Posts

Current Affairs

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024

2024 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசானது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அவரது வரலாற்று அதிர்ச்சி நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான உணர்ச்சி மிக்க கவிதை வழி உரைநடைக்காக வழங்கப்பட்டுள்ளது. அவரது மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பான "Human Acts" (2014) இலக்கியத்திற்கான அவரது அணுகுமுறையை எடுத்துரைக்கிறது. இந்தப் புதினம் என்பது 1980 ஆம் ஆண்டின் குவாங்ஜு எழுச்சியின் மீதான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஹானின் சிறுகதையான "Europa (2012) மேலும் அவரது இலக்கியத் திறனை வெளிப் படுத்துகிறது. அவரது "The Vegetarian" (2007) புத்தகமானது 2016 ஆம் ஆண்டில் மேன் புக்கர் சர்வதேசப் பரிசை வென்றது. 1901 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆனது 116 முறை 120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Current Affairs

Nobel Prize 2024 in Literature

❖ The 2024 Nobel Prize has been awarded for the Literature to South Korean author Han Kang. ❖ It is recognizing her "intense poetic prose that confronts historical traumas and exposes the fragility of human life." ❖ Her another most notable works, "Human Acts" (2014), exemplifies her approach to literature. ❖ The novel is rooted in the real-life Gwangju Uprising of 1980. ❖ Han's short story "Europa" (2012) further showcases her literary prowess. ❖ Her "The Vegetarian" (2007) won the Man Booker International Prize in 2016. ❖ The Nobel Prize in Literature has been awarded 116 times to 120 Nobel Prize laureates between 1901 and 2023.

Current Affairs

தேசியக் கடல்சார் பாரம்பரியங்களுக்கான வளாக மேம்பாடு

குஜராத்தில் உள்ள லோத்தல் நகரில் தேசியக் கடல்சார் பாரம்பரியங்கள் வளாகத்தினை (NMHC) உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தத் திட்டத்தின் 18 மற்றும் 2 ஆம் கட்டங்களுக்கு அமைச்சரவை கொள்கை சார் ஒப்புதலையும் வழங்கியுள்ளது. NMHC அருங்காட்சியகத்தின் 1A கட்டமானது ஆறு காட்சியகங்களைக் கொண்டு இருக்கும் என்பதோடு இதில் இந்தியாவின் மிகப்பெரியதாக அமைய உள்ள இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் காட்சியகமும் இடம் பெற்றிருக்கும். NMHC அருங்காட்சியகத்தின் 18 கட்டம் ஆனது மேலும் எட்டு காட்சியகங்களையும் உலகின் மிகவும் உயரமானதாக அமையக் கூடிய வகையிலான கலங்கரை விளக்க அருங்காட்சியகத்தினையும் கொண்டிருக்கும்.

Current Affairs

National Maritime Heritage Complex Development

❖ The Union Cabinet approved the development of the National Maritime Heritage Complex (NMHC) at Lothal in Gujarat. ❖ The Cabinet has also accorded in-principal approval for Phases 1B and 2 of the projects. ❖ Phase 1A will have the NMHC museum with six galleries, including an Indian Navy and Coast Guard gallery envisaged to be one of the largest in the country. ❖ Phase 1B will see NMHC museum getting eight more galleries, and the Light House Museum which is planned to be world’s tallest.

Current Affairs

ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேர்தல்

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. * 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓர் ஒன்றியப் பிரதேசமாகவும், 370வது சரத்து நீக்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து வரலாறு படைத்துள்ளது. அங்கு பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு & காஷ்மீரின் 90 இடங்களில், NC கட்சி மற்றும் காங்கிரஸ் 49 இடங்களிலும், பா.ஜ.க 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

Current Affairs

Haryana and Jammu & Kashmir elections

❖ The alliance of the National Conference (NC) and Congress has won the Jammu and Kashmir assembly polls. ❖ This is the first assembly elections since 2014, first as a Union Territory and first after the removal of Article 370. ❖ In Haryana, the BJP has created history by retaining the state for the record consecutive third term. ❖ The BJP has won 48 seats while the Congress has secured 37. ❖ In J&K's 90 seats, the NC and Congress have won in 49, the BJP in 29 and the PDP in three.

Current Affairs

கருவிழித் தொற்றுப் பாதிப்பு இல்லாத இந்தியா

இந்தியாவானது கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனை என்பதில்லிருந்து நீக்கியதன் மூலம், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாக மாறியுள்ளது. கருவிழித் தொற்றுப் பாதிப்பு (ட்ரக்கோமா) என்பது க்ளமிடியா ட்ரக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் அதிகத் தொற்றுத்திறன் மிக்க பாக்டீரியக் கண் தொற்று ஆகும். இது ஒரு காலத்தில் இந்தியாவில், குறிப்பாக மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் வாழும் பின்தங்கியச் சமூகங்களில் ஏற்பட்ட பார்வை இழப்பிற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது. ட்ரக்கோமாவினை ஒழிப்பதற்கான இந்தியாவின் பணிகள் ஆனது 1963 ஆம் ஆண்டில் தேசியக் கருவிழித் தொற்றுப் பாதிப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொடக்கத்துடன் தொடங்கியது. 1971 ஆம் ஆண்டில், கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் ஏற்பட்ட பார்வை இழப்பு 5% ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, உலகளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Current Affairs

Trachoma Free India

❖ India has eliminated trachoma as a public health problem, becoming the third country in the South-East Asia region to reach this milestone. ❖ Trachoma is a highly contagious bacterial eye infection caused by Chlamydia Trachomatis. ❖ It was once a leading cause of blindness in India, particularly in underprivileged communities living in poor environmental conditions. ❖ India’s works against trachoma began in 1963 with the launch of the National Trachoma Control Program. ❖ In 1971, blindness due to Trachoma stood at 5%, but now that figure dropped to less than 1%.

Current Affairs

CyStar முன்னெடுப்பு

* சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, இந்தியாவின் இணைய வெளிப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக இணையவெளிப் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையத்தினை (CyStar) நிறுவி உள்ளது. இது நிதி, சுகாதாரம், வாகனம் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகளில் அதிகரித்து வரும் இணைய வெளிப் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும். செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினி உருவாக்கத்திற்கு முந்தையச் சகாப்தத்தால் ஏற்பட்ட அதிகரித்து வரும் இணைய வெளிப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான, பன்முக உத்தியை CyStar உருவாக்கும்.

Current Affairs

CyStar initiative

❖ IIT Madras has established the Centre for Cybersecurity, Trust, and Reliability (CyStar) to bolster India's cybersecurity capabilities. ❖ It will focus on both fundamental and applied research, addressing the growing cybersecurity needs of critical sectors such as finance, healthcare, automotive, and electronics. ❖ CyStar will develop a comprehensive, multi-faceted strategy to address the emerging cybersecurity challenges driven by artificial intelligence and the pastquantum era.