Posts

Current Affairs

இந்தியாவின் 51வது தலைமை நீதிபதி

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஆறு மாதங்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற உள்ளார். ஏற்கனவே வருமான வரித் துறையின் மூத்த அரசுத் தரப்புச் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டில், அவர் டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்தியத்திற்கான அரசுத் தரப்பு சட்ட ஆலோசகராக (உரிமையியல்) நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2006 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியானார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதியன்று, நீதிபதி கண்ணா அவர்கள், முன்னதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றாத நிலைமையிலேயே உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Current Affairs

51st Chief Justice of India

❖ President Droupadi Murmu has administered the oath of office to Justice Sanjiv Khanna. ❖ He is set to serve a six-month term as Chief Justice of India. ❖ He also served as the Senior Standing Counsel for the Income Tax Department. ❖ In 2004, he was appointed Standing Counsel (Civil) for the National Capital Territory of Delhi. ❖ He was appointed an additional judge of the Delhi High Court in 2005 and became a permanent judge in 2006. ❖ On January 18, 2019, Justice Khanna was appointed as a Judge of the Supreme Court without having previously served as Chief Justice of a High Court.

Current Affairs

வெப்ப அலையால் ஏற்பட்ட துறை வாரியான பாதிப்பு

மாநிலத் திட்ட ஆணையமானது (SPC), தொழில் முறை சார்ந்தப் பாதிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து அதற்கான முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 'Beating The Heat-Tamil Nadu Heat Mitigation Strategy தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், முறைசாராத தொழிலாளர்கள், இயங் கலை வழி ரீதியில் திரட்டப்படும் தொழிலாளர்கள், இயந்திர/உட்புற வெப்பம் நிறைந்த சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்ற பல பெரும் பாதகமான வேலைச் சூழ்நிலைகளில் உள்ள மக்களின் பிரச்சினையை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டி உள்ளது. கால்நடை வளர்ப்பு, மீன்வளம், காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகியவற்றில் உள்ள சவால்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டு, அதற்கான முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சில பரிந்துரைகள்: 0 வெப்ப அழுத்தக் குறியீடுகள், அணியக் கூடிய வகையிலான வெப்ப உணர்விக் கருவிகள் அல்லது வானிலைக் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பணியிடத்தில் வெப்பத் தாக்க அளவைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளை நிறுவுதல் முதலுதவிக்கான பல்வேறு நெறிமுறைகள், மருத்துவச் சேவையை அணுகுதல் மற்றும் ஆபத்தின் போது தொழிலாளர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட வெப்பம் தொடர்பான சம்பவங்களுக்கான அவசரகால எதிர் நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்குதல்.

Current Affairs

Sector-wise impact from heat wave

❖ The State Planning Commission (SPC) has looked at impact across the sectors including occupational impacts and has made key recommendations. ❖ Its report is titled ‘Beating the Heat-Tamil Nadu Heat Mitigation Strategy’. ❖ The report has flagged the issue of populations in adverse working conditions like the outdoor workers, informal workers, gig workers, workers exposed to mechanical/indoor heat. ❖ The report also dealt with challenges in animal husbandry, fisheries, forests and mangroves and made key recommendations. ❖ Some recommendations are  o Establishing mechanisms for monitoring heat stress levels in the workplace through heat stress indices, wearable sensors, or weather monitoring systems o Developing emergency response plans for heat-related incidents, including protocols for first aid, accessing medical care, and evacuating workers.

Current Affairs

IUCN அமைப்பின் முதல் உலகளாவிய மரங்கள் மதிப்பீடு

சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியலின் புதுப்பிப்பின் போது முதல் உலகளாவிய மரங்கள் மதிப்பீடு ஆனது வெளியிடப்பட்டது. இதன் கண்டுபிடிப்புகள் ஆனது உயிரிப் பன்முகத்தன்மை உடன்படிக்கையின் 16வது பங்குதாரர்கள் (COP16) மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. உலகில் உள்ள மர இனங்களில் சுமார் 38 சதவீதம் ஆனது தற்போது அழிவை எதிர் நோக்கி வருவதாக இந்த மதிப்பீடு கண்டறிந்துள்ளது.அபாயத்தில் உள்ளன. உலகின் மிகவும் உயர்ந்த மரங்கள் பன்முகத்தன்மை கொண்ட தென் அமெரிக்காவில், மதிப்பிடப் பட்ட 13,668 இனங்களில் 3,356 மர இனங்கள் ஆபத்தில் உள்ளன. IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தற்போது 166,061 இனங்கள் உள்ளன, அவற்றில் 46,337 அழியும் அபாயத்தில் உள்ளன.

Current Affairs

IUCN First Global Tree Assessment

❖ The first Global Tree Assessment was published in an update of the International Union for Conservation of Nature (IUCN) Red List of Threatened Species. ❖ The findings were announced at the COP16 to CBD. ❖ This assessment has found that nearly 38 per cent of the world’s tree species are now facing extinction. ❖ At least 16,425 of the 47,282 tree species analysed are in danger of extinction. ❖ In South America, which boasts the world’s highest tree diversity, 3,356 out of the 13,668 assessed species are at risk. ❖ The IUCN Red List now includes 166,061 species, of which 46,337 are threatened with extinction.

Current Affairs

PM-வித்யா லட்சுமி திட்டம்

ஆண்டிற்கு சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமர்-வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ஆனது, "நிதிக் கட்டுப்பாடுகள் ஆனது எந்தவொரு மாணவரையும் உயர் கல்வியைத் தொடர்வதைத் தடுக்கக் கூடாது என்பதற்காகத் தகுதியுள்ள அனைத்தும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளது". * சுமார் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனைப் பெற முயலும் மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ள 75 சதவீத கடனுக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கும். ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரையில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் பெற உரிமை வழங்கப்படும். அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையானது, PM-வித்யாலட்சுமி என்ற ஒருங்கிணைந்த இணைய தளத்தினை அமைக்க உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் வட்டி மானியம் பெறலாம்.

Current Affairs

PM-Vidya Laxmi Scheme 2024

The Union cabinet approved the PM-Vidyalaxmi scheme that aims to cover over 22 lakh students a year. ❖ The scheme will provide the financial support to meritorious students so that financial constraints do not prevent anyone from pursuing higher studies. ❖ For students looking at loans of up to Rs 7.5 lakh, the government will provide credit guarantees to the tune of 75 per cent of the outstanding defaults. ❖ Students belonging to economically-weaker families with an annual income of up to Rs 8 lakh — will be entitled to a three per cent interest subvention on loans of up to Rs 10 lakh. ❖ The ministry’s department of higher education will set up a unified portal, PMVidyalaxmi  ❖ This will allow the students to apply for the education loan as well as interest subvention to all the banks.

Current Affairs

திருநெல்வேலி - புத்தொழில் நிறுவனங்களின் மையம்

திருநெல்வேலியானது தற்போது வளர்ந்து வரும் தொழில் முனைவோர் சூழல் அமைப்பிற்கான கவனத்தை ஈர்த்து வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் இருந்து அதிகமான பெண்கள் அவர்களின் தடைகளை உடைத்து, புத்தொழில் சூழல் அமைப்பில் நுழைந்துள்ளனர்.  திருநெல்வேலி மண்டல மையத்தில் 405 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும். சுமார் 43% புத்தொழில் நிறுவனங்கள் பெண்களால் நிறுவப்பட்டது அல்லது இணைந்து நிறுவப்பட்டது.

Current Affairs

Tirunelveli - startup hub

❖ Tirunelveli is now garnering attention for its burgeoning entrepreneurial ecosystem. ❖ Over the past few years, more women from this region are breaking the barriers and venturing into the start-up ecosystem. ❖ There were 405 start-ups in the Tirunelveli regional hub. ❖ Districts, including Tirunelveli, Tenkasi, Thoothukudi, Kanniyakumari and Ramanathapuram, constitute this hub. ❖ There are 88 start-ups with women as co-founders. ❖ About 43% of the start-ups have been founded or co-founded by women.