Posts

Current Affairs

Anti-Dumping Duty on Epichlorohydrin

❖ India has recently imposed an anti-dumping duty of up to USD 557 per tonne on Epichlorohydrin ❖ It is a chemical primarily used in the adhesive industry, imported from China, South Korea, and Thailand. ❖ This duty, effective for the next five years, is intended to protect Indian manufacturers from the adverse impacts of low-cost imports. ❖ Anti-dumping duties are levied to counteract imports priced lower than the fair market value, which can disrupt domestic industries and lead to unfair competition

Current Affairs

கடல் யானைகளில் H5N1 பாதிப்பு

H5N1 வகை பறவைக் காய்ச்சலானது ஓராண்டில் சுமார் 17,000 கடல் யானைகள் உயிரிழப்பிற்கு வழிவகுத்தது. * இது 2023 ஆம் ஆண்டில் 95 சதவீத கடல் யானைக் குட்டிகளை அழித்து விட்டது. இந்த வைரஸ் ஆனது 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பெரு மற்றும் சிலி நாட்டுக் கடற்கரைகளில் பரவியது. இது கடற்பன்றி, ஓங்கில்கள் மற்றும் பிற கடல் வாழ் பாலூட்டிகளால் பரவுகிறது. இந்தத் தொற்று ஆனது, குறிப்பாக அர்ஜென்டினா நாட்டின் படகோனியாவில் இனப் பெருக்கம் செய்யும் உயிரினங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. H5N1 என்பது பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் பாதிக்கும் ஒரு மிகக் கடுமையான வைரஸ் தொற்று ஆகும்.

Current Affairs

H5N1 in Elephant Seal

❖ The H5N1 strain of avian influenza has led to the deaths of over 17,000 elephant seals in a year. ❖ It had wiped out 95 per cent of the pups in 2023. ❖ The virus spread along the coasts of Peru and Chile between 2022 and 2023. ❖ It was transmitted by porpoises, dolphins and other marine mammals. ❖ The outbreak has severely impacted the breeding populations, particularly in Patagonia, Argentina. ❖ H5N1 (HPAI-highly pathogenic avian influenza) is a severe viral infection affecting birds and mammals.

Current Affairs

முதல் பல்லுயிர்ப் பெருக்க மற்றும் இயற்கை சார் பத்திரம்

 ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆனது, அதன் முதல் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் இயற்கை சார் பத்திரத்தினை வெளியிட்டுள்ளது. இது ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் உள்ள தகுதியான திட்டங்களின் தொகுப்பிற்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  சுமார் 150 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான (100 மில்லியன் அமெரிக்க டாலருக்குச் சமம்), 10 ஆண்டு கால முதிர்ச்சிக் காலத்தினைக் கொண்ட பத்திரமானது ஜப்பானின் டாய்-இட்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினால் வாங்கப்பட்டது. ஆசிய மேம்பாட்டு வங்கியானது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பவளப் பாறை முக்கோண முன்னெடுப்பின் ஒரு இணை ஸ்தாபன அமைப்பாகும்.  2023 ஆம் ஆண்டில், ADB ஆனது பங்குதாரர்களுடன் இணைந்து, இயற்கை சார் தீர்வு அமைப்புகளுக்கான நிதி வழங்கீட்டு மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்துடன் இணைந்து இயற்கை மூலதன நிதி ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது.

Current Affairs

First Biodiversity and Nature Bond

❖ The Asian Development Bank (ADB) has issued its first biodiversity and nature theme bond. ❖ It aims to finance a pool of eligible projects across Asia and the Pacific. ❖ The A$150 million (equivalent to US$100 million), 10-year issue was purchased by the Dai-Ichi Life Insurance Company, of Japan. ❖ ADB is a founding partner of the Coral Triangle Initiative established in 2009. ❖ In 2023, ADB launched the Nature Solutions Finance Hub along with partners, as well as the Natural Capital Fund, in partnership with the Global Environment Facility

Current Affairs

பரவலாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்பு

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குடியிருப்பு, வணிக, உள்ளூர்ச் சமூகம், பரவலாக்கப்பட்ட அல்லது வழக்கத்திற்கு மாறான பயன்பாடுகளில் பெரும் புதுமையான முறைகள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தும்". இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சூரிய சக்தி அடிப்படையிலான மிதக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை, உயிரி பொருள் சார்ந்த பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மற்றும் கழிவுநீரில் இருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை ஆகியவை அடங்கும். பசுமை ஹைட்ரஜனின் பரவலாக்கப்பட்ட பயன்பாடு ஆனது சமையல், வெப்பமாக்கல், பொது மின் விநியோகக் கட்டமைப்பு சாராத மின்சார உற்பத்தி அல்லது சாலைப் பயன்பாடு சாராத வாகனங்களை இயக்குதல் ஆகியவை அடங்கும்.

Current Affairs

Decentralized Green Hydrogen Initiative

❖ The government has announced a ₹200-crore scheme for the implementation of pilot projects for the production and use of green hydrogen. ❖ It will use innovative methods or pathways in the residential, commercial, local community, decentralised or non-conventional applications”. ❖ The projects under this scheme includes floating solar-based green hydrogen production, biomass-based green hydrogen, and green hydrogen from waste water. ❖ Decentralised use of green hydrogen could include cooking, heating, off-grid electricity generation or powering off-road vehicles

Current Affairs

ஆப்பிரிக்க யானைகள் பற்றிய அறிக்கை

ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி முழுவதும் உள்ள கணக்கெடுக்கப்பட்ட சில இடங்களில் சவன்னா (புல்வெளி) வாழ் யானைகளின் மீதான எண்ணிக்கையானது சராசரியாக 70% குறைந்துள்ளதாகச் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் வனவாழ் யானைகளின் எண்ணிக்கையானது சுமார் 90% குறைந்துள்ளது என்ற நிலையில் இதற்கு வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை சில முக்கிய காரணிகளாக உள்ளன. ஒட்டு மொத்தமாக, கணக்கெடுக்கப்பட்ட இந்தத் தளங்களில் இரண்டு இனங்களிலும் சராசரியாக 77% எண்ணிக்கை குறைவு பதிவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில், சவன்னா யானைகளின் எண்ணிக்கை சராசரியாக சுமார் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கணக்கெடுக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கையில் மட்டுமே 10 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Current Affairs

Report on African Elephant

❖ The recent study found that savanna elephant populations fell by about 70% on average at the surveyed sites across the sub-Saharan African region. ❖ The forest elephant populations were dropped by about 90%, with poaching and habitat loss as the main drivers. ❖ Overall, there was an average population decrease of 77% across the surveyed sites for both species. ❖ In southern Africa, the savannah elephant population saw an average increase of 42 percent. ❖ Only 10 percent of surveyed populations in eastern Africa showed growth.  

Current Affairs

போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளிவிவரங்கள் 100வது ஆண்டு

1924 ஆம் ஆண்டில், சத்யேந்திர நாத் போஸ், ஃபோட்டான் (ஒளியின் துகள்கள்) தொகுப்புகளின் செயல்பாடுகள் பற்றி அறிவதற்கான சரியான சமன்பாடுகளின் ஒரு தொகுப்பைக் கண்டுபிடித்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அதனை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து அதனை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார். இந்த ஆண்டானது போஸ் அவர்களின் கண்டுபிடிப்பின் 100வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடனான அவரது ஒத்துழைப்பு இறுதியில் B-E புள்ளிவிவரங்களை முன் வைக்க வழி வகுத்தது.  கிடைக்கக் கூடிய ஆற்றல் நிலைகளில் துகள்கள் எவ்வாறு தங்களைப் பரவச் செய்கின்றன என்பதை இது விளக்குகிறது. B-E புள்ளியியல் கொள்கைக்கு இணக்கமான வகையிலான துகள்கள் ஆனது S.N போஸ் அவர்களின் நினைவாக "போசான்ஸ்" என்று குறிப்பிடப்படுகின்றன.