Posts

Current Affairs

வட்டார வானிலை முன்னறிவிப்பு

* ஒவ்வொரு மணி நேரமும் புதுப்பிக்கப்படும், ஐந்து நாட்களுக்கு முன்கூட்டிய வானிலை முன்னறிவிப்புகள் ஆனது, தற்போது கிராமப் பஞ்சாயத்துக்கள் மட்டத்திலும் கிடைக்கப் பெறுகின்றன.இது நாடு முழுவதும் வட்டார அளவிலான சில முன்னறிவிப்புகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முக்கிய படிநிலையாகும். * இது "கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அடிமட்ட அமைப்புகளில் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்பதோடு இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்குப் பயனளிக்கும். e-GramSwaraj மற்றும் கிராம் மஞ்சித்ரா இணையதளங்கள் மற்றும் மேரி பஞ்சாயத்து செயலி ஆகியவற்றில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை என்று வழங்கப்படும் முன்னறிவிப்புகள் கிடைக்கப் பெறும். e-GramSwaraj ஆனது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

Current Affairs

Localized Weather Forecasting

❖ Five-day weather forecasts, updated every hour, are now available at the level of gram panchayats. ❖ It is the first major step towards localised forecasting across the country.  ❖ It aimed at “empowering rural communities and enhancing disaster preparedness at the grassroots, and will benefit farmers and villagers across the country. ❖Hourly forecasts will be available on the e-GramSwaraj and Gram Manchitra portals, and the Meri Panchayat app. ❖ e-GramSwaraj is already operational.

Current Affairs

இராணி சென்னமாவின் 200வது பிறந்தநாள்

கித்தூரின் இராணி சென்னம்மா 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ககாதி எனுமிடத்தில் பிறந்தார். தனது கணவர் இறந்த பிறகு, அவர் கித்தூரின் அரியணைக்கு வாரிசாக வேண்டும் என்ற நோக்கத்தில் சிவலிங்கப்பாவை தத்தெடுத்தார். ஆங்கிலேயர்கள் சிவலிங்கப்பாவை 'வாரிசிழப்புக் கோட்பாட்டின்' கீழ் ஒரு வாரிசாக அங்கீகரிக்க மறுத்ததால் அது கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. 1824 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தாலும், பின்னர் சென்னம்மா 1829 ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டு சாகும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Current Affairs

Rani Chennamaa 200th birth anniversary

❖ Rani Chennamaa, the Queen of Kittur was born on 23rd October 1778, in Kagati, Belagavi district in Karnataka. ❖ After the death of her husband, she adopted Shivalingappa with aim of making him heir to throne of Kittur. ❖ The British refused to recognize Shivalingappa under the ‘doctrine of lapse’ and subsequently led to the Revolt. ❖ Though British lost 1st battle in 1824, she was later captured & imprisoned, till her death in 1829.

Current Affairs

PM-YASASVI திட்டம்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, துடிப்புமிக்க இந்தியாவினை உருவாக்குவதற்கான (PM-YASASVI) பிரதான் மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த விரிவான முதன்மைத் திட்டம் ஆனது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EBC) மற்றும் சீர் மரபினர் (DNT) சமூக மாணவர்களுக்கு, அவர்களின் ஆரம்பக் கட்ட வளர்ச்சி ஆண்டுகளில் மிகவும் தரமான கல்விக்கான அணுகலை வழங்கி அவர்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டது. EBC பிரிவினர்களுக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகான டாக்டர் அம்பேத்கர் ஊக்கத் தொகை திட்டம் மற்றும் DNT பிரிவினர்களுக்கான டாக்டர் அம்பேத்கர் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்கு முந்தைய மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகான ஊக்கத் தொகை திட்டம் உட்பட முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை இந்த திட்டம் ஒருங்கிணைத்து மேம்படுத்துகிறது. இந்தத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தேவைகளை ஆதரிப்பதில் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அணுகுமுறையை இது உறுதி செய்கிறது.

Current Affairs

PM-YASASVI Scheme

❖ The Ministry of Social Justice and Empowerment has implemented the PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India (PM-YASASVI). ❖ This comprehensive umbrella scheme is aimed at uplifting students from OBC, EBC, and De-notified Tribes (DNT) by providing them with access to quality education during their formative years. ❖ This scheme consolidates and enhances several earlier initiatives, including the Dr. Ambedkar Post-Matric Scholarship Scheme for EBCs and the Dr. Ambedkar Pre-Matric and Post-Matric Scholarship Scheme for DNTs. ❖ By integrating these schemes, it ensures a more streamlined and impactful approach to supporting the educational needs of socially and economically disadvantaged students

Current Affairs

விவசாயிகள் நலனுக்கான நடவடிக்கைகள் - தமிழ்நாடு

2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வடகிழக்குப் பருவமழை முதல் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட சுமார் 1.19 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதற்காக மொத்தம் 91.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் 29.34 லட்சம் விவசாயிகளின் 5,148 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர் இழப்பீட்டிற்கான காப்பீட்டுக் கோரல்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 624.04 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அரசு அறிவித்துள்ளது. கரும்பு சாகுபடியானது சுமார் 95,000 ஹெக்டேரில் இருந்து 1.54 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பயன்பாட்டு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு சுமார் 335 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 உழவர் சந்தைகளில் மொத்தமாக சுமார் 2.75 கோடி ரூபாய் செலவில் கழிவுகளை உரமாக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன

Current Affairs

Measures for farmers welfare in Tamilnadu

❖ A total sum of ₹91.07 crore has been released to support over 1.19 lakh farmers, whose crops were affected by the Northeast monsoon since 2021. ❖ Crop insurance and compensation claims of ₹5,148 crore have been settled to 29.34 lakh farmers since 2021. ❖ The State has released a total sum of ₹624.04 crore as fair and remunerative price and special incentive to sugarcane farmers. ❖ The cultivation of sugarcane has been increased from 95,000 hectare to 1.54 lakh hectare. ❖ Sugar mills have been provided loans to the tune of ₹600 crore. ❖ Subsidies have been provided for about ₹335 crore to purchase the agricultural machinery and equipment. ❖ A total of 14 new Uzhavar Sandhais have been set up. ❖ Decomposing machines have been installed at a total cost of ₹2.75 crore in 25 Uzhavar Sandhais to handle the waste generated.

Current Affairs

உமிழ்வு இடைவெளி அறிக்கை 2024

* உமிழ்வு இடைவெளி அறிக்கை என்பது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்புத் திட்டத்தின் வருடாந்திர வெளியீடாகும். மிகவும் அதிகளவில் பசுமை இல்ல வாயுவினை வெளியிடும் ஆறு நாடுகள் ஆனது உலகளாவிய GHG உமிழ்வுகளில் 63% பங்கினை கொண்டுள்ளன. குறைந்த அளவு வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்கு 3% மட்டுமேயாகும். சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது 4,140 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான (MtCO2e) உமிழ்வுடன் மொத்த GHG உமிழ்வில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முந்தைய (1850-2022) CO₂ உமிழ்வுப் பதிவுகள் ஆனது சீனா (300Gt CO₂ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான) மற்றும் அமெரிக்கா (527 Gt CO2) ஆகிய நாடுகளை விட மிகக் குறைவு ஆகும் (83 Gt CO2).பசுமை இல்ல வாயு உமிழ்வு ஆனது, 2023 ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான 57 ஜிகாடன்கள் (Gt) என்ற புதிய உச்ச அளவிற்கு உயர்ந்துள்ளது (2022 ஆம் ஆண்டில் இருந்த அளவில் இருந்து 1.3% அதிகரிப்பு). அடுத்த தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட உறுதிப்பாடுகளில், 2030 ஆம் ஆண்டில் 42% மற்றும் 2035 ஆம் ஆண்டில் 57% என்ற அளவில் வருடாந்திர பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைக்க உலக நாடுகள் கூட்டாக உறுதியளிக்க வேண்டும்.

Current Affairs

Emissions Gap Report 2024

❖ The Emissions Gap Report is an annual publication of the UN Environment Program. ❖ Six largest GHG emitters accounted for 63% of global GHG emissions. ❖ Least developed countries accounted for only 3%. ❖ India ranks 3rd in total GHG emissions with 4,140 MtCO2e compared to China and USA ❖ India’s historical CO2 emissions (1850–2022) are much lower (83 GtCO2 than China (300 GtCO2) and US (527 GtCO2). ❖ Greenhouse-gas emissions rose to a new high of 57 gigatons (Gt) of CO2 equivalent in 2023 (1.3 % increase from 2022). ❖ The Nations must collectively commit to cut 42 % off annual greenhouse gas emissions by 2030 and 57 % by 2035 in next NDCs.