Posts

Current Affairs

இந்திய ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி

இந்திய அரசானது, மொரீஷியஸ் நாட்டு அரசுக்கு 487.60 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான ஒரு அனுமதியினை வழங்கியுள்ளது. எந்தவொரு நாட்டிற்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட முதல் ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி இதுவாகும். இது இந்திய மேம்பாட்டு மற்றும் பொருளாதார உதவித் திட்டத்தின் (IDEAS) கீழ் திட்ட நிதியுதவிக்காக வழங்கப்படுகிறது. IDEAS என்ற முன்னெடுப்பானது, சலுகைக் கடன்கள் மூலம் பங்குதார நாடுகளில் மேற் கொள்ளப் படும் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்கிறது. இந்தத் திட்டத்திற்கு பாரத் ஸ்டேட் வங்கி சலுகை அடிப்படையில் நிதியளிக்கும்.

Current Affairs

INR denominated Line of Credit

❖ India has extended a new Line of Credit worth Rs 487.60 crore to the Government of Mauritius. ❖ This marks the first-ever rupee-denominated Line of Credit extended by India to any country. ❖ This is provided for project financing under the Indian Development and Economic Assistance Scheme (IDEAS). ❖ The IDEAS initiative supports the developmental projects in partner countries through concessional loans. ❖ The project will be financed by the State Bank of India on concessional terms.

Current Affairs

SARTHI அமைப்பு

கலப்பு வகைக் கட்டுப்பாடுகள் கொண்ட மற்றும் நுண்ணறிவு (SARTHI) அமைப்புடன் கூடிய சூரிய உதவியில் இயங்கும் குளிர்பதனக் கொள்கலன் போக்குவரத்து அமைப்பு ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குண்ட்லியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தினால் (NIFTEM-K) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருட்களின் போக்குவரத்தில், அறுவடைக்குப் பின்னதாக ஏற்படும் இழப்புகளைக் குறைக்க இது மிகவும் ஒரு புதுமையான தீர்வாக அமையும். இது பழங்கள் மற்றும் காய்கறிகளை அவற்றின் தனிப்பட்ட சேமிப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெவ்வேறு வெப்ப நிலையில் சேமிப்பதற்காக என்று நன்கு வடிவமைக்கப் பட்ட இரட்டை பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு ஆனது, உணவுப் பொருட்களின் சேமிப்புக் காலத்தினை நீட்டிக்க உதவுகிறது என்பதோடு குளிரால் ஏற்படும் அழுகல் அல்லது ஈரப்பதம் இழப்பினால் ஏற்படும் இழப்புகளையும் இது குறைக்கிறது.

Current Affairs

SARTHI System

❖ The Solar Assisted Reefer Transportation with Hybrid Controls and Intelligence (SARTHI) system was introduced recently. ❖ It has introduced by the National Institute of Food Technology Entrepreneurship and Management, Kundli (NIFTEM-K). ❖ It is an innovative solution to reduce post-harvest losses in perishable food transportation. ❖ It features dual compartments designed to store fruits and vegetables at different temperatures, addressing their unique storage needs. ❖ This design helps to extend shelf life and reduces losses due to chilling injury or moisture loss.

Current Affairs

இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனங்கள்

சென்னையில் பெண்களுக்காகப் பெண்களால் இயக்கப்படும் 'பிங்க் ஆட்டோரிக்சா - இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனங்களை' வாங்குவதற்கு தமிழக அரசு பகுதி அளவு நிதியுதவி அளித்துள்ளது.  இது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் வசிக்கும் 250 பெண்களுக்கு CNG/கலப்பு வகை எரிபொருளில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியமாக அரசு வழங்கும். 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் படும்.  இதன்படி விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும், என்பதோடு SSLC (இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Current Affairs

Pink Auto rickshaws

❖ The Tamil Nadu government partially funded ‘pink autorickshaws’ that will be operated by women for women in Chennai. ❖ It aims to ensure the safe travel of women and children. ❖ The government will provide 1 lakh each as a grant to 250 women residing in Chennai to buy CNG/hybrid autorickshaws. ❖ Women in the age group of 25-45 can apply for the scheme, and priority would be given to widows and destitute women. ❖ The applicants should be residents of Chennai, should have passed the SSLC examination and possess a driving licence.

Current Affairs

உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கை 2024 - WTO

உலக வர்த்தக அமைப்பானது உலக வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சியானது 3.3 சதவீதமாக இருக்கும் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டினை 2025 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துக் கணித்து கூறியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், 2.6 சதவீதமாக கூறப்பட்ட வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சிக்கான முன் கணிப்பினை 2.7 சதவீதமாக WTO அமைப்பு உயர்த்தியது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருடாந்திர 2.3 சதவீத அதிகரிப்பு பதிவாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வணிகப் பொருட்களின் வர்த்தகத்தில் ஐரோப்பா தொடர்ந்து அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பிற ஆசியப் பொருளாதாரங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Current Affairs

Global Trade outlook and statistics report 2024 - WTO

❖ WTO revised downwards its projection of world merchandise trade growth to 3 per cent in 2025, from its earlier estimate of 3.3 per cent. ❖ For 2024, the WTO revised upwards its forecast for merchandise trade growth to 2.7 per cent, up from the previous estimate of 2.6 per cent. ❖ The first half of 2024 saw 2.3 per cent year-on-year increase. ❖ Europe has continued to weigh heavily on global merchandise trade in 2024. ❖ Singapore, Malaysia and other Asian economies, including India and Vietnam, show stronger growth.

Current Affairs

16வது BRICS உச்சி மாநாடு

16வது BRICS உச்சி மாநாடு ஆனது, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது.  5 ஆண்டுகளுக்குப் பிறகு, BRICS உச்சி மாநாட்டையொட்டி, நடைபெற்ற அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்புச் சந்திப்பில் இந்தியா பங்கேற்றது. BRICSசின் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் கலந்து கொண்டார். இந்த உச்சி மாநாடு கசான் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுடன் முடிவடைந்தது. முதல் BRIC உச்சி மாநாடு ஆனது, 2009 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற BRIC அயல் உறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா அதன் முழு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் மூலதனத்துடன் புதிய மேம்பாட்டு வங்கி (NDB)  ஆனது நிறுவப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சில புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததன் மூலம் இந்த அமைப்பு மேலும் விரிவடைந்தது. இந்த அமைப்பின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து நடைபெறும் முதல் உச்சி மாநாடு இது ஆகும். தற்போது, 30க்கும் மேற்பட்ட நாடுகள் BRICS அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளன.

Current Affairs

‘Amudham Plus’ provisions

❖ The Tamil Nadu government has introduced an ‘Amudham Plus’ provisions hamper. ❖ It contains 15 items to be sold through the Amudham departmental stores at a cost of ₹499 per unit. ❖ The hamper from the Tamil Nadu Civil Supplies Corporation is aimed at catering to the needs of a family for a month. ❖ The ‘Amudham Plus’ provisions hamper is expected to benefit citizens, especially during the Deepavali festival season.