Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Posts

Current Affairs

பாகிஸ்தானின் முதலாவது நிலவு ஆய்வுக் கலம்

பாகிஸ்தானின் நிலவு ஆய்வுக் கலமான iCube-Q, சீனாவின் சாங்'கே 6 (Chang'e-6) சந்திர ஆய்வுக் கலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. iCube-Q சுற்றுக் கலம் ஆனது நிலவின் மேற்பரப்பினைப் படம் பிடிப்பதற்காக இரண்டு ஒளியிழை ஒளிப்படக் கருவிகளைச் சுமந்து செல்லும். இது சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தானின் தேசிய விண்வெளி முகமையுடன் இணைந்து பாகிஸ்தானின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தினால் (IST) வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சாங்'கே 6 கலம் ஆனது நிலவின் வெகு தொலைவில் உள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Current Affairs

வருடாந்திரக் காவிரி நீர் திறப்பு

நடப்பு நீர் அளவீட்டு ஆண்டு 2023-24 ஆனது இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில், இந்த ஆண்டில் மாநில அரசினால் திறக்கப்பட உள்ள ஒட்டுமொத்த நீரின் அளவானது 1974 ஆம் ஆண்டிலிருந்து 2016-17 ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட 69 ஆயிரம் மில்லியன் கன அடி என்ற மிகக் குறைந்த அளவிற்கு சிறிது அதிகமாக இருக்கும். ஏப்ரல் 30 ஆம் தேதியன்றான நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி முதல் மொத்த நீர் வரத்து சுமார் 78.8 ஆயிரம் மில்லியன் கன அடியாகும். இது 2003-04 ஆம் ஆண்டில் பதிவான 75.6 ஆயிரம் மில்லியன் கன அடியை விட சற்று அதிகமாக இருந்தது. அனைத்து சாத்தியக் கூறுகளிலும், நடப்பு நீர் அளவீட்டு ஆண்டு ஆனது, தமிழக மாநிலத்திற்கு 100 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மிகாமல் காவிரி நீர் வழங்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பத்தைக் குறிக்கும். 2000 ஆம் ஆண்டிலிருந்து, மேலும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கான வருடாந்திரப் பங்கு 100 ஆயிரம் மில்லியன் கன அடியை மிகவும் சிறு வித்தியாசத்தில் தாண்டியது. 2012-13 ஆம் ஆண்டில் 100.4 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும், 2002-03 ஆம் ஆண்டில் 109.9 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும் வழங்கப்பட்டது. காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான கர்நாடகாவின் வாதத்தின் படி, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 50 ஆண்டு காலம் 1974 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 75% உபரி நீரும், கர்நாடகாவுக்கு 23% நீரும் கிடைக்கப்பெறும். மீதமுள்ள நீர் கேரளாவுக்கு வழங்கப்படும்.

Current Affairs

Annual realization of Cauvery water

❖ With the current water year 2023-24 coming to an end this month, the overall realisation by the State in the year may end up next to the lowest figure of 69 tmc ft (thousand million cubic feet) during 2016-17 since 1974. ❖ As on April 30, the cumulative receipt since June 1, 2023 was about 78.8 tmc ft. ❖ This was marginally higher than around 75.6 tmc ft, which was recorded during 2003-04. ❖ The current water year will, in all probability, mark the third occasion of Tamil Nadu’s annual quota of the Cauvery water not exceeding the 100-tmc ft mark. ❖ Since 2000, there were two more years in which Tamil Nadu’s annual share crossed the 100-tmc ft by a small margin. ❖ In 2012-13, the State got 100.4 tmc ft and in 2002-03, the figure was 109.9 tmc ft. ❖ Karnataka’s argument on Cauvery water was that the 50-year time period for the 1924 agreement had ended in 1974 .❖ As per the agreement in 1924, Tamil Nadu and Puducherry would get 75% of the surplus water, while Karnataka would get 23%. ❖ The remaining would go to Kerala

Current Affairs

கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த சர்ச்சை

ஐக்கியப் பேரரசில் அமைந்துள்ள அஸ்ட்ராஜெனிகா எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனமானது, தனது கோவிட் தடுப்பூசியானது, 'மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்' இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று ஒப்புக் கொண்டதையடுத்து சர்ச்சை வெடித்தது. இந்தத் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" இரத்தத் தட்டையணுக்கள் குறைபாடுடன் கூடிய (த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்-TTS) இரத்தக் குழாயில் இரத்த உறைவை ஏற்படுத்தக் கூடும் என்று அதன் சட்டப்பூர்வ ஆவணம் குறிப்பிடுகிறது. இந்திய சீரம் நிறுவனத்தினால் (SII) தயாரிக்கப்பட்ட அதே தடுப்பூசியானது இந்தியாவில் கோவிஷீல்டு என்று அறியப்பட்டது. TTS என்பது இரத்தக் கட்டிகளுடன் (த்ரோம்போசிஸ்), இரத்த தட்டையணுக்கள் (த்ரோம் போசைட்டோபீனியா) குறைவாக காணப்படும் ஓர் அரிய பாதிப்பு நிலையாகும்.

Current Affairs

Covishield Controversy

❖ Controversy erupted when UK-based pharmaceutical giant AstraZeneca admitted that its Covid vaccine could cause blood clot-related side effects 'in very rare cases'. ❖ Its legal document mentioned that, this vaccine could cause Thrombosis with Thrombocytopenia Syndrome (TTS) in “very rare cases”. ❖ The very same vaccine was manufactured by the Serum Institute of India (SII) and was known in India as Covishield. ❖ TTS is a rare condition characterized by the formation of blood clots (thrombosis) accompanied by low platelet count (thrombocytopenia).

Current Affairs

Speech reconstruction technology

Researchers at IIT Guwahati developed the "LOQU", a novel method to generate human speech signals directly from vocal cord vibration signals. ❖ It can capture vocal fold movement without invasive procedures, utilizing sensors placed over the throat. ❖ During speech, vocal folds vibrate due to intrinsic laryngeal muscle movement. ❖ In some cases, like mutism from apraxia, individuals may have normal vocal fold vibration without sound production ❖ For the above issue, LOQU can be used for the reconstruction of speech signals from vocal cord vibrations.

Current Affairs

குரல் மீளுருவாக்கத் தொழில்நுட்பம்

கௌகாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குரல் நாண் அதிர்வு சமிக்ஞைகளிலிருந்து நேரடியாக மனித பேச்சு/குரல் சமிக்ஞைகளை உருவாக்குவதற்கான "LOQU" என்ற ஒரு புதிய முறையினை உருவாக்கி உள்ளனர். இந்த நுட்பத்தில் தொண்டையின் மேல் வைக்கப்பட்டுள்ள பல்வேறு உணர்விகளைப் பயன்படுத்தி, உட்செலுத்துதல் நடைமுறைகள் இல்லாமல் குரல்வளை மடிப்பு (நாண்) இயக்கத்தை ஆய்வு செய்ய முடியும்.  பேசும் போது, உள்ளார்ந்த குரல்வளை தசை இயக்கம் காரணமாக குரல் மடிப்புகள் அதிர்வுறும். உணர்வியக்கமின்மை (அப்ராக்ஸியா) பாதிப்பினால் ஏற்படும் பிறழ்வு போன்ற சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு ஒலி உற்பத்தி இல்லாமல் சாதாரண குரல் மடிப்பு அதிர்வு நிகழலாம்.  மேற்கண்ட குறைபாட்டிற்கு, குரல் நாண் அதிர்வுகளிலிருந்துப் பேச்சு சமிக்ஞைகளை மீளுருவாக்குவதற்கு LOQU என்பதினைப் பயன்படுத்த முடியும்.

Current Affairs

புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளின் தாக்கம்

புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வினை மேற் கொள்வதற்கு சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்திற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) அனுமதி அளித்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட ஆய்வானது, பல ஆண்டுகளாக புவிசார் குறியீடுகளால் கை வினைஞர்கள் / தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட பெரு நன்மைகள் குறித்து பகுப்பாய்வு செய்ய NABARD வங்கிக்கு உதவும். இன்றைய நிலவரப்படி, NABARD வங்கியின் ஆதரவினைப் பெற்ற 144 தயாரிப்புகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. NABARD வங்கியின் ஆதரவுடன் புவிசார் குறியீட்டினைப் பெற்ற முதல் தயாரிப்பு, தெலுங்கானாவைச் சேர்ந்த போச்சம்பள்ளி இகாட் (புடவை) ஆகும்.

Current Affairs

Impact of GI certified products

The NABARD has sanctioned a study on the impact evaluation of Geographical Indication (GI) products to Symbiosis School of Economics.  ❖ This particular study will enable NABARD to analyse the benefits accrued to artisans/producers because of the GI tags over the years. ❖ As of today, 144 products supported by NABARD, are GI tagged. ❖ The first product that received a GI tag with support from NABARD, was Pochampally Ikat from Telangana.

Current Affairs

2030 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் புதிய உலகளாவிய மலேரியா உத்தி

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மலேரியா திட்டமானது, மலேரியா பாதிப்பு போக்குகளின் பாதையை மாற்ற உதவும் வகையில் 2030 ஆம் ஆண்டு வரை அதன் முன்னுரிமைகள் மற்றும் முக்கியச் செயல்பாடுகளை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு புதிய செயல்பாட்டு உத்தியை வெளியிட்டுள்ளது. இந்த உத்தியானது உலக சுகாதார அமைப்பு அதன் முயற்சிகளில் கவனம் செலுத்த உள்ள 4 உத்திசார் நோக்கங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குதல்,Ο புதிய கருவிகள் மற்றும் புதுமைகளை அறிமுகப்படுத்துதல்,தாக்கத்திற்கான உத்திசார் தகவலை ஊக்குவித்தல், மற்றும்உலகளாவிய மலேரியா எதிர் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தலைமையை வழங்குதல். 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 608,000 மலேரியா காரணமான உயிரிழப்புகளும், 249 மில்லியன் புதிய மலேரியா பாதிப்புகளும் பதிவானதாக மதிப்பிடப் பட்டுள்ளது.  உலகளவில் 95% மலேரியா காரணமான உயிரிழப்புகளுடனும் 94% பாதிப்புகளுடனும் ஆப்பிரிக்கா அதிக விகிதாசாரப் பாதிப்பினைக் கொண்டுள்ளது.