Posts

Current Affairs

World AMR Awareness Week 2024 - November18/24

❖ Antimicrobial resistance (AMR) is an increasingly serious threat to global public health. ❖ It has significant impacts on human and animal health, food production and the environment. ❖ Theme for this year is “Educate. Advocate. Act now”.

Current Affairs

‘Know Your Medicine’ செயலி

மத்திய அரசானது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் (NADA) 'Know Your Medicine (KYM)' செயலியை ஏற்குமாறு நாடு தழுவிய கோரிக்கையினைத் தொடங்கியுள்ளது. இது விளையாட்டுகளில் ஊக்கமருந்துப் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தை மிக நன்கு வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஒட்டு மொத்த விளையாட்டுச் சமூகத்தையும் வலியுறுத்துகிறது. இந்தப் புதுமையான முயற்சியானது, விளையாட்டு வீரர்களுக்கு என்று முக்கியமானத் தகவல்களை வழங்கி, அவர்கள் மிகவும் அலட்சியமாக ஊக்கமருந்துக்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் ஒரு நியாயமான விளையாட்டுத் துறையை மிகவும் நன்கு பேணவும் உதவுகிறது. 2005 ஆம் ஆண்டில் ஊக்கமருந்து இல்லாத விளையாட்டுத் துறையினை உருவாக்கச் செய்வதற்காக இந்திய அரசினால் NADA நிறுவப்பட்டது.

Current Affairs

'Know Your Medicine' app

❖ The Centre has launched a nationwide appeal to embrace the National AntiDoping Agency (NADA) India's ‘Know Your Medicine (KYM)’ app. ❖ It aims to strengthen the fight against doping in sports, urging athletes, coaches, and the entire sporting community. ❖ This innovative tool aims to empower athletes with critical information, helping them avoid inadvertent doping and maintain fair play. ❖ NADA was established by the Government of India in 2005 to have a dope-free sports.

Current Affairs

அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஆனது 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவில் குறுகிய கால மின்சாரச் சந்தை குறித்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.  CERC ஆனது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையினை (HP-DAM) அறிமுகப்படுத்த தனது ஒப்புதலை அளித்தது. தற்போதுள்ள விலை உச்ச வரம்பு மீதான ஒரு காரணமாக பிந்தைய நாள் மதிப்பின் *  அடிப்படையிலான சந்தையில் பங்கேற்க முடியாத மிகவும் அதிக விலை உருவாக்கத் துறைகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட சந்தைப் பிரிவு ஆனது அறிமுகப் படுத்தப் பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ஆனது, மின் பரிமாற்றங்களில் அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையிலிருந்து மின்சாரத்தை அதிகம் வாங்கும் நிறுவனமாக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் இந்திய எரிசக்தி சந்தையில் அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்த அளவு சுமார் 32.07 மில்லியன் அலகுகள் (MU) ஆகும். இதில் TANGEDCO நிறுவனத்தின் பங்கு 20.98 MU அல்லது 65.43% ஆகும். இந்த அறிக்கையின்படி, TANGEDCO நிறுவனத்தின் சராசரி கொள்முதல் சக்தியானது ஓர் அலகுக்கு 17.65 ரூபாயாக இருந்தது. மாநிலத்தின் மின்சாரத் தேவையானது மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற வரலாறு காணாத வகையில் புதிய சாதனையை எட்டியது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது.

Current Affairs

High Price Day Ahead Market 2023-24

❖ The report on the short-term power market in India 2023-24 was released by the Central Electricity Regulatory Commission (CERC). ❖ CERC had approved the introduction of High Price Day Ahead Market (HP-DAM) in February 2023. ❖ The dedicated market segment was introduced to enable high-cost generators, who have otherwise not been able to participate in the day-ahead market due to the existing price ceiling. ❖ Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) was the major buyer of electricity from the High Price Day Ahead Market in power exchanges. ❖ Total Volume transacted through High Price Day Ahead Market in Indian Energy Exchange was about 32.07 million units (MU) in 2023-24. ❖ TANGEDCO accounted for 20.98 MU or 65.43%. ❖ TANGEDCO’s weighted average purchase power was ₹ 17.65 per unit, as per the report. ❖ The State’s power demand hit a new record, touching an all-time-high of 20,830 MW on May 2. ❖ The daily consumption hit a new high of 454.32 MU on April 30.

Current Affairs

இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள்

நைஜீரியா நாடு தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (GCON) என்ற விருதினை வழங்கி இந்தியப் பிரதமரை கெளரவிக்க உள்ளது. 1969 ஆம் ஆண்டில் இந்த GCON விருது பெற்ற ஒரே வெளிநாட்டுப் பிரமுகர் எலிசபெத் மகாராணி ஆவார். தற்போதைய இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் 17வது சர்வதேச விருது இதுவாகும். டொமினிகா காமன்வெல்த் நாட்டு அரசானது, அந்நாட்டின் உயரிய தேசிய விருதான டொமினிகா விருதினை இந்தியப் பிரதமருக்கு வழங்கி கெளரவிக்க உள்ளது. * இது கோவிட்-19 பெருந்தொற்றுகளின் போது டொமினிகாவிற்கு அவர் ஆற்றியப் பல பங்களிப்புகள் மற்றும் இந்தியாவிற்கும் டொமினிக்காவிற்கும் இடையிலான நட்புக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் ஆகும். டொமினிகா விருதானது இதற்கு முன்னர், கியூபாவின் தலைவரும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு வழங்கப்பட்டது. மேலும் டொமினிகாவின் ஒவ்வொரு அதிபருக்கும் இந்த மரியாதை வழங்கப்படுகிறது.

Current Affairs

Award to Indian Prime Minister 2024

❖ Nigeria is to honour Indian Prime Minister with its award- The Grand Commander of The Order of the Niger (GCON). ❖ Queen Elizabeth is the only foreign dignitary who has been awarded GCON in 1969. ❖ This will be the 17th such international award being conferred to PM by a country ❖ The Commonwealth of Dominica will also bestow its highest national award, the Dominica Award of Honour, upon Indian Prime Minister. ❖ This is a recognition of his contributions to Dominica during the COVID-19 pandemic and his dedication to strengthening the partnership between India and Dominica. ❖ The Dominica Award of Honour was earlier received by Fidel Castro, Cuban leader and revolutionary. ❖ Each President of Dominica also is bestowed with that honour.

Current Affairs

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை

இதுவரையில் பதிவு செய்யப்படாத அளவு மிகப்பெரிய பவளப்பாறை ஆனது தென் மேற்குப் பசிபிக் பெருங்கடலில் அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சாலமன் தீவுகளின் கடற்பகுதியில் உள்ள இது சுமார் இரண்டு கூடைப்பந்து மைதானங்களைப் போல மிகப் பெரியது மற்றும் விண்வெளியில் இருந்து புலப்படும் வகையில் உள்ளது. இணைக்கப்பட்ட பல்வேறு பவளப் பாறைகளின் தொகுப்பான இந்த மாபெரும் பவளப் பாறையானது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம்.

Current Affairs

World's largest coral

❖ The largest coral ever recorded has been found by scientists in the southwest Pacific Ocean. ❖ It is as big as two basketball courts and visible from space in the waters of the Solomon Islands. ❖ The mega coral - which is a collection of many connected, could be more than 300 years old.  

Current Affairs

எபிக்லோரோஹைட்ரின் மீதான எதிர்ப்பு இறக்குமதி குவிப்புத் தடுப்பு வரி

இந்திய அரசானது, சமீபத்தில் எபிக்லோரோஹைட்ரின் இறக்குமதிக்கு ஒரு டன்னுக்கு 557 அமெரிக்க டாலர்கள் வரை என்ற வீதத்தில் இறக்குமதி குவிப்புத் தடுப்பு வரியை விதித்துள்ளது. இது சீனா, தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பசைத் தொழில் துறையில் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்க உள்ள இந்த வரியானது, குறைந்த விலை இறக்குமதியினால் ஏற்படும் பாதகமானத் தாக்கங்களில் இருந்து இந்திய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. உள்நாட்டுத் தொழில்துறைகளைப் பெருமளவு சீர்குலைத்து நியாயமற்றப் போட்டிக்கு  வழி வகுக்கின்ற வகையில் சில பொருட்கள் நியாயமானச் சந்தை மதிப்பை விட மிக குறைவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுவதைத் தடுப்பதற்காக, இறக்குமதி குவிப்புத் தடுப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன.