Posts

Current Affairs

Increase of ‘Innuyir Kappom’ funding

❖ The Tamil Nadu government will increase its funding under the ‘Innuyir KappomNammai Kakkum 48’ from ₹1 lakh to ₹2 lakh soon .❖ The scheme funds the treatment of persons injured in road accidents for the first 48 hours. ❖ It has covered three lakh beneficiaries so far. ❖ The government has so far spent ₹261.46 crore for ‘Innuyir Kappom-Nammai Kakkum 48’ that was launched in December 2021.

Current Affairs

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழான நிதியுதவி அதிகரிப்பு

தமிழக அரசானது, 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் வழங்கப் படும் நிதியுதவியை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக விரைவில் உயர்த்தஉள்ளது.  இது சாலை விபத்துக்களில் காயம்பட்டவர்களுக்கு முதல் 48 மணிநேரத்திற்கு வழங்கப் படும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமாகும். இதுவரை மூன்று இலட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டம் பயனளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்திற்காக அரசாங்கம் இதுவரையில் 261.46 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.

Current Affairs

GDP மற்றும் கடன் விகிதம் 2024-25

இந்தியாவின் கடன் சுமை மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நல்வாழ்வை நிர்வகிக்கும் இந்தியாவின் திறனை மதிப்பிடுவதில் இந்தியாவின் கடன்- GDP விகிதம் ஓர் அடிப்படை பொருளாதார அளவீடு ஆகும். இது நிதிசார் பாதிப்பு மற்றும் பெருமளவில் குறைக்கப்பட்ட நிதி நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஆனது 2024-25 ஆம் நிதியாண்டில் 44.1 விகிதத்துடன் அதிக கடன் GDP விகிதத்தைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் (42.5) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (40.8) ஆகியவை உள்ளன.26.4% கடன்- GDP விகிதத்துடன் தமிழ்நாடு 19வது இடத்தில் உள்ளது.

Current Affairs

Debt-to-GDP ratio 2024-25

❖ The debt-to-GDP ratio of India is a fundamental economic metric in assessing India’s ability to manage its debt burden and overall economic well-being. ❖ This indicates financial vulnerability and reduced fiscal flexibility. ❖ Punjab has the high debt-to-GDP ratio with 44.1 in FY 2024-25. ❖ It is followed by Himachal Pradesh (42.5) and Arunachal Pradesh (40.8). ❖ Tamil Nadu 19th place with 26.4 % debt-to-GDP ratio.

Current Affairs

அமெரிக்காவின் 47வது அதிபர்

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸை வீழ்த்தி அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் J. டிரம்ப் பதவியேற்றார். 1884 மற்றும் 1892 ஆம் ஆண்டுகளில் அதிபரான க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் ஒரு அதிபர் தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டு முறை பதவி வகிப்பது இது இரண்டாவது முறையாகும். அமெரிக்கா நாடானது வாக்காளர் குழு என்ற ஒரு முறையைப் பின்பற்றுகிறது. * மக்கள் தொகையின் அடிப்படையில், இந்த வாக்காளர் குழுவானது மாகாணங்களுக்கு தனது வாக்குகளை ஒதுக்குகின்றன.மொத்தம் 538 தேர்தல் வாக்காளர் குழு வாக்குகள் உள்ளன; 435 பிரதிநிதிகள் சபை, 100 பேரவை இடங்கள் மற்றும் வாஷிங்டன் DC மாகாணத்தில் 3 இடங்கள். முதலாவதாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் மாகாணங்களில் சாத்தியமான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. பின்னர், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பொதுமக்கள் பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பதன் மூலம் தங்கள் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, பொதுமக்கள் உண்மையில் ஒரு வாக்காளர்களை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர, பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது நேரடியாக அதிபரைத் தேர்ந்தேடுக்க வில்லை. அதிபர் தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 270 வாக்காளர்களின் வாக்குகள் தேவை. அமெரிக்க அரசியலமைப்பின் படி, ஒரு வேட்பாளர், அதிபர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவதற்கு, நாட்டில் இயற்கையாகப் பிறந்த குடிமகனாகவும், 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். J.D.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அதிபரின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்குகிறது என்ற நிலையில் இந்த தேதியானது பதவியேற்பு நாளுமாகும்.

Current Affairs

47th President of USA

Donald J. Trump become the 47th president of USA by defeating Vice President Kamala Harris. This is going to be only the second time after Grover Cleveland in 1884 and 1892, when a president will be serving two non-consecutive terms in the White House.The US follows the electoral college voting system. Based on the volume of population, the states are assigned electoral college votes. There are a total of 538 electoral college votes; 435 House of Representatives, 100 Senate seats and 3 seats from Washington DC. First, the parties choose potential electors in States before the election. Then, the voters in each State select their electors by casting ballots during the general election. So, voters are actually picking an elector and not the President directly when they cast their vote in the general election. A candidate needs votes from at least 270 electors to win the presidential election. According to the U.S. Constitution, a candidate must be a natural-born citizen of the country, 35 years of age or older, and a resident of the U.S. for 14 years to be eligible to contest for presidency. J.D. Vance was elected as Vice-President of the U.S. The new President's term begins January 20, which is also the Inauguration Day.

Current Affairs

ஷில்ப் சமகம் மேளா

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது 'ஷில்ப் சமகம் மேளா 2024' என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியமானப் பாரம்பரிய கை வினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. * இந்த நிகழ்ச்சியின் போது 'TULIP' திட்டம் தொடங்கப்பட்டது. 'TULIP' என்பது பாரம்பரியக் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான முன்னேற்றத் திட்டத்தைக் குறிக்கிறது. இந்த முன்னெடுப்பானது, விளிம்புநிலையில் உள்ள கைவினைஞர்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களின் தயாரிப்புகளை உலகளவில் வெளிப்படச் செய்தல் மற்றும் அவற்றின் விற்பனைக்கான இயங்கலைத் தளத்தினை அவர்களுக்கு வழங்குகிறது.

Current Affairs

Shilp Samagam Mela

The Union Ministry of Social Justice and Empowerment has launched the 'Shilp Samagam Mela 2024. It aims to showcase and promote traditional handicrafts from various states in India. During the event, the TULIP' programme was launched. TULIP' stands for Traditional Artisans' Upliftment Livelihood Programme. This initiative aims to empower marginalised artisans. It provides them with an online platform for global exposure and sales of their products.

Current Affairs

முதல் ஆசியப் பௌத்த உச்சி மாநாடு

இந்தியாவானது சர்வதேச பௌத்தக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து முதல் ஆசியப் பௌத்த உச்சி மாநாட்டை (ABS) புது டெல்லியில் நடத்தி வருகிறது. * 'Role of Buddha Dhamma in Strengthening Asia' 2 நடைபெற்றது. "India as the Dhamma Setu (Bridge) connecting Asia" கண்காட்சியும் இதில் நடத்தப்படுகிறது.

Current Affairs

First Asian Buddhist Summit

❖ India, in collaboration with the International Buddhist Confederation (IBC), is holding the first Asian Buddhist Summit (ABS) in New Delhi. ❖ The summit was themed ‘Role of Buddha Dhamma in Strengthening Asia’. ❖ A special exhibition was curated on the theme “India as the Dhamma Setu (Bridge) connecting Asia.”