Posts

Current Affairs

மரபணுப் பன்முகத்தன்மைக்காக புலிகளின் இடமாற்றத் திட்டம்

மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் வளங்காப்பகத்தில் இருந்து ஒரு பெண் புலியானது ஒடிசாவில் உள்ள சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்திற்கு (STR) இடம் மாற்றப்பட்டுள்ளது. புலிகளின் மீதான இடமாற்றத் திட்டம் ஆனது புலிகள் வளங்காப்பகத்திற்குள் மரபணு வளத்தினை மேம்படுத்துவதற்கான ஒடிசா அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும்.சிமிலிபால் ஆனது இந்தியாவில் கருநிறமிகள் அதிகம் கொண்ட வங்காளப் புலிகள் காணப் படும் ஒரே காட்டு வாழ்விடமாகும். * இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒடிசா புலிகள் மதிப்பீட்டில், சிமிலிபாலில் உள்ள மொத்த 24 இளம் பருவப் புலிகளில் 13 அரிய வடிவங்களைக் கொண்ட கருநிறமிகள் மிக அதிகம் கொண்ட புலிகள் என்று கண்டறியப்பட்டது.

Current Affairs

Tiger Translocation for Genetic Diversity

❖ A tigress from the Tadoba-Andhari Tiger Reserve in Maharashtra moved to the Similipal Tiger Reserve (STR) in Odisha. ❖ The translocation project is part of Odisha government’s efforts to improve the gene pool of tigers inside the reserve. ❖ Similipal is the country’s only wild habitat for melanistic royal Bengal tigers. ❖ The Odisha Tiger Estimation conducted this year found that out of the total 24 adult tigers in Similipal, 13 are pseudo-melanistic.

Current Affairs

பவளப்பாறை முக்கோணப் பகுதி

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் அதிகமான விரிவாக்கத்தினால் பவளப்பாறை முக்கோணப் பகுதி மீது ஏற்படும் கடுமையான ஆபத்துகளானது, உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கையின் (CBD) 16வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP16) வெளியிடப் பட்ட அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 'கடல்களின் அமேசான்' என்று குறிப்பிடப்படுகின்ற, பவளப் பாறை முக்கோணப் பகுதி ஆனது, சுமார் 10 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துக் காணப்படும் கடல் பகுதி ஆகும். இதில் இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தைமோர்-லெஸ்டே, சாலமன் தீவுகள் போன்ற நாடுகள் அடங்கும். இந்தப் பிராந்தியத்தில் உலகின் சுமார் 76 சதவீத பவளப்பாறை இனங்களையும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதன் வளங்களைச் சார்ந்துள்ள 120 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொண்டுள்ளது.

Current Affairs

Coral Triangle 2024

❖ The Serious dangers brought by fossil fuel expansion to the Coral Triangle, were highlighted by a report released at COP16 to the Convention on Biological Diversity (CBD). ❖ The Coral Triangle, often referred to as the ‘Amazon of the seas’, is a huge marine area spanning over 10 million square kilometres. ❖ It includes countries like Indonesia, Malaysia, Papua New Guinea, Singapore, the Philippines, Timor-Leste, and the Solomon Islands. ❖ This region is home to 76 per cent of the world’s coral species and supports more than 120 million people who rely on its resources for their livelihoods.

Current Affairs

அமூரில் பெருங்கற்கால புதைவிடம்

சென்னை வட்ட இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஆனது, அமூரில் அகழாய்வுப்பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே கீழைப் பாலாற்றின் படுகையின் கரையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டத் தளமாகும். * ASI ஆனது, 1921 ஆம் ஆண்டில், கீழைப் பாலாறு படுக்கையில் உள்ள அமூர் கிராமத்தில் அமைந்துள்ள 130 ஏக்கர் நிலத்தில் கல் பதுக்கைகள் மற்றும் கற்குவியல்களைக் கொண்ட ஒரு பெருங்கற்காலப் புதைவிடத்தினைக் கண்டறிந்துள்ளது. இந்தப் பண்டைய கால புதைவிடம் ஆனது, 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப் படுகிறது. 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் சிறுதாவூரில் 2007 ஆம் ஆண்டில் பெருங்கற்கால கல் சவப்பெட்டி, இரும்புப் பொருள்கள் மற்றும் செந்நிற சூதுபவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

Current Affairs

Megalithic burial site at Amoor

❖ The Archaeological Survey of India (ASI) Chennai Circle has planned to undertake excavation at Amoor. ❖ It is a protected site located on the banks of lower Palar River valley near Thiruporur in Chengalpattu district. ❖ The ASI, in 1921, had discovered a megalithic burial site having cists and cairns in a 130-acre odd parcel of land located in Amoor village in the lower Palar valley. ❖ The ancient burial site is believed to be 2000 years old. ❖ In 2007 had unearthed megalithic sarcophagus, iron objects and carnelian beads at Siruthavur, a site believed to be 2500 years old.

Current Affairs

செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீடு 2023/24 - IMF

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சந்தையின் பரவல் ஆனது, 2024 ஆம் ஆண்டு 2030 ஆம் ஆண்டு வரையில் 36.6% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும் தடையற்ற செயற்கை நுண்ணறிவு ஏற்பிற்கு மிகவும் தயாராக உள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. டென்மார்க் (#2), நெதர்லாந்து (#4), எஸ்டோனியா (#5), பின்லாந்து (#6), மற்றும் சுவீடன் (#10), ஆகியவை தேசிய செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்புகளை முன்னதாகவே ஏற்றுக் கொண்ட நாடுகளாகும். இதில் மொத்தம் உள்ள 174 நாடுகளில் இந்தியா 72வது இடத்தில் உள்ளது. * இதில் வங்காளதேசம் 113வது இடத்திலும், இலங்கை 92வது இடத்திலும், சீனா 31வது இடத்திலும் உள்ளது.

Current Affairs

AI Preparedness Index 2023-24 - IMF

❖ The global AI market size is projected to grow at a compound annual growth rate (CAGR) of 36.6% from 2024 to 2030. ❖ Singapore stands out as the country most prepared for seamless AI adoption. ❖ Denmark (#2), the Netherlands (#4), Estonia (#5), Finland (#6), and Sweden (#10), have been among the early adopters of national AI initiatives. ❖ India ranked 72 in a total of 174 countries. ❖ Bangladesh placed on 113, Sri Lanka at 92, and China ranked as 31st.  

Current Affairs

சூரியத் தொலைநோக்கி திட்டம் - லடாக்

சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்வதற்காக, இந்தியா லடாக்கில் தேசிய மற்றும் பெரிய அளவிலான சூரிய தொலைநோக்கியினை (NLST) அமைக்க முயன்று வருகிறது. * தேசியப் பெரிய சூரிய தொலைநோக்கியானது இரண்டு மீட்டர் ரக ஒளியிழை சார்ந்த மற்றும் அண்மை அகச்சிவப்பு (IR) அலைநீளத்திலான ஒரு கண்காணிப்பு மையமாக இருக்கும். * லடாக்கின் மேராக் எனுமிடத்தில் உள்ள பாங்கோங் சோ ஏரியின் கரையில் சுமார் 4,200 மீட்டர் உயரத்தில் இந்தத் தொலைநோக்கி நிறுவப்பட உள்ளது.

Current Affairs

Solar Telescope Project – Ladakh

❖ To track the Sun, India seeks to set up the National Large Solar Telescope (NLST) in Ladakh ❖ The National Large Solar Telescope will be a two-metre class optical and near infra-red (IR) observational facility. ❖ The telescope is to be installed on the banks of the Pangong Tso Lake in Merak, Ladakh, at an altitude of around 4,200 metres.