Posts

Current Affairs

3rd National Lok Adalat of the year

❖ The National Legal Services Authority organised the 3rd National Lok Adalat of the year 2024 in the Taluks, Districts and High Courts of 27 States/UTs. ❖ Around 1,14,56,529 cases (One crore fourteen lakh fifty-six thousand five hundred twenty-nine) have been settled at the National Lok Adalat ❖ The approximate value of the total settlement amount in these cases was 8482.08 crores.

Current Affairs

8வது இந்திய நீர் வாரம் 2024

இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதோடு அது முதல் இத்தினம் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகிறது. இது 4 நாட்கள் அளவிலான மாநாடு மற்றும் கண்காட்சியாகும். இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Partnerships and Cooperation for Inclusive Water Development and Management" என்பதாகும்.  2012, 2013, 2015, 2016, 2017, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

Current Affairs

8th India Water Week 2024

❖ It was first organized in 2012 and has since been held biannually. ❖ It is a 4 days conference and exhibition. ❖ The theme for this year’s is “Partnerships and Cooperation for Inclusive Water Development and Management.” ❖ Seven editions of events have been organized in 2012, 2013, 2015, 2016, 2017, 2019 and 2022.

Current Affairs

அஷ்டலட்சுமி மஹோத்ஸவம்

மத்திய அரசானது, வடகிழக்கு இந்தியாவின் மிகவும் வளமான கலாச்சார மற்றும் பொருளாதாரப் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக, மிகவும் எதிர்பார்க்கப்படும் அஷ்டலட்சுமி மஹோத்ஸவிற்கான ஒரு அதிகாரப்பூர்வ வலைத் தளத்தை அறிமுகப் படுத்தி யுள்ளது. அஷ்டலட்சுமி மஹோத்சவம் ஆனது டிசம்பர் மாதத்தில் புது டெல்லியில் நடைபெற உள்ளது. * ஒன்றாக "அஷ்டலட்சுமி" என்று அழைக்கப்படுகின்ற எட்டு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள் இந்த திருவிழாவில் இடம் பெறும்.

Current Affairs

Ashtalakshmi Mahotsav

❖ To celebrate the rich cultural and economic heritage of Northeast India, the centre has launched the official website for the much-anticipated Ashtalakshmi Mahotsav. ❖ The Ashtalakshmi Mahotsav is to be held in December in New Delhi. ❖ The festival draws inspiration from the eight Northeastern states—Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Sikkim, and Tripura - collectively known as the "Ashtalakshmi".

Current Affairs

வந்தே மெட்ரோ இரயில் சேவை

புஜ் மற்றும் அகமதாபாத் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் 'வந்தே மெட்ரோ' இரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். *இந்த இரயிலுக்கு அதிகாரப்பூர்வமாக "நமோ பாரத் விரைவு இரயில்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது ஒன்பது நிலையங்களில் நிறுத்தங்களுடன் சுமார் 360 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும்.

Current Affairs

Vande Metro train service

❖ Prime Minister has flagged off India's first 'Vande Metro' service, which will run between Bhuj and Ahmedabad. ❖ The train has been officially renamed "Namo Bharat Rapid Rail". ❖ This will stop at nine stations and cover the 360-kilometre distance.

Current Affairs

உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீடு 2024

சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியமானது (ITU) வெளியிட்ட 2024 ஆம் ஆண்டு உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீட்டில் (GCI) இந்தியா முதல் அடுக்கு நிலைக்கு முன்னேறியுள்ளது. இந்த அறிக்கையானது 46 நாடுகளை மொத்தம் ஐந்து அடுக்குகளில் மிக உயரிய நிலையான முதல் அடுக்கு நிலையில் தரவரிசைப்படுத்தியுள்ளது. இது ஐந்து இணையப் பாதுகாப்பு அம்சங்களிலும் வலுவான உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் "முன்மாதிரியாக விளங்கும்" நாடுகளுக்காக என்று இந்த தரவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இணைய வெளிப் பாதுகாப்பின் அடிப்படையில் பெரும்பாலான நாடுகள் "நிலைப் படுத்திக் கொண்டு வரும் நிலை" (அடுக்கு 3) அல்லது "பரிணமித்து வரும் நிலையில்" (அடுக்கு 4) உள்ளன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) மற்றும் தனிநபர் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு மசோதா (2022) போன்ற வலுவான சட்ட நடவடிக்கைகள் உள்ளன.

Current Affairs

Global Cyber Security Index 2024

❖ India has jumped to Tier 1 in the Global Cybersecurity Index (GCI) 2024, released by the International Telecommunication Union (ITU). ❖ The report placed 46 countries in Tier 1, the highest of the five tiers. ❖ This is reserved for “role modelling" countries that demonstrate a strong commitment in all five cybersecurity pillars. ❖ Most countries are either “establishing" (Tier 3) or “evolving" (Tier 4) in terms of cybersecurity. ❖ India has strong legal measures in place, like the Information Technology Act (2000) and the Digital Personal Data Protection Bill (2022).

Current Affairs

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உற்பத்தி செயல்முறையினால் ஏற்படும் முக்கிய மாசுபாட்டைச் சமாளிப்பதற்கான உலகளாவிய வழிகாட்டுதல்

* உலக சுகாதார அமைப்பானது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் இருந்து உருவாகும் மாசுபாடு குறித்த தனது முதல் உலகளாவிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உற்பத்திக்கான கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மீதான மேலாண்மை குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் இந்த ஆவணம் வெளியிடப் பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அமைப்புகள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மாசுபாட்டிற்கு எதிரான கட்டுப்பாடுகளை மிகவும் திறம்படச் செயல்படுத்துவதற்கான ஓர் அறிவியல் பூர்வ கட்டமைப்பை இந்த விரிவான ஆவணம் வழங்குகிறது.