Posts

Current Affairs

நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்து உச்ச நீதிமன்றம் 2024

நீதிபதிகளின் பதவி உயர்வுக்கான பரிந்துரையை உயர் நீதிமன்ற (HC) தலைமை நீதிபதி தனியாக மறுபரிசீலனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் (SC) தீர்ப்பு அளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது கூட்டாகச் செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்தப் பரிசீலனையினை மேற்கொள்ள முடியும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் உள்ளனர். * உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, நீதிபதிகள் நியமனங்கள் குறித்த பரிந்துரையை மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு அனுப்புகிறது. * இறுதி முடிவுகள் இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளின், நீதிபதிகள் தேர்வுக் குழுவினால் மேற்கொள்ளப் படுகின்றன. நாட்டில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது குறித்தும் மூன்று  மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிபதிகள் தேர்வுக் குழு முடிவு செய்கிறது.

Current Affairs

Supreme Court on Judges’ Elevation 2024

❖ The Supreme Court (SC) has ruled that a High Court (HC) Chief Justice cannot individually reconsider a recommendation for a judge’s elevation. ❖ This can only be done by the High Court Collegium acting collectively. ❖ The High Court collegium has the chief justice of the High court with two other senior most judges. ❖ The high court collegium only sends the recommendation to the Supreme Court collegium on judicial appointments. ❖ The final decisions are taken by a collegium of the CJI and two seniors most judges of the SC. ❖ This collegium of the three senior-most SC judges also decides transfers of HC judges in the country.

Current Affairs

உலகின் முதல் அணுக் கடிகாரம்

அறிவியலாளர்கள் நாம் தற்போது சார்ந்துள்ள அணுக் கடிகாரங்களை விட மிகவும் மேம்பட்ட அணுக் கடிகாரத்தின் முதல் முன்மாதிரியை உருவாககி வருகின்றனர். தற்போதைய அணுக் கடிகாரங்கள், பில்லியன் கணக்கான ஆண்டுகளில் வினாடிகளை மட்டுமே இழக்கச் செய்யும் வகையில் அதீத துல்லியத்துடன் நேரத்தை அளவிடுகின்றன. அணுக் கடிகாரங்கள், அணுக்களில் உள்ள ஆற்றல் மட்டங்களுக்கு இடையே தாவும் எலக்ட்ரான்களின் அடிப்படையில் நேரத்தை அளவிடுகின்றன. ஆனால் அணுக் கடிகாரம் அணுக்கருவை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. அணு அதன் கருவை விட 100,000 மடங்கு பெரியது.  அணுக் கடிகாரத்தின் ஆற்றல் நிலையானது அணுக்கருவில் உள்ள மிகவும் வலுவான சக்திகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அணுக் கடிகாரங்கள் முக்கியமாக மின்காந்த சக்திகளைச் சார்ந்தது

Current Affairs

World’s First Nuclear Clock

❖ The scientists develop the first prototype of the nuclear clock, which is much more advanced than the atomic clocks we currently rely on. ❖ Current atomic clocks measures time with exceptional precision, losing only seconds across billions of years. ❖ Atomic clocks measure time based on electrons jumping between energy levels in atoms. ❖ But the nuclear clock focuses just on the nucleus. ❖ Atom is 100,000 times bigger than its nucleus. ❖ The nuclear clock’s energy level is closely coupled to strong forces in the nucleus. ❖ The atomic clocks mainly depend on electromagnetic forces.

Current Affairs

TIME100 இதழின் செயற்கை நுண்ணறிவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் - 2024

டைம் இதழ் ஆனது, 'TIME100 இதழின் 2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற பல இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அஷ்வினி வைஷ்ணவ், நந்தன் நீலகேனி மற்றும் நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய இந்தியப் பிரமுகர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், புது டெல்லி நீதிமன்றம் அனில் கபூரின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது.  பல்வேறு வணிக நோக்கங்களுக்காக என்று செயற்கை நுண்ணறிவினைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆளுகை உரிமைகளை நன்கு பாதுகாப்பதை கபூர் வலியுறுத்தினார்.

Current Affairs

TIME100 Most Influential People in AI 2024

❖ TIME Magazine unveiled its 'TIME100 Most Influential People in AI 2024' list. ❖ This list includes many Indians like Google and Alphabet CEO Sundar Pichai and Microsoft CEO Satya Nadella. ❖ Other Key Indian figures include Ashwini Vaishnaw, Nandan Nilekani and actor Anil Kapoor. ❖ In 2023, a New Delhi court ruled infavor of Anil Kapoor, curbing entities from misusing his image. ❖ Kapoor emphasized protecting personality rights against AI misuse for commercial purposes.

Current Affairs

பசுமை ஹரியானா கொள்கை விளக்க அறிக்கை - 2024

ஹரியானாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்காக முதல் முறையாக 'பசுமை அறிக்கை 2024' எனப்படும் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். * காற்று மாசுபாடு, கழிவு மேலாண்மை, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், ஆரவல்லி மலைத் தொடரைப் பாதுகாப்பதன் அவசியம் போன்ற பல்வேறு நெருக்கடி மிக்கப் பிரச்சினைகளை இது முன் வைக்கிறது.  தேசியச் சராசரியான 21 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 3.6% பங்குடன் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான வனப் பரவலைக் கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது. மேலும், இந்த மாநிலம் உலகில் மிகவும் மாசுபட்ட 50 இடங்களில் எட்டு இடங்களைக் கொண்டுள்ளது. பசுமை அறிக்கை 2024' என்ற அறிக்கையில் உள்ள முக்கிய கோரிக்கை: பூட் பகுதிகள் மற்றும் சிவாலிக் போன்றவை உள்ளிட்ட ஆரவல்லி மலைத் தொடரை 'முக்கியச் சுற்றுச்சூழல் மண்டலங்களாக' சட்டப் பூர்வமாக நியமிக்க வேண்டும். கடுமையான 1994 ஆம் ஆண்டு டெல்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தினை போலவே ஹரியானாவிற்கு ஒரு 'மரப் பாதுகாப்புச் சட்டத்தை' இயற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப் பட்டுள்ளது.

Current Affairs

Green Haryana manifesto – 2024

❖ In a first-of-its-kind initiative, environmentalists in Haryana released the 'Green Manifesto 2024' to focus on ecological issues. ❖ It was raising various pressing issues such as air pollution, waste management, depleting ground water level, and the need to protect the Aravalis. ❖ The State had the lowest forest cover in India, a mere 3.6% as compared to the national average of 21%. ❖ It is also having eight of the 50 most polluted places in the world ❖ The main demand in the ‘Green Manifesto 2024’ is to legally designate the Aravallis including the Bhood areas and the Shivaliks as ‘Critical Ecological Zones’. ❖ It also demands legislating a ‘Tree Act’ for Haryana on the line of the strict Delhi Preservation of Trees Act 1994.

Current Affairs

தமிழகத்தில் கண் தானம் 2024

நாடு முழுவதும் பதிவாகும் கண் தானத்தில் தமிழகம் சுமார் 25 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 5,422, 2022-23 ஆம் ஆண்டில் 8,274 மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 9,400 கண் தானம் பதிவாகியுள்ளன. தானம் செய்யப்பட்ட 92.85% கருவிழிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்று பயன்படுத்தப் பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், இராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் மூலம் 4,87,469 பள்ளி மாணவர்களுக்கு கண் பார்வைத் திறன் ஆய்விற்குப் பின்னர் கண்ணாடிகள் வழங்கப் பட்டன.

Current Affairs

Eye donations in Tamil Nadu 2024

❖ Tamil Nadu contributes 25 per cent of eye donations nationwide. ❖ The state received 5,422 eye donations in 2021-22, 8,274 in 2022-23 and 9,400 in 2023-24. ❖ 92.85% of the donated corneas were utilised for transplantation. ❖ In the last three years, spectacles were provided for 4,87,469 school students after screening them through Rashtriya Bal Swasthya Karyakram.