Posts

Current Affairs

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வைரம்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலங்களில் கண்டறியப்படாத அளவில் மிகப்பெரிய வைரம் ஆனது போட்ஸ்வானாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 2,492 காரட் வைரம் ஆனது அச்சுரங்கத்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட  இரண்டாவது பெரிய வைரமாகும். 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானா நாடானது, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இயற்கை வைரங்களை மிக அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாகும்.

Current Affairs

Biggest diamond in over a century

❖ The largest diamond found in more than a century has been unearthed at a mine in Botswana. ❖ The huge 2,492-carat diamond is the second-biggest ever discovered in a mine. ❖ It is the biggest diamond found since 1905. ❖ Botswana is the second-biggest producer of natural diamonds behind Russia.

Current Affairs

உலக நீர் வாரம் ஆகஸ்ட் 25/29

உலகை மாற்றுவதற்கும், பயனுள்ள நீர் ஒத்துழைப்பிற்கான பல்வேறு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தண்ணீரை ஒரு செயற்கருவியாகப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு ஓர் உள்ளார்ந்த ஒத்துழைப்பை மேற்கொள்வதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர் நிறுவனத்தினால் (SIWI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future' என்பதாகும்.

Current Affairs

World Water Week - August 25/29

❖ It aims to be an inclusive, cooperation for people who want to use water as a tool to change the world and promote opportunities for effective water cooperation. ❖ It is organized every year since 1991 by Stockholm International Water Institute (SIWI). ❖ The theme for 2024 is ‘Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future’.

Current Affairs

தேசியப் புவி அறிவியல் விருதுகள் - 2023

* தேசியப் புவி அறிவியல் விருதுகள் (NGA) என்பது சுரங்க அமைச்சகத்தினால் நிறுவப் பட்ட மதிப்புமிக்க விருதுகள் ஆகும். இது புவி அறிவியல் துறையில் ஆற்றப்படும் அசாதாரணமான சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் ஆனது 21 புவி அறிவியலாளர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. இது 9 தனிப்பட்ட விருதுகள் மற்றும் 3 குழு விருதுகளை உள்ளடக்கிய 12 விருதுகளைக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான தேசியப் புவி அறிவியல் விருது ஆனது பேராசிரியர் தீரஜ் மோகன் பானர்ஜிக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தேசிய இளம் புவி அறிவியாலாளர் விருது ஆனது டாக்டர் அசுதோஷ் பாண்டேக்கு வழங்கப்பட்டது.

Current Affairs

National Geoscience Awards – 2023

❖ The National Geoscience Awards (NGA) are prestigious awards instituted by the Ministry of Mines. ❖ It aims to recognize and celebrate extraordinary achievements and contributions in the field of geosciences. ❖ The awards for 2023 presented to 21 Geoscientists by the President of India. ❖ It consists of 12 awards which include 9 individual awards and 3 team awards. ❖ The National Geoscience Award for Lifetime Achievement 2023 was bestowed upon Prof. Dhiraj Mohan Banerjee. ❖ National Young Geoscientist Award 2023 was presented to Dr. Ashutosh Pandey.

Current Affairs

பனிப்பாறை ஏரிகள் பற்றிய ஆய்வு

மத்திய அரசானது தேசிய பனிப்பாறை ஏரி உடைப்பு சார்ந்த வெள்ள அபாயக் குறைப்புத் திட்டத்திற்கு (NGRMP) அங்கீகாரம் அளித்துள்ளது.  இந்தியாவில் அமைந்துள்ள இமயமலைத் தொடர்களில் ஏறக்குறைய 7,500 பனிப்பாறை ஏரிகள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் சில தொலை உணர்வு கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆனது, இடரைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகளுக்காக 189 "அதிக ஆபத்து நிலையில் உள்ள" பனிப்பாறை ஏரிகளின் பட்டியலை இறுதி செய்துள்ளது. மத்திய நீர் வள ஆணையம் (CWC) ஆனது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததத்தின் அறிக்கையில் 902 பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுவதாகக் கூறியது.

Current Affairs

Study on Glacial Lakes 2024

❖ The National Glacial Lake Outburst Floods Risk Mitigation Programme (NGRMP) was approved by the Centre. ❖ There are nearly 7,500 glacial lakes in the Himalayan Mountain ranges located in India and some of them are being monitored via remote sensing. ❖ The National Disaster Management Authority (NDMA) has finalised a list of 189 “high-risk” glacial lakes for mitigation measures to reduce the risk. ❖ The Central Water Commission (CWC) in an October 2023 report stated that 902 glacial lakes and water bodies are being monitored via satellite.

Current Affairs

தீன் தயாள் SPARSH யோஜனா

 தபால் துறையானது தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற தபால்தலைச் சேகரிப்பு உதவித் தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பு தொடர்பான ஆர்வத்தினை உருவாக்குவதற்காக அஞ்சல் தலைகள் குறித்த திறனறிதல் மற்றும் ஆராய்ச்சியை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்வதற்கு ஊக்குவிக்க உதவும். இது கல்வி சார்ந்தப் பதிவுகள் சிறந்து விளங்கும் மற்றும் தபால்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காகவும் கொண்டுள்ள 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறந்த மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்குகிறது. இதில் மாதாந்திர உதவித் தொகையானது 500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6000 ரூபாயாக வழங்கப் படும் என்பதோடு இது காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும்.

Current Affairs

Deen Dayal SPARSH Yojana

❖ Department of Posts has launched a philately scholarship scheme Deen Dayal SPARSH Yojana. ❖ It will help to promotion of aptitude and research in stamps as a hobby for generating interest regarding philately amongst students. ❖ It grants scholarship to those meritorious students of classes 6 to 9, whose academic records are good as well as who have adopted Philately as a hobby. ❖ The amount of scholarship will be ₹ 6000/- per annum at the rate of ₹ 500/- per month, which will be payable on quarterly basis.