் அமைப்புகளையும் உள்ளடக்கியது. இதன்படியாக, மன்னார் வளைகுடா, எண்ணூர் மற்றும் பிச்சாவரம் சதுப்புநிலங்கள் உள்ளிட்ட கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Current Affairs

Tamil Nadu’s Oil Spill Contingency Plan 2024

❖ The Tamil Nadu government has finalised a contingency plan to mitigate such disasters. ❖ Four coastal districts are being identified as ‘very high’ risk for oil spills. ❖ This plan outlines the necessary steps and procedures for restoring an oilcontaminated habitat or shoreline to its original state without causing any adverse impacts on natural resources and the environment. ❖ It is intended for responding to marine oil spills of any type that occur within 12 nautical miles (24 km) off the State’s coastline. ❖ It also includes riverine systems extending 40 km inland or to the point where tidal effects are noticeable, whichever distance is greater. ❖ As per the plan, coastal ecosystems including the Gulf of Mannar, Ennore, and Pichavaram Mangroves are prioritized.