Posts

Current Affairs

ரஃபேல் நடால் ஓய்வு

தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வந்த ரஃபேல் நடால் டேவிஸ் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். அவர் 2005 ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றார். ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார், அவற்றில் 14 பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெற்ற பட்டங்கள் ஆகும். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் உள்ள சென்டர் கோர்ட் மைதானமானது, 2017 ஆம் ஆண்டில் "பிஸ்தா ரஃபா நடால்" என மறுபெயரிடப்பட்டது. 

Current Affairs

Rafael Nadal’s Retirement

❖ Rafael Nadal retires at the Davis Cup, after more than 20 years in pro tennis. ❖ He played at the French Open for the first time in 2005 and left as the champion. ❖ Rafael Nadal has won 22 Grand Slam titles and 14 of them have been French Open. ❖ Centre Court at Barcelona of Spain was renamed "Pista Rafa Nadal" in 2017.

Current Affairs

கடல் சார் மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பு 2025

மத்திய அரசானது, ஐந்தாவது 'கடல் சார் மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பினைத் (2025) தொடங்கியுள்ளது.இந்த மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பு ஆனது, தரவுகளைச் சேகரிக்கவும் சேகரித்தத் தரவுகளை நிகழ்நேரத்தில் செயல்முறையாக்குவதற்கும் கைபேசி செயலிகள் மற்றும் மெய்நிகர் சேவையகங்களைப் பயன்படுத்தி முதன்முறையாக மிகவும் முழுமையாக எண்ணிம முறையில் மேற்கொள்ளப்படுகிறது.  இந்தியாவின் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். ஒன்றிய அமைச்சகம் ஆனது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்று மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பை நடத்துகிறது.  மக்களின் நலனுக்காக இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க இது உதவுகிறது.

Current Affairs

Marine Fisheries Census 2025

❖ The Centre launched the fifth ‘Marine Fisheries Census 2025. ❖ The census, for the first time, will be fully digital, leveraging mobile apps and virtual servers to collect and process data in real-time. ❖ The census will cover 1.2 million households across India’s coastline. ❖ The ministry conducts a fisheries Census every five years. ❖ It helps in making future policies and schemes for the benefit of the people who are related to this sector.

Current Affairs

வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளும் நடைமுறை

தம்பதிகள் வீட்டிலேயேப் பிரசவம் பார்த்துக் கொள்ளும் மருத்துவ நடைமுறையினை "தேர்ந்தெடுக்கும்" நிகழ்வுகளைக் கையாள்வதற்கான உயர்மட்ட விவாதத்தை மேற் கொள்வதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தங்களை மேற் கொள்வதையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக என்று குற்றவியல் சட்டங்களின் விதிகளைப் பயன்படுத்துமாறும் வல்லுநர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நீடித்த முயற்சிகள் மூலம் தமிழ்நாடு மாநிலம் 99.9% மருத்துவமனையில் பிரசவங்கள் நடைபெறும் நிலையினை அடைந்து உள்ளது.  நிதி ஆயோக் அமைப்பின் 2023-2024 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்கு- இந்தியா குறியீடானது, தமிழகத்தின் மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் சதவீதத்தை 99.98 ஆகக் குறிப்பிடுகிறது.

Current Affairs

'சுனாமி தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ள' கிராமங்கள்

ஒடிசாவில் உள்ள இருபத்தி நான்கு கடலோரக் கிராமங்கள் யுனெஸ்கோ அமைப்பின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தினால் 'சுனாமி தாக்குலை மிக நன்கு எதிர் கொள்வதற்கு தயாராக உள்ளவை' என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் நடைபெற்ற 2வது உலகளாவிய சுனாமி கருத்தரங்கின் போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள இரண்டு கிராமங்களின் 'சுனாமி தாக்குதலை எதிர் கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ள கிராமங்கள்' என்ற அங்கீகாரச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டன. அவை 2020 ஆம் ஆண்டில் சுனாமி தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் உள்ள கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டன. ஒடிசா மாநிலத்தில் 381 கிராமங்களில் சுனாமி பாதிப்பு அபாயம் உள்ளதாக அரசு அடையாளம் கண்டுள்ளது.

Current Affairs

'Tsunami Ready' villages

❖ Twenty-four coastal villages in Odisha were recognised by the Intergovernmental Oceanographic Commission of UNESCO as 'Tsunami Ready'. ❖ The recognition was given during the 2nd Global Tsunami Symposium held in Indonesia. ❖ Besides, the Tsunami Ready Recognition Certificates were renewed for two villages in the state. ❖ They were recognised as Tsunami Ready in 2020. ❖ The government has identified 381 villages in the state as tsunami-prone.

Current Affairs

சவக்கடலில் உப்புப் படிகக் கூடுகள்

சவக்கடலின் தரையில் சுமார் ஒரு மீட்டர் வரை உயரமுள்ள சில வெள்ளை நிற உப்புப் படிகக் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் படிகக் கூடுகள் ஆனது, தரைப் பரப்பிலிருந்து அதிக உவர் தன்மை கொண்ட ஒரு திரவம் வெளியேறுவதன் மூலம் உருவாகின்றன. மிக அதிக உப்புத் தன்மை கொண்ட நிலத்தடி நீரானது ஏரியின் தரைப் பரப்பிலிருந்து வெளியேறும் போது தாதுக்களின் ஒரு தன்னிச்சையானப் படிகமயமாக்கலால் அவை உருவாகின்றன. நடுக்கடல் முகடுகளிலும் மோனோ ஏரியின் துஃபா கோபுரங்களிலும் மிகவும் பெரும் பிரபலமான கருப்பு சல்பைடு படிகக் கூடுகள் காணப்படுகின்றன.

Current Affairs

Salt Chimneys at Dead Sea

❖ Researchers discovered have discovered meter-high white salt chimneys on the floor of the Dead Sea. ❖ These chimneys are formed by the expulsion of hypersaline fluid from the lake floors. ❖ They are formed by the spontaneous crystallization of minerals when the groundwater with an extremely high salt content flows up out of the lake floor. ❖ The most famous black smokers found along the mid-ocean ridges and the tufa towers of Mono Lake.

Current Affairs

இந்தியா மற்றும் சுவீடன் இணடயிலான 75 ஆை் டுகால உறவுகள

சுவீடன் நாடானது 75 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் நிலையான தொழில் துறை வளர்ச்சிக்கான பாதையில் அதிகளவிலான ஆதரவினை வழங்கி வருகிறது. அவை மிகக் குறிப்பாக அதிக உமிழ்வு மற்றும் சிக்கலான கார்பன் நீக்கம் போன்ற சவால்கள் உள்ள துறைகளில் ஒத்துழைப்பினை மேற்கொள்கின்றன.  துபாயில் நடைபெற்ற CO P28 மாநாட்டில், இரு நாடுகளும் இந்தியா-சுவீடன் தொழில் துறை மாற்றக் கூட்டாண்மையை (ITP) தொடங்கின. இது தொழில்துறை மாற்றத்திற்கான ஒரு தலைமைக் குழுவின் (LeadIT) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.  எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தித் துறைகளில் மேற்கொள்ளப்படும் முதன்மையான திட்டங்களில் கவனம் செலுத்தி, இந்தியாவிலும் உலக அளவிலும் கனரகத் தொழில் துறைகளின் மாற்றத்தினை விரைவுபடுத்துவதை ITP நோக்கமாகக் கொண்டுள்ளது.