Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Posts

Current Affairs

ஹேக் உடன்படிக்கையின் 70வது ஆண்டு நிறைவு

ஆயுத மோதலில் பண்பாடு சார்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஹேக்உடன்படிக்கையின் 70வது ஆண்டு நிறைவை யுனெஸ்கோ அமைப்பு நினைவு கூருகிறது. இது 1954 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. இது 1999 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியன்று கையொப்பத்திற்காக முன் வைக்கப் பட்ட அதன் இரண்டாவது நெறிமுறையின் 25 வது ஆண்டு நிறைவு விழாவாகும். அமைதிக் காலங்களிலும், ஆயுத மோதலின் போதும் கலாச்சாரம் சார்ந்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட முதல் மற்றும் மிக விரிவான பலதரப்பு ஒப்பந்தம் இதுவாகும். இதைத் தொடர்ந்து, முன்னதாக சர்வதேச ப்ளூ ஷீல்டு குழு என அறியப்பட்ட ப்ளூ ஷீல்டு (நீலக் கேடயம்) அமைப்பு 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ப்ளூ ஷீல்டு வலையமைப்பு ஆனது, கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளின் பாதுகாப்பில் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இணையானதாகக் குறிப்பிடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கையில் இந்தியாவும் அங்கம் பெற்றுள்ளது.

Current Affairs

High-Yielding Wheat Variety - HD 3386

The Indian Agricultural Research Institute has introduced a new high yielding variety of wheat seed variety. ❖ The new seed variant – HD 3386 was recently approved by the central seed committee. ❖ It is resistant to yellow, and leaf rust diseases mostly reported in the key wheat growing region of northwest region – Punjab, Haryana, Uttar Pradesh and Rajasthan. ❖ It is aimed at replacing the currently used seed HD2967 also developed by IARI in 2010. ❖ In terms of yield, the existing variety has productivity of around 22 quintal/acre while the new variant has productivity of 25 quintal/acre.

Current Affairs

அதிக மகசூல் தரும் கோதுமை வகை - HD 3386

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது அதிக மகசூல் தரும் புதிய கோதுமை விதை ரகத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. HD 3386 எனப்படும் புதிய விதை ரகம் ஆனது, சமீபத்தில் மத்திய விதைக் குழுவினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வடமேற்குப் பகுதியின் முக்கிய கோதுமைப் பகுதியில் பெரும்பாலும் பதிவாகியுள்ள இது மஞ்சள் மற்றும் இலைத் துரு நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.இது 2010 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தற்போது பயன்படுத்தப்படும் HD2967 விதைக்கு மாற்றாக இதனை அறிமுகப் படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மகசூலைப் பொறுத்தவரை தற்போதுள்ள ரகம் ஏக்கருக்கு 22 குவிண்டால் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் இந்தப் புதிய ராகமானது ஏக்கருக்கு 25 குவிண்டால் உற்பத்தித் திறன் கொண்டது.

Current Affairs

இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை மற்றும் டெங்கு பாதிப்பின் தீவிரம்

இந்தியப் பெருங்கடலில் கடல்-மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளுக்கும் உலகளவில் பதிவாகச் செய்யும்ம் டெங்கு தொற்றுநோய்களின் தீவிரத்திற்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை பரந்த தூரங்களுக்கு இடமாற்றும் தொலைத் தொடர்புகள், பெரிய அளவிலான வளிமண்டல வடிவமைப்புகள் ஆகியவற்றினால் பிராந்திய வெப்பநிலையில் ஏற்படும் தாக்கம் காரணமாக இந்தத் தொடர்பு சாத்தியம் ஆகிறது. டெங்கு என்பது பாதிக்கப்பட்ட ஏடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். 1970 ஆம் ஆண்டிற்கு முன், ஒன்பது நாடுகளில் மட்டுமே மிகவும் கடுமையான டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்தன. ஆனால் தற்போது இது உலக மக்கள்தொகையில் சுமார் பாதிப் பேரைப் பாதிக்கிறது என்ற நிலையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100-400 மில்லியன் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Current Affairs

Indian Ocean temperature and Dengue Intensity

❖ Researchers have found a potential link between anomalies in sea-surface temperatures in Indian Ocean and the intensity of dengue epidemics globally. ❖ The link is likely due to its influence on regional temperatures through teleconnections, large-scale atmospheric patterns that can transfer heat and moisture across vast distances. ❖ Dengue is a viral infection transmitted through the bite of infected Aedes species mosquitoes.  ❖ Before 1970, severe dengue outbreaks were only reported in nine countries. ❖ But now it affects nearly half of the world’s population, with an estimated 100– 400 million infections occurring each year.

Current Affairs

OpenAl நிறுவனத்தின் Sora

OpenAl  நிறுவனமானது, அதன் Sora எனப்படும் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாதியினை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இது விரவல் நிலைமாற்றி (DiT) மூலம் இயக்கப் படுகிறது. இது எதிர்காலத்தில் திரைப்படத் தயாரிப்பு முறையினை மாற்றியமைக்கக் கூடிய ஒளிப்படக் காட்சியை உருவாக்கும் திறன்களைக் கொண்டுள்ளது. DiT என குறிப்பிடப்படும் விரவல் நிலைமாற்றி என்பது நிலைமாற்றிக் கட்டமைப்பின் அடிப்படையிலான விரவல் மாதிரிகளின் வகுப்பாகும். DiT ஆனது Sora மாதிரிக்கு, உரை உள்ளீடுகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றைச் சிறிய பகுதிகளாகப் பிரித்து, சிறிது சீரற்றத் தன்மையைச் சேர்ப்பதன் மூலமும், பின்னர் உரையின் அடிப்படையில் உள்ளீடுகளைச் சரி செய்வதன் மூலமும் முறையான ஒளிப் படக் காட்சிகளை உருவாக்க உதவுகிறது.

Current Affairs

OpenAI’s Sora

❖ OpenAI has released its latest AI model, Sora which is powered by Diffusion transformer (DiT). ❖ It has capabilities of video generation that could potentially replace filmmaking in the future. ❖ Diffusion transformer also written as DiT is essentially a class of diffusion models that are based on the transformer architecture. ❖ DiT helps Sora understand text prompts and make cool videos by breaking them down into smaller parts, adding a bit of randomness, and then cleaning things up based on the text.

Current Affairs

Number of deceased donors

❖ In just four months, Tamil Nadu has reached a record high in the number of organ donations this year. ❖ In 130 days (as of May 9, 2024), the number of deceased donor organ donations has crossed 100 in the State. ❖ There were 102 deceased donors so far this year. ❖ There were 178 donors in 2023 and 156 donors in 2022. ❖ A total of 324 major organs and 271 tissues were retrieved from these donors. ❖ Two hand transplants were also performed this year. ❖ 2023 saw 1,000 organs being retrieved from 178 donors.

Current Affairs

உயிரிழந்த உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை

நான்கு மாதங்களில், இந்த ஆண்டு தமிழகத்தில் சாதனை அளவிலான உடல் உறுப்பு தான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 130 நாட்களில் (2024 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியன்று நிலவரப்படி), மாநிலத்தில் உயிரிழந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 100 என்ற அளவைத் தாண்டி உள்ளது. இந்த ஆண்டு இது வரை 102 உயிரிழந்த நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 178 பேரும் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 156 பேரும் உறுப்பு தானம் செய்தனர்.இவர்களிடமிருந்து மொத்தம் 324 முக்கிய உறுப்புகளும் மற்றும் 271 திசுக்களும் பெறப் பட்டன. இந்த ஆண்டும் இரண்டு கை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன. 2023 ஆம் ஆண்டில் 178 உறுப்பு தானம் செய்பவர்களிடமிருந்து 1,000 உறுப்புகள் பெறப் பட்டன.

Current Affairs

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல இயந்திரம்

முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டத் திரவ ஏவுகல இயந்திரத்தின் செயல்பாட்டு நிலைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற் கொண்டது. PSLV ஏவுகலத்தின் கடை நிலையின் PS4 இயந்திரம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. PSLV ஏவுகலத்தின் முதல் நிலையின் (PS1) எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பிலும் (RCS) இதே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. நைட்ரஜன் டெட்ராக்ஸைடினை ஆக்சிஜனேற்றியாகவும், மோனோ மெத்தில் ஹைட்ரேசினை எரிபொருளாகவும் பூமியில் சேமிக்கக் கூடிய இரட்டை உந்துவிப்பு எரிபொருள் கலவைகளை இந்த இயந்திரம் பயன்படுத்துகிறது.