Posts

Current Affairs

லோசான் டயமண்ட் லீக் போட்டி

நீரஜ் சோப்ரா சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோசான் டயமண்ட் லீக் போட்டியில் தனது இறுதி வாய்ப்பின் மூலம் போட்டித் தொடரில் 89.49 மீட்டருக்கும் மேலாக நீண்டதூரம் ஈட்டி எறிந்துள்ளார். அவர் 90.61 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்சிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Current Affairs

Lausanne Diamond League 2024

❖ Neeraj Chopra threw the javelin to a season best distance of 89.49m with his final throw at the Lausanne Diamond League, held at Switcherland. ❖ He finished second behind Grenada’s Anderson Peters, who threw a distance of 90.61m. ❖ Germany’s Julian Weber was third with a best throw of 87.08 metres.

Current Affairs

இரத்னகிரி - 'பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்'

மகாராஷ்டிரா மாநில அரசு ரத்னகிரியில் உள்ள கோட்டோவிய வரைபடங்கள்ஜியோகிளிஃப்ஸ்) மற்றும் பாறை செதுக்குத் தோற்றங்கள் (பெட்ரோகிளிஃப்ஸ்) ஆகியவற்றினை 'பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்' ஆக அறிவித்துள்ளது. இது 1960 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இரத்னகிரியின் டியூட் எனுமிடத்தில் உள்ள பாறை செதுக்குத் தோற்றங்களின் குழுமம் ஆனது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது ஆகும் (சுமார் 20,000-10,000 ஆண்டுகளுக்கு முந்தையது). புவியியல் வரைபடத் தோற்றங்கள் மற்றும் பாறை செதுக்குத் தோற்றங்கள் பல்வேறு வகையான பண்டைய கலை வடிவங்கள் ஆகும் என்பதோடு இவை இரண்டுமே பூமியின் மேற்பரப்பில் அல்லது பாறை மேற்பரப்பில் உருவங்கள் அல்லது வடிவ அமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கியது.

Current Affairs

Ratnagiri 'protected monuments'

❖ Maharashtra government has notified geoglyphs and petroglyphs in Ratnagiri as 'protected monuments'.  ❖ This is 'protected under the Maharashtra Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1960. ❖ The group of petroglyphs at Deud, Ratnagiri, dates back to the Mesolithic era (roughly 20,000-10,000 years ago). ❖ Geoglyphs and petroglyphs are different types of ancient art forms, both involving the creation of images or designs on the earth's surface or rock surfaces.

Current Affairs

அதிக வீரியம் மிக்க மீயுயிரி

அமெரிக்கா உட்பட 16 நாடுகளில் "அதிக வீரியம் மிக்க" மீயுயிரியின் (சூப்பர்பக்) ஆபத்தான புதிய மாற்றுருக்கள் கண்டறியப் பட்டுள்ளன. ஒரு வகை மருந்து-எதிர்ப்புப் பாக்டீரியா என்ற இந்த மீயுயிரியானது, அதிக வீரியம் மிக்க க்ளெப்சில்லா நிமோனியா (hvkp) என்று அறியப் படுகிறது. இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டல அமைப்புகள் உள்ளவர்களிலும் கூட வேகமாக பரவக் கூடிய, கொடிய நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியது. சுற்றுச்சூழலிலும், மனிதர்கள் உட்பட சுமார் பல்வேறு விலங்குகளின் மேல் தொண்டை மற்றும் இரைப்பைக் குழாயிலும் இது காணப் படும்.

Current Affairs

Hypervirulent superbug

❖ Dangerous new strains of a "hypervirulent" superbug have been found in 16 countries, including the United States. ❖ The superbug, known as hypervirulent Klebsiella pneumoniae (hvKp), is a type of drug-resistant bacteria. ❖ It can cause rapidly progressing, deadly infections, even in people with healthy immune systems. ❖ It can be found in the environment as well as in the upper throat and gastrointestinal tract of various animals, including humans.

Current Affairs

மின் துறைக்கான இயங்கலை தளங்கள்

மத்திய மின்துறை அமைச்சகம் ஆனது மின் துறையின் செயல்திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் பயன்திறனை மேம்படுத்துவதற்காக மூன்று இயங்கலை தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளங்கள் திட்டங்களின் இயங்கலை சார்ந்தக் கண்காணிப்பிற்காக அந்தந்தத் திட்டங்களின் பெயர்களை கொண்டே அவை பெயரிடப் பட்டுள்ளன  திட்டங்களின் இயங்கலை கண்காணிப்பிற்கான இணைய தளம் அனல் மின் ஆற்றல் மின் துறைக்கான பேரிடர் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்பு (DRIPS) மற்றும் ஜல் வித்யுத் DPR.

Current Affairs

Online platforms for power sector

❖ The Union Power Ministry has launched three online platforms to enhance the efficiency, transparency, and effectiveness of power sector.  ❖ The portals are named as Portal for Online Monitoring of Projects  o Portal for Online Monitoring of Projects—Thermal o Disaster Resilient Infrastructure for Power Sector (DRIPS) and o JAL VIDYUT DPR.

Current Affairs

சந்துரு குழுவின் மையப்படுத்தப்பட்ட சமையலறைக்கான பரிந்துரை

நீதிபதி K. சந்துரு குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவைப் பள்ளி வளாகத்திலேயே சமைப்பதற்குப் பதிலாக மையப்படுத்தப் பட்ட சமையலறைகளில் சமைக்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வகையில் வண்ண மணிக் கட்டுக் கயிறுகள், மோதிரம் அல்லது நெற்றித் திலகக் குறிகளை அணிவதைத் தடைசெய்யுமாறும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி முன்னொட்டுகளை நீக்குமாறும் தமிழக அரசிற்கு இக்குழுவின் அறிக்கையானது பரிந்துரைத்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சமையலறைகளை நிறுவாமல், அதன் செயல்பாட்டிற்குத் தேவையான போதுமான பணியாளர்களுடன் கூடிய தொகுதி அளவில் மையப் படுத்தப் பட்டச் சமையலறைகளை நிறுவுதல் மற்றும் பள்ளிகளின் மதிய உணவு மையங்களுடன் இணைக்கப்பட்ட உணவு விநியோக வலையமைப்புகளை நிறுவல் ஆகியவை இந்த அறிக்கையின் பரிந்துரையில் அடங்கும். சில பகுதிகளில், மையப்படுத்தப் பட்ட சமையலறைகளின் செயல்பாடு, குறிப்பாக கிராமப் புறங்களில் அதன் செயல்பாடு முறையாக இல்லை. பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள மதிய உணவு மையங்களில் உணவு சமைக்கப் படும் போது, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் சமையல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும் என்பதோடு அந்தச் செயல்முறையானது உத்திரவாதம் மிக்கதாக இருக்கும். ஆனால் மையப்படுத்தப்பட்டச் சமையலறைகளில், பொதுப் பொறுப்புக் கூறலுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பள்ளிகளில் மதிய உணவு மையங்களில் உணவு சமைப்பது குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மதிய உணவுச் சமையல் பணியாளர்களில் சுமார் 27% பேர் பட்டியலிடப்பட்டச் சாதி அல்லது பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Current Affairs

Chandru committee recommendation on centralized kitchen

❖ Experts expressing concerns about one of the recommendations of the Justice K. Chandru committee, on replacing the on-site cooking of noon-meal for school students with centralised kitchens. ❖ The report has recommended the Tamil Nadu government to prohibit students in schools from wearing coloured wristbands, rings, or forehead marks that may indicate their caste and removal of caste appellations in the names of schools.❖ The report includes establishing centralised kitchens at block level with adequate staff required for its operation and a distribution network attached to school noon meal centres, instead of having kitchens in every school. ❖ In some States, functioning of centralised kitchens, particularly in rural areas, were not up to the mark. ❖ When food is cooked in the noon meal centres located within school premises, teachers, students and parents can monitor the cooking activities and the process is accountable. ❖ But in the case of centralised kitchens, there is a less chance of the public accountability. ❖ Cooking food at noon meal centres in schools generates employment, particularly for women. ❖ Nearly 27% of the noon-meal workers belong to Scheduled Caste or Scheduled Tribe communities.