Posts

Current Affairs

சட்டத்தின் ஆட்சிக் குறியீடு 2023

உலக நீதித் திட்டம் (WJP) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட சமீபத்தியக் குறியீட்டு மதிப்பில் இடம் பெற்ற 142 நாடுகளில் இந்தியா 79வது இடத்தில் உள்ளது.  இந்தியாவை விட நேபாளம் (69), இலங்கை (75) ஆகியவை முன்னிலையில் உள்ளன.  இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், நார்வே, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. வங்காளதேசம் 127வது இடத்திலும், பாகிஸ்தான் 129வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 140வது இடத்திலும் உள்ளன. வெனிசுலா மிகக் குறைந்த தரவரிசையைப் பெற்று 142வது இடத்தைப் பெற்றது.  உலக நீதித் திட்டம் என்பது அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச பொதுச் சமூகம் ஆகும்

Current Affairs

Rule of Law Index 2023

❖ The latest index, released by the World Justice Project (WJP), shows that India ranked 79th out of 142 countries. ❖ Nepal (69) and Sri Lanka (75) are ahead of India. ❖ Denmark topped in the list, and followed by Norway, Finland and Sweden. ❖ Bangladesh ranked at 127th and Pakistan at 129th and Afghanistan at 140th. ❖ Venezuela got the lowest rank and placed at 142. ❖ World Justice Project (WJP) is an international civil society organization based on USA.

Current Affairs

பெருந்தொற்று நிதி திட்டம்

 கால்நடைகளுக்கான ஒரு முழுமையான சுகாதாரக் காப்பீட்டை உருவாக்குவதற்காக 25 மில்லியன் டாலர் மதிப்பிலான G20 பெருந்தொற்று நிதியை மத்திய அரசு செயல் படுத்த உள்ளது. விலங்கினச் சுகாதார ஆய்வகங்களை நன்கு மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் ஆய்வக வலையமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் "விலங்கு சுகாதாரப் பாதுகாப்பை" மேம்படுத்துவதற்காக இது வடிவமைக்கப் பட்டு உள்ளது. இது "விலங்குவழித் தொற்று" நோய்களைக் கண்காணிப்பதற்கும் அவற்றை மிக நன்கு மேலாண்மை செய்வதற்குமான நன்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கும். இந்த நிதித் திட்டமானது, ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

Current Affairs

Pandemic Fund Project 2024

❖ The Centre will implement $25-million G20 Pandemic Fund to develop a holistic health coverage for livestock. ❖ It is designed to enhance the country’s “animal health security” by upgrading and expanding animal health laboratories and developing laboratory networks. ❖ It will create a more integrated system for monitoring and managing “zoonotic” diseases. ❖ The Fund is to be implemented in partnership with the Asian Development Bank (ADB), the World Bank and the Food and Agriculture Organization (FAO).

Current Affairs

வெப்ப அலைகள் - குறிப்பிட்ட மாநிலம் சார்ந்தப் பேரழிவு

* தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு பதிவான நிலையில், மாநில அரசு வெப்ப அலையை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது.  ஏற்கனவே சில மாநிலங்களான சத்தீஸ்கர், ஒடிஸா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகா ஆகியன வெப்ப அலையினை மாநிலம் குறிப்பட்டப் பேரிடர்களாக அறிவித்துள்ளன. இந்தியாவில் வெப்ப அலைகள் தற்போது தேசியப் பேரிடராக அறிவிக்கப் படாததால், 2005 ஆம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசிடம் இருந்து இதற்காக நிதி உதவியினை மாநிலங்கள் பெற இயலாது. இந்த ஒரு அறிவிப்பின் மூலம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இந்த முயற்சிகளுக்கு வேண்டி மாநில அரசாங்கம் மாநிலப் பேரிடர்ப் பதிலெதிர்ப்பு நிதியினைப் பயன் பயன்படுத்தும். கோடைக் காலங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும் வகையிலான நீண்டக் கடற்கரையை

Current Affairs

Heatwaves - State specific disaster

The State government of Tamilnadu has declared heatwave as a disaster. The States including Chhattisgarh, Odisha, Kerala, Rajasthan, Andhra Pradesh, Maharashtra, and Karnataka have already declared heat waves as a state-specific disaster. The States are not eligible to get financial assistance from the Union government under the Disaster Management Act, 2005 since heatwaves are not currently classified as a national disaster in India. With the declaration, families of heat wave victims would get Rs 4 lakh relief. The government will use the State Disaster Response Fund to support these efforts.  Tamil Nadu has a long coastline where the humidity goes up during the summer months.  Cities like Madurai, Tiruchy, Vellore, Namakkal, Dindigul and Krishnagiri have barren rocky hillocks which absorb and reflect heat even at nights.  In April and May 2024, Erode and Karur recorded a temperature of above 40- degree Celsius on 31 and 26 days respectively. Vellore and Tirupattur recorded high temperatures on 23 and 21 days each

Current Affairs

தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31

இராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினம் ஆனது சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. * அவர் 1947 முதல் 1950 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து 565 சுதேச அரசுகளையும் இந்தியாவுடன் இணையுமாறு வலியுறுத்தி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தார். சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்த நாளை 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு ஆண்டு கால அளவில் நாடு தழுவிய ஒரு திட்டத்தின் மூலமாக அரசாங்கம் கொண்டாட உள்ளது.

Current Affairs

National Unity Day 2024 - October 31

❖ Rashtriya Ekta Diwas or National Unity Day is celebrated to commemorate the birth anniversary of Sardar Vallabhbhai Patel. ❖ He was India’s first Deputy Prime Minister of India and first Home Minister of India from 1947 to 1950. ❖ Patel successfully persuaded all the 565 self-governing princely states to accede to India after getting independence from British colonial rule. ❖ The government will commemorate the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel with a two-year-long nationwide programme from 2024 to 2026.

Current Affairs

கருணைக் கொலையைப் பற்றிய புதிய வரைவு வழிகாட்டுதல்கள்

மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது, மறைமுகக் கருணைக் கொலை குறித்த புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நோயாளி அல்லது அவர்களது உறவினர்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவலறிந்த மறுப்பு உட்பட சில நிபந்தனைகளின் அடிப்படையில், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு உயிர் வாழ்வதற்கான மருத்துவச் சாதனங்களின் இணைப்பினைத் துண்டிப்பது குறித்து மருத்துவர்களை "கலந்தாலோசித்த ஒரு முடிவை" மேற்கொள்ள வேண்டும். மறைமுகக் கருணைக் கொலைக்கு "நோயாளியின் நலன்களுக்கு ஏதுவான முடிவை மேற்கொள்வதற்கு, தற்போது உயிர் வாழ்வதற்கு உதவும் மருத்துவ சாதன உதவிகளை நிறுத்த அல்லது கை விடுவதற்கு நான்கு நிபந்தனைகளை இந்த வழிகாட்டுதல்கள் வகுத்துள்ளன. ஒரு நபர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டால், மருத்துவ முன்கணிப்பு மற்றும் நோயாளியின் நோய் பாதிப்பு நிலை மோசமானது மற்றும் தீவிரமான சிகிச்சை முறைகளால் அது சிகிச்சையடைய வாய்ப்பில்லை என்று கருத்து முன்வைக்கப்பட்டால், மருத்துவ முன்கணிப்பு ஆலோசனையைத் தொடர்ந்து, ஒரு நோயாளிக்கான மருத்துவ ஆதரவைத் தொடர்வதற்கான ஒரு தகவலறிந்த மறுப்பை ஆவணப் படுத்தினால், உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குதல். வரைவு வழிகாட்டுதல்களில் குணப்படுத்த முடியாத நோய் என்பது எதிர்காலத்தில் மரணம் தவிர்க்க முடியாதது என்ற மீளமுடியாத அல்லது குணப்படுத்த முடியாத நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது. 72 மணி நேரம் அல்லது அதற்கும் மேலான கால கட்டத்திற்குப் பிறகும் குணமடையாத கடுமையான நீடித்த மூளைக் காயமும் சேர்க்கப்பட்டுள்ளது.  வாழ்வதற்கான திறன் இல்லாத ஒரு நோயாளிக்கு, மிகவும் குறைந்தபட்சம் மூன்று மருத்துவர்களைக் கொண்ட முதன்மை மருத்துவ (PMB) குழுவின் ஒருமித்த கருத்துடன், உயிர் வாழ்வதற்கான சாதன ஆதரவு நீக்க முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியால் நியமிக்கப்பட்ட ஒருவரைக் கொண்ட மூன்று மருத்துவர்களைக் கொண்ட ஒரு இரண்டாம் நிலை மருத்துவக் குழுவானது PMB குழுவின் முடிவைச் சரி பார்க்க வேண்டும்.

Current Affairs

New draft guidelines on passive euthanasia 2024

Union Health Ministry comes up with new draft guidelines on passive euthanasia. The Doctors should take a "considered decision" on withdrawal of life support in terminally ill patients on the basis of certain conditions including a documented informed refusal by the patient or their kin. The guidelines laid out four conditions for the passive euthanasia to take a "considered decision in a patient's best interests, to stop or discontinue ongoing life support.  The individual has been declared to have had a brainstem death   1.There is medical prognostication and a considered opinion that the patient's disease condition is advanced and not likely to benefit from aggressive therapeutic interventions, 2. A patient/surrogate documented informed refusal, following prognostic awareness, to continue life support  3.Compliance with procedures prescribed by the Supreme Court. A Terminal illness in the draft guidelines has been defined as an irreversible or incurable condition from which death is inevitable in the foreseeable future. Severe traumatic brain injury which shows no recovery after 72 hours or more is also included.For a patient without capacity, foregoing of Life Support proposals should be made by a consensus among a group of at least three physicians who form the Primary Medical Board (PMB). A Secondary Medical Board of three physicians with one appointee by the Chief Medical Officer of the district must validate the decision by the PMB.