Posts

Current Affairs

New Comptroller and Auditor General of India

❖ Senior IAS officer K. Sanjay Murthy was appointed as the new Comptroller and Auditor General of India (CAG). ❖ He will complete his term on November 20, 2024. ❖ The Clause (1) of article 148 of the Constitution of India empowered President to Appoint CAG.

Current Affairs

அதிக எண்ணிக்கையிலான பெண் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்

மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான பெண் மன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) உள்ளனர். இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய சில மாநிலங்கள் இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற மாநிலங்கள் ஆகும். இந்தியாவில் 17 மாநில அரசுகளானது, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள குறைந்தபட்சம் 33% இட ஒதுக்கீட்டிற்கும் மேலாகப் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான சட்டத்தினை இயற்றியுள்ளன. இந்தியாவில் உள்ள உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களில் சுமார் 46% பேர் பெண்கள் ஆவர்.பாட்னா, சிம்லா, ராஞ்சி மற்றும் புவனேஸ்வர் உட்பட, செயல்பாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட 21 தலைநகரங்களுள் 19 தலைநகரங்களில், இந்த எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

Current Affairs

Highest number of women councilors

❖ Among the States, Tamil Nadu has the highest number of women councillors. ❖ The other States in the top 10 are Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Andhra Pradesh, Karnataka, Uttar Pradesh, Kerala, Bihar and Chhattisgarh. ❖ 17 States in India have legislated for 50% women’s reservation, well over the constitutional minimum of 33%. ❖ Around 46% of the councillors in India are women. ❖ In 19 out of 21 capital cities that have active urban local bodies, including Patna, Shimla, Ranchi and Bhubaneswar, the figure goes well over 60%.

Current Affairs

இந்திய ஹாக்கி அமைப்பின் 100ஆம் ஆண்டு

99 ஆண்டுகளுக்கு முன்பு, 1925 அம் ஆண்டு நவம்பர் 07 ஆம் தேதியன்று குவாலியரில் ஹாக்கிக்கான முதல் தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய ஹாக்கி அமைப்பின் 100வது ஆண்டினை எட்டியுள்ள ஒரு நிலையில் இதற்கான ஓராண்டு காலக் கொண்டாட்டம் ஆனது ஹாக்கி இந்தியா அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இன்று வரையிலும், மொத்தம் எட்டு ஹாக்கி ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்ற இந்தியாவின் சாதனை இன்னும் முறியடிக்கப் படவில்லை.

Current Affairs

100 years of Indian Hockey

❖ It was 99 years ago, on November 7, 1925, that the first national body for hockey was formed in Gwalior. ❖ It is now entering the 100th year of Indian hockey, a year-long celebration has been announced by Hockey India. ❖ Indian team saw the team winning six gold medals in a row. ❖ Till date, India's record of eight Olympic gold medals in total is unmatched

Current Affairs

இந்தியாவின் முதல் நீண்ட தூர வரம்புடைய மீயொலி எறிகணை

இந்திய நாடானது பல்வேறு ஆயுதங்களை 1,500 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவு வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட தனது முதல் நீண்ட தூர வரம்புடைய மீயொலி எறிகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த எறிகணையானது மாக் 6 ( ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு) என்ற வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த வகையானது, "கேரியர் கில்லர்" என்ற புனைப் பெயர் கொண்ட சீனாவின் DF-21D எறிகணைக்குச் சமமான ஆயுத அமைப்பினைக் கொண்ட நாடாக இந்திய நாட்டின் நிலையினை உயர்த்தும்.

Current Affairs

India's first long-range hypersonic missile

❖ India has successfully tested its first long-range hypersonic missile, capable of carrying various payloads over 1,500 km. ❖ The missile is capable of travelling at speeds of Mach 6 (six times the speed of sound). ❖ This variant could position India closer to having its own equivalent of China's DF-21D nicknamed the "carrier killer".

Current Affairs

16வது நிதி ஆணையத்தின் அலுவல் பூர்வ வருகை

ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16வது நிதி ஆணையக் குழு தமிழகத்திற்கு வருகை தந்தது. அக்குழுவின் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக நெம்மேலி உப்புநீக்க ஆலையையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கினை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் அது குறைக்கப்பட்ட நிதிப் பகிர்வு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டங்களால் பெருகி வரும் நிதிச் சுமைகள் பற்றிய சிக்கல்களையும் நன்கு குறிப்பிட்டுக் காட்டியது. தமிழ்நாடு போன்ற வளர்ந்து வரும் மாநிலங்களை மிகவும் நன்கு ஆதரிக்கும் திருத்தப் பட்ட நிதிக் கட்டமைப்பின் அவசியத்தை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், 15வது நிதிக் குழுவினால் வெகுவாக பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களுக்கான 41% வருவாய்ப் பகிர்விற்கும், 33.16% உண்மையான வருவாய்ப் பகிர்வுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது.

Current Affairs

16th FC’s official visit

❖ The Chairman Arvind Panagariya led the 16th Finance Commission team visited Tamil Nadu. ❖ They also inspected the Nemmeli desalination plant as part of their consultations. ❖ Tamil Nadu called for an increase in the state’s share of central taxes to 50%. ❖ It was citing concerns over reduced devolution of funds and mounting financial burdens due to centrally-sponsored schemes. ❖ The state has emphasised the need for a revised fiscal framework that supports developing states like Tamil Nadu. ❖ It has expressed concern over the gap between the 15th Finance Commission’s recommendation of a 41% revenue share for states and the actual average devolution of 33.16% over the past four years.

Current Affairs

உலக AMR விழிப்புணர்வு வாரம் நவம்பர்18/24

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு (AMR) என்பது உலகளாவியப் பொது சுகாதாரத்திற்கு பெருகிய அளவில் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இது மனித மற்றும் விலங்கு ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Educate, Advocate. Act now" என்பதாகும்.