Posts

Current Affairs

நீரிழிவு நோய்க்கான திறன் மிகு இன்சுலின்

 அறிவியலாளர்கள், ஒருவரின் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப செயலாற்றுகின்ற ஒரு "திறன் மிகு" இன்சுலினை "அரிய" நீரிழிவு சிகிச்சைக்கு வேண்டி உருவாக்கியுள்ளனர்.  புதிதாக உருவாக்கப்பட்ட NNC2215 ஆனது எலிகள் மற்றும் பன்றிகளில், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை நன்கு குறைப்பதில் மனித இன்சுலினைப் போலவே செயல்படுகிறது. இந்த இன்சுலின் செயலாற்றுவதற்கு என்று குறிப்பிடத்தக்க குளுக்கோஸ் தூண்டுதல் தேவைப் படுகிறது என்பதோடு அது செயல்படுத்தப் பட்டவுடன், இன்சுலின் அளவு திடீரென உயர்கிறது. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கும் முதல் வகை நீரிழிவு நோய் ஆனது, கணையம் இன்சுலின் (அல்லது போதுமான இன்சுலின்) உற்பத்தி செய்யாத போது ஏற்படுகிறது. இரண்டாம் வகை நீரிழிவு நோயில், உடலின் செல்கள் இன்சுலின் எதிர்ப்பை வளர்த்துக் கொள்கிறது, அதாவது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுவதை விட அதிக அளவு தேவைப் படுகிறது.

Current Affairs

Smart Insulin for Diabetes

❖ Scientists have developed the “holy grail” diabetes treatments - a “smart” insulin that responds in real time to fluctuations in one’s blood sugar level. ❖ The newly developed NNC2215 is effective as human insulin at lowering blood glucose in rats and pigs. ❖ The engineered insulin requires a significant glucose spike to be activated, and once it is activated, there is a sudden rush of insulin in the system. ❖ Type 1 diabetes, which often starts in childhood, occurs when the pancreas does not produce insulin (or enough insulin). ❖ Type 2 diabetes sees the cells of the body develop resistance to insulin, meaning greater amounts are required that what is produced by the pancreas.

Current Affairs

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2024

சென்னை மாவட்ட அணியானது 105 தங்கம், 80 வெள்ளி மற்றும் 69 தங்கம் வென்று முதலிடம் பெற்றது. 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 31 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கோவை 23 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்றது. * 2023 ஆம் ஆண்டில் 19வது இடத்திலிருந்த சேலம் ஆனது 21 தங்கம், 12 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களை வென்று இதில் நான்காவது இடத்திற்கு முன்னேறியதால், கடந்த ஆண்டு பதக்கப் பட்டியலில் இருந்து அதிகளவு இடங்களுக்கு முன்னேறிய ஒரு மாவட்டமாக திகழ்கிறது. 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைப் போட்டி என்பது நாட்டின் மிகப்பெரிய அடிமட்ட முன்னெடுப்புகளில் ஒன்றாகும் என்பதோடு இதில் 38 மாவட்டங்களில் இருந்து 33,000 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். * நீலகிரி மாவட்டமானது கடைசி இடத்தைப் பிடித்ததுடன் பங்கேற்ற 38 மாவட்டங்களும் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும்.

Current Affairs

CM Trophy campaign 2024

❖ Chennai topped by winning 105 gold, 80 silver and 69 Bronze  ❖ Chengalpattu took the second spot in the medals tally with 31 gold medals with 26 silver and 36 bronze medals. ❖ Coimbatore ended with 23 gold, 40 silver and 39 bronze medals. ❖ Salem was the biggest mover on the medals tally from the last edition as they jumped to fourth spot from 19th in 2023, winning 21 gold, 12 silver and 23 bronze. ❖ The 2024 CM Trophy is one of the largest grassroots initiatives in the country and attracted over 33,000 participants from 38 districts. ❖ This was the first time that all the 38 participating districts found a spot on the medals tally with Nilgiris taking the last spot

Current Affairs

பீகார் - முதல் உலர் துறைமுகம்

மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பிஹ்தா எனுமிடத்தில் பீகாரின் முதல் உலர் துறைமுகம் ஆனது திறக்கப்பட்டுள்ளது. ஒரு துறைமுகம் அல்லது விமான நிலையத்திலிருந்து தொலைவில் அமைக்கப்படும் ஓர் உலர் துறைமுகம் அல்லது உள்நாட்டு கொள்கலன் துறைமுகமானது (ICD), சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளைக் கையாளுதல், சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான ஒரு தளவாட வசதி ஆகியவற்றை வழங்குகிறது. இது கடல்/விமானத் துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இடையே ஒரு இணைப்புப் பகுதியாகச் செயல்பட்டு, சரக்குகளின் திறம் மிக்கப் போக்குவரத்தினை எளிதாக்குகிறது. இது பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் இயக்கப்படுகிறது. பீகார் மாநிலமானது உருளைக் கிழங்கு, தக்காளி, வாழைப்பழம், லிச்சி மற்றும் மக்கானா (தாமரை விதைகள்) போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஒரு முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பதிவானது.

Current Affairs

Bihar - First Dry Port

❖ Bihar’s first dry port was inaugurated at Bihta, a town near state capital Patna. ❖ A dry port, or inland container depot (ICD), provides a logistics facility away from a seaport or airport for cargo handling, storage, and transportation. ❖ It acts as a bridge between sea/air ports and inland regions, facilitating efficient movement of goods. ❖ It is being run in a Public-Private Partnership (PPP) mode. ❖ Bihar is a major producer of fruits and vegetables such as potato, tomato, banana, litchi and makhana (fox nuts). ❖ The state recorded exports worth Rs 20,000 crore in 2022-23.

Current Affairs

பாரத் கடலைப் பருப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்

மத்திய அரசானது, 'பாரத்' தயாரிப்புப் பெயரின் கீழ் முழு கடலைப் பருப்பு மற்றும் மசூர் (சிவப்பு பயிறு) பருப்பை அறிமுகப்படுத்தி அதன் மானிய விலையிலான பருப்பு விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. * இது பொதுமக்களுக்கு மலிவு விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் இந்தப் பருப்பு வகைகளை தள்ளுபடி விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பாரத் என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் அரிசி, மாவு மற்றும் பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. * நடுத்தர வர்க்கத்தின் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்கான அரசாங்கத்தின் மிக பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப் பட்டது என்ற நிலையில் இதன் இரண்டாம் கட்டம் ஆனது இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

Current Affairs

Bharat Chana Dal Phase II

❖ The Centre expanded its subsidised pulses program, introducing chana whole and masur dal under the ‘Bharat’ brand. ❖ The initiative aims to provide these pulses at the discounted rates through the cooperative networks, ensuring affordability for the public. ❖ The Bharat brand provides staples such as rice, flour, and pulses at subsidised rates. ❖ It was launched as a part of the government’s broader aim to make essential goods more affordable for middle-class consumers. ❖ Phase I of the brand was rolled out in October 2023 and Phase II was announced earlier this month.

Current Affairs

40 மலையேற்றப் பாதைகள்

தமிழ்நாடு வனத்துறையானது 40 வழித்தடங்கள் அடங்கிய ஒரு விரிவான பட்டியலை உருவாக்கியுள்ளது. இது 'ட்ரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் 40 மலைப்பாதைகளுக்கானப் பதிவுகளைக்கொண்ட ஒரு இணைய தளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. www.trektamilnadu.com என்ற இந்த இணைய தளமானது இயங்கலை வழியிலான முன் பதிவுகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. * 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கு வேண்டி முன்பதிவு செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். 18 வயதுக்குட்பட்ட அனைவரும் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்யலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்று மட்டும் (எளிதான மலையேற்றங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணை தேவை. நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் இந்த 40 தேர்ந்தெடுக்கப்பட்டப் பாதைகள் அமைந்துள்ளன. * மலையேற்றங்கள் ஆனது 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்குகள் (மலையேற்றம் ஒழுங்குமுறை) விதிகளுக்கு இணங்க உள்ளன.

Current Affairs

40 Trekking trails

❖ The Tamil Nadu Forest Department has put together a comprehensive list of 40 trails. ❖ It also launched a portal under the ‘Trek Tamil Nadu’ project featuring 40 trails. ❖ The portal www.trektamilnadu.com facilitates online bookings. ❖ All those above the age of 18 are permitted to book the treks. ❖ All those below the age of 18 can trek with the consent letter of the parents / guardian. ❖ Kids below the age of 10 (allowed only for the easy treks) needs accompaniment of parent or guardian. ❖ These 40 curated trails are spread over 14 districts across Tamil Nadu, including the popular destinations such as the Nilgiris, Kodaikanal and Kanniyakumari. ❖The treks are in compliance of the Tamil Nadu Forest and Wildlife (Regulation of Trekking) Rules, 2018.