Posts

Current Affairs

VISION இணைய தளம்

மாணவர்களின் புத்தாக்கம் மற்றும் ஒரு விழிப்புணர்வு வலையமைப்பிற்கான விக்சித் பாரத் முன்னெடுப்பினை (VISION) மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த பெரும் முன்னெடுப்பானது, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளிடையே கல்வி, திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் சுமார் 350 ஆக புத்தொழில் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் 1.67 லட்சமாக வளர்ச்சியடைந்ததையடுத்து, மூன்றாவது பெரியப் புத்தொழில் நிறுவனச் சூழலை இந்தியா கொண்டுள்ளது.

Current Affairs

VISION Portal

❖ The Centre inaugurated the ‘Viksit Bharat Initiative for Student Innovation and Outreach Network’ (VISION). ❖ The initiative aims to nurture education, skill development, and innovation among underprivileged children. ❖ India has the third-largest startup ecosystem, growing from 350 startups in 2014 to 1.67 lakh in 2024.

Current Affairs

ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையம் தமிழ்நாடு

சுகாதாரத் துறையின் கீழ் 'ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையத்தினை' அமைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் அதிகரித்து வரும் வெப்பநிலை, காரணி மூலம் நோய் பரவல் அதிகரித்தல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் மற்றும் கடலோரப் பாதிப்பு போன்றப் பிராந்தியம் சார்ந்த சவால்களை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையம் ஆனது, பருவநிலை சூழ்நிலைகளின் அடிப்படையில் நோய்ப் பாதிப்பு போக்குகளைக் கணிப்பதற்காக வேண்டி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்கும். இது பாதிக்கப்படக்கூடியச் சமூகங்களை மையமாகக் கொண்டு, பருவநிலையினால் ஏற்படக்கூடிய நோய்களை கண்காணிக்க மாநில அளவிலான ஒரு தரவுத் தளத்தினை உருவாக்கி புதுப்பிக்கும். இது சுகாதார அபாயங்கள் மற்றும் நோய்களை ஆய்வு செய்வதற்காக என்று விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்.

Current Affairs

One Health and Climate Hub – Tamilnadu

❖ The state is set to establish ‘One Health and Climate Hub’ under the Health Department. ❖ It aims to address the region-specific challenges such as rising temperature, increased vector-borne diseases, biodiversity loss, antimicrobial resistance and coastal vulnerability, in the context of climate change. ❖ The hub will develop AI-based models to predict disease trends based on climate scenarios. ❖ It will create and update a state-level database to track climate-sensitive diseases, with a focus on vulnerable communities. ❖ It will conduct comprehensive studies to map health risks and the diseases.

Current Affairs

GSAT-20 செயற்கைக்கோள்

GSAT-N2 அல்லது GSAT-20 என்பது 4,700 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளான இது இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண் ஏவு வாகனங்களின் செலுத்தும்  திறனை விஞ்சும் வகையிலானதாகும். இதனை விண்ணில் ஏவுவதற்கு என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ஏவு வாகனமானது அமெரிக்காவின் கேப் கனவரல் என்ற இடத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் ஆனது சுமார் 14 ஆண்டுகள் விண்ணில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இது இந்தியா முழுவதும் மற்றும் அதன் தொலைதூரப் பகுதிகளிலும் அத்தியாவசிய இணையம் மற்றும் தகவல் தொடர்புச் சேவைகளை வழங்கும்.  இது இந்தியப் பகுதி முழுவதும் அகலப்பட்டை அலைவரிசை மற்றும் விமானப் போக்குவரத்தின் போதான இணைய சேவை இணைப்பை மேம்படுத்தும். ஒரு இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பச் செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் இஸ்ரோ ஆகியவை சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Current Affairs

GSAT-20 Satellite

❖ GSAT-N2 or GSAT-20 is a 4,700 kg satellite that exceeds the weight capacity of India's indigenous rockets. ❖ The launch had utilised Space X's Falcon 9 rocket at cape Canaveral, USA. ❖ The satellite has a mission-life of 14 years. ❖ It is providing essential internet and communication services across India and even in remote regions. ❖ It will enhance broadband as well as in-flight connectivity throughout the Indian region. ❖ SpaceX and ISRO have signed another agreement to send an Indian astronaut to the International Space Station (ISS) for $60 million.

Current Affairs

'One Day One Genome'

உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆனது, இந்தியாவின் நுண்ணுயிர் திறனின் பயன் மயத்தினை வெளிப்படுத்துவதற்காக 'One Day One Genome ஒரு நாள் ஒரு மரபணு' என்ற முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு விரிவான விளக்க அறிக்கை, தகவல்களை உள்ளடக்கிய வரைகலைகள் மற்றும் மரபணுத் தரவுகளுடன் கூடிய, இந்தியாவில் இருந்து முழுமையாக விளக்கப்பட்ட பாக்டீரிய மரபணுவினைப் பொது வெளியில் வெளியிடுவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டு ள்ளது. ஓர் உயிரினத்தின் மரபணு என்பது நியூக்ளியோடைடு என்ற தளங்களால் ஆன டிஎன்ஏ  அல்லது ஆர்என்ஏவின் தனித்துவமான வரிசையைக் கொண்டுள்ளது.

Current Affairs

One Day One Genome

❖ The Department of Biotechnology (DBT) introduces the 'One Day One Genome' initiative to showcase the enormous microbial potential of India. ❖ It aims to publicly release a fully annotated bacterial genome from India, along with a detailed summary, infographics, and genome data. ❖ The genome of an organism consists of a unique sequence of DNA or RNA made up of nucleotide bases.

Current Affairs

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம்

ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக இருந்த தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 39.4 ஆகக் குறைந்துள்ளது. 1,000 பிறப்புகளுக்கு 8.2 ஆக இருந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது 7.7 ஆகக் குறைந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதமானது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 73 ஆக இருந்த நிலையில், இது 2021-22 ஆம் ஆண்டில் 90.5 ஆகவும்; மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 52 ஆகவும் இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 9.7 என்ற அளவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இருந்த நிலையில் இது 2021-22 ஆம் ஆண்டில் 10.4 ஆகவும்; மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 10.2 ஆகவும் இருந்தது.

Current Affairs

MMR in Tamil Nadu 2024

❖ Tamil Nadu’s Maternal Mortality Ratio (MMR) has been dropped to 39.4 from 45.5 per one lakh live births during 2023-24. ❖ The Infant Mortality Rate (IMR) has been reduced from 8.2 per 1,000 live births to 7.7. ❖ The State’s MMR was 73 per one lakh live births during 2020-21; 90.5 during 2021-22; and 52 during 2022-23. ❖ The IMR stood at 9.7 per 1,000 live births during 2020-21; 10.4 during 2021-22; and 10.2 during 2022-23.