Posts

Current Affairs

புதிய புவிசார் குறியீடுகளுக்கான விண்ணப்பங்கள் - 2024

தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) ஆனது பின்வரும் மூன்று உணவுப் பொருட்களுக்கு புவி சார் குறியீட்டினைப் பெறுவதற்கான விண்ணப்பத்தினை தாக்கல் செய்துள்ளது. இராமநாதபுரம் பனங்கற்கண்டு, O கோவில்பட்டி சீவல், மற்றும் இராமநாதபுரம் பட்டறை கருவாடு. * தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) மதுரை வேளாண் காப்பு மன்றம் (MABIF) ஆனது இதற்கு ஆதரவு தெரிவித்தது. இராமநாதபுரம் பனங்கற்கண்டு (படிக வடிவ பனை சர்க்கரை) ஆனது இப்பகுதியில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டறை கருவாடு (உலர்ந்த மீன்) என்பது ஒரு பாரம்பரிய உலர் மீன் தயாரிப்பு முறையாகும் என்பதோடு இது மீன்களில் மஞ்சள் தூள் தடவி சேற்றில் புதைத்து உலர வைக்கும் செயல்முறையினை உள்ளடக்கியது. கோவில்பட்டி சீவல் ஆனது அதன் மிருதுவான அமைப்பு மற்றும் மிகத் தனித்துவமான சுவைக்காக நன்கு அறியப்பட்ட ஒரு பாரம்பரிய நன்கு வறுத்த சிற்றுண்டியாகும்.

Current Affairs

New GI tag applications - 2024

❖ The Tamil Nadu Food Processing and Agri Export Promotion Corporation (TNAPEx) has filed an application GI tag for three food products. o The Ramanathapuram panangkarkandu o Kovilpatti seeval, and o Ramanathapuram pattarai karuvadu. ❖ The NABARD Madurai Agri Business Incubation Forum (MABIF) was the facilitator. ❖ The Ramanathapuram panangkarkandu (crystal palm sugar) has been produced in this region for over 300 years. ❖ The pattarai karuvadu (dried fish) is a traditional dry fish preparation method that involves burying fish in mud after smearing them with turmeric powder. ❖ Kovilpatti seeval is a traditional deep-fried snack known for its crispy texture and unique flavour.

Current Affairs

குடியரசுத் தலைவர் முர்முவின் ஆப்பிரிக்கப் பயணம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அல்ஜீரியா, மொரிட்டானியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய நாட்டின் அரசத் தலைவர் பயணம் மேற் கொள்வது இதுவே முதல் முறையாகும்.அங்கிருந்த பல்கலைக்கழகங்களின் மையமான சிதி அப்தெல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்திற்கு அவர் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அல்ஜீரியாவின் ஜார்டின் டி'ஸ்ஸாயில் உள்ள ஹம்மா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா முனையினையும் அவர் திறந்து வைத்தார். முர்முவின் வருகை என்பது இந்தியாவிற்கும் மலாவிக்கும் இடையிலான அரசுமுறை உறவுகளின் 60வது ஆண்டு நிறைவுடன் ஒன்றி வருகிறது.

Current Affairs

President Murmu’s African Visit

❖ President Droupadi Murmu is traveling to Algeria, Mauritania and Malawi. ❖ This is the first-ever visit by an Indian head of state to the three African countries. ❖ During the visit to the Sidi Abdellah Science and Technology Pole, a hub of universities, she received an honorary doctorate. ❖ She has also inaugurated an India Corner at Hamma Garden at Jardin d’essai, Algeria. ❖ Murmu’s visit coincides with the 60th anniversary of diplomatic relations between India and Malawi.

Current Affairs

மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2025-2027 ஆண்டின் பதவிக் காலத்திற்கான 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. பெனின், பொலிவியா, கொலம்பியா, சைப்ரஸ், கத்தார், தாய்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி தொடங்கி மூன்றாண்டு பதவிக் காலம் வரை பதவியில் இருக்கும். ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் சபையானது ஐக்கிய நாடுகள் அமைப்புக்குள் உள்ள ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். உலகம் முழுவதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமானப் பொறுப்பினை இது கொண்டுள்ளது. சவுதி அரேபியா இந்த வாக்கெடுப்பில் ஆறாவது இடத்தைப் பெற்று இந்த சபையில் அங்கத்துவத்தினைப் பெறத் தவறியது

Current Affairs

Members to Human Rights Council

❖ The UN General Assembly elected 18 members to the 47-member Human Rights Council for the 2025-2027 term. ❖ The 18 countries, including Benin, Bolivia, Colombia, Cyprus, Qatar, and Thailand, were elected by a secret ballot. ❖ The elected members will serve three-year terms beginning on January 1 next year. ❖ The Geneva-based Human Rights Council is an intergovernmental body within the United Nations system. ❖ It is responsible for promoting and protecting human rights around the world. ❖ Saudi Arabia failed to win a seat in the Council, with finishing in sixth place.

Current Affairs

அமைதிக்கான நோபல் பரிசு 2024

ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடான்கிவிற்கு அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான பெரு முயற்சிகளுக்காக வேண்டி 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீச்சுகளில் இருந்து தப்பியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிஹான் ஹிடாங்கியோ ஜப்பானில் அணு குண்டுகளில் இருந்து தப்பியவர்களின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாகும். கடந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஆனது, தற்போது சிறையில் இருக்கும் ஈரானிய ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது.

Current Affairs

2024 Nobel Peace Prize

❖ Japanese organisation Nihon Hidankyo has been awarded the Nobel Peace Prize 2024 for its efforts to achieve a world free of nuclear weapons. ❖ It was representing survivors of the atomic bombings of Hiroshima and Nagasaki. ❖ Formed in 1956, Nihon Hidankyo is the largest and most influential organisation of atomic bomb survivors in Japan. ❖ Last year, the 2023 Nobel Peace Prize was awarded to Iranian activist Narges Mohammadi, who is currently imprisoned.

Current Affairs

ரஃபேல் நடால் ஓய்வு

ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தையும், 14 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 17 ஆண்டுகளாக ATP-இன் முதல் 10 இடங்களில் ஐந்து முறை ஆண்டு இறுதியில் உலகின் முன்னணி இடத்தில் இருந்தவர் என்ற பெருமையினைக் கொண்டுள்ளார். டென்னிஸ் போட்டிகளில் அவரது அதிகபட்ச சாதனை ஆண்டுகளில், அவர் 209 வாரங்கள் உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார். அவர் 2004 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு பட்டத்தையாவது வென்றுள்ளார்.

Current Affairs

Rafael Nadal Retirement

❖ Spain’s tennis player Rafael Nadal has announced his retirement from the professional tennis. ❖ Nadal has won 22-grand slam singles title and a record 14 French Open titles. ❖ A five-time year-end world number one, he remained in the ATP top 10 for an incredible 17 years, from 2005 until March 2024. ❖ During his peak years, he spent 209 weeks ranked as the world’s top player. ❖ He won at least one title every year from 2004 to 2022.