Posts

Current Affairs

Global guidance to tackle antibiotic pollution from manufacturing

❖ WHO released its first ever global guidance on antibiotic pollution stemming from manufacturing processes. ❖ This document is titled as “Guidance on wastewater and solid waste management for manufacturing of antibiotics”. ❖ The comprehensive document offers a scientific framework for the regulators, industry players and other stakeholders to implement effective controls against antibiotic pollution.

Current Affairs

இந்தியாவினை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான தொலை நோக்குத் திட்டம்

இரண்டாவது சர்வதேசப் பசுமை ஹைட்ரஜன் மாநாடானது (ICGH-2024) டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் அதன் ஏற்றுமதிக்கான ஒரு உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற செய்வதற்கான ஒரு இலட்சிய மிகு இலக்கு ஆனது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் என்பது, இந்த இலட்சிய இலக்கினை நடைமுறையாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படிநிலையாகும். இந்தியாவின் புதைபடிவம் சாரா எரிபொருள் திறன் ஆனது கடந்த பத்தாண்டுகளில்    சுமார் 300% அதிகரித்துள்ளது.       அதே காலக்கட்டத்தில் சூரியசக்தி சார்ந்த ஆற்றல் உற்பத்தி திறன் ஆனது வியக்கத் தக்க வகையில் 3000% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

Current Affairs

Vision for India as Green Hydrogen Hub

❖ The second edition of the International Conference on Green Hydrogen (ICGH2024) was held in Delhi. ❖ During the event, an ambitious vision has unveiled to make India a global hub for green hydrogen production, utilization, and export. ❖ Earlier, the National Green Hydrogen Mission, launched in 2023, is a critical step toward realizing this ambition. ❖ India's non-fossil fuel capacity has increased nearly 300% over the last decade. ❖ The solar energy capacity has seen an astounding 3000% growth in the same period

Current Affairs

9வது லடாக் ஜன்ஸ்கார் திருவிழா 2024

9வது லடாக் ஜன்ஸ்கார் திருவிழாவானது 2024 லடாக்கின் ஜான்ஸ்கர் மாவட்டத்தில் கொண்டாடப் பட்டது. ஜான்ஸ்கார் பகுதி ஒரு தனி மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கொண்டாட்டம் இதுவாகும். மேற்கு இமயமலைப் பகுதியின் அறியப்பட்ட பௌத்த ராஜ்ஜியங்களில் ஜான்ஸ்கரும் ஒன்றாகும். கார்கிலில் இருந்து பர்கி பழங்குடியினர், திராஸ் பகுதியின் ஷினா சமூகம், ஆரியப் பள்ளத் தாக்கிலிருந்து டார்ட்-ஆரியர்கள் மற்றும் சாங்தாங் பகுதியிலிருந்து சாங்பா நாடோடிகள் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகள் இதன் ஒரு பகுதியாகும்.

Current Affairs

9th Ladakh Zanskar Festival 2024

❖ The 9th Ladakh Zanskar Festival 2024 was celebrated in the Zanskar district of Ladakh. ❖ This is the first celebration since Zanskar was officially declared a district. ❖ Zanskar is one of the known Buddhist kingdoms of the western Himalayas. ❖ Its highlights include the performances by the Purgi tribes from Kargil, the Shina community of Drass, the Dard-Aryans from Aryan Valley, and the Changpa nomads from Changthang.

Current Affairs

BHASKAR தளம்

தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT) விரைவில் பாரத் புத்தொழில் நிறுவனத் தகவல் அணுகல் பதிவகத்தினை (BHASKAR) வெளியிட உள்ளது. * இது இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழலை நன்கு மேம்படுத்தவும் ஆதரிக்கவும் வடிவமைக்கப் பட்ட ஒரு புதிய டிஜிட்டல் தளமாகும். * இது இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பின் திறனைத் வெளிக் கொண்டு வர உதவும் புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய கருத்துக்களை ஊக்குவிக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா உள்ளது என்பதோடு மேலும் 1,46,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களையும் இந்தியாவானது கொண்டுள்ளது.

Current Affairs

BHASKAR platform

❖ The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) is set to unveil Bharat Startup Knowledge Access Registry (BHASKAR) soon. ❖ It is a new digital platform designed to enhance and support India's start-up ecosystem. ❖ It will help unlock the potential of India’s startup ecosystem, fostering innovation, entrepreneurship, and job creation. ❖ India is the third-largest startup hub globally after the U.S. and China and it has over 1,46,000 recognized startups.

Current Affairs

சென்னையின் காற்று மாசுபாடு

ஸ்பேர் தி ஏர் 2.0' என்ற தலைப்பிலான அறிக்கை, காற்றின் தரத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுடன் ஒப்பிட்டுள்ளது. ஆண்டுச் சராசரியான PM 2.5 அளவு சென்னை உட்பட ஆறு நகரங்களில் ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமாக உள்ளது.சென்னையில், மாதாந்திரச்' சராசரிப் போக்கானது, PM2.5 அளவுகள் நான்கு முதல் ஏழு மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. PM10 அளவுகள் WHO அமைப்பின் ஆண்டு வழிகாட்டுதல்களை விட ஆறு மடங்கு மிக அதிகமாக உள்ளது. * PM10க்கான வருடாந்திரச் சராசரி NAAQS தரநிலை 60 ug/m3 ஆகும், அதே சமயம் WHO அமைப்பின் தரநிலை 15 pg/m3 ஆகும். * PM2.5 அளவின் WHO தரநிலையான 5 μg/m உடன் ஒப்பிடும்போது, NAAQS தரநிலை 40 ug/m3 ஆகும்.

Current Affairs

Chennai’s air pollution 2024

❖ The report titled ‘Spare the Air 2.0’ compared the air quality to World Health Organization (WHO) guidelines. ❖ The annual average level of PM2.5 is six to seven times higher in six cities, including Chennai. ❖ In Chennai, the monthly average trend indicated that PM2.5 levels are four to seven times higher. ❖ The PM10 levels are up to six times higher than WHO annual guidelines. ❖ The annual average NAAQS standard for PM10 is 60 μg/m³, while the WHO standard is 15 μg/m³. ❖ For PM2.5, the NAAQS standard is 40 μg/m³, compared to the WHO standard of 5 μg/m³.

Current Affairs

TIME இதழின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியல் 2024

TIME இதழின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி நிறுவனமாக HCL டெக் பட்டியலிடப்பட்டுள்ளது.  HCL டெக் நிறுவனம் 112வது இடத்திலும், இன்ஃபோசிஸ் 119வது இடத்திலும், விப்ரோ 134 இடத்திலும் உள்ளன. மஹிந்திரா குழுமம், ஆக்சிஸ் வங்கி, SBI, ICICI வங்கி, L&D, கோட்டக் மஹிந்திரா வங்கி, ITC லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர முன்னணி இந்திய நிறுவனங்களாகும். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து அயர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் இடம் பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட், BMW குழுமம், மற்றும் அமேசான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றுள்ளன.