Posts

Current Affairs

2024 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் வேலைவாய்ப்பின்மை

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது, 2024 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஐந்து சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது இந்த ஆண்டு 5.2% ஆக உயரும் என்று முதலில் கணித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 4.9% ஆக இருக்கும் என்று ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகமை கணித்துள்ளது. 183 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பில்லாதவர்கள் என்ற வரையறையினுள் இடம் பெறுகின்றனர் என்ற நிலையில் வேலை செய்ய விரும்புகின்ற ஆனால் வேலை வாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 402 மில்லியனாக உள்ளது. 15.3 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், வேலை செய்ய விரும்புகின்ற, வேலை வாய்ப்பில்லாதவர்களில் 22.8 சதவீதத்துடன் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள பெண்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக வருமானம் கொண்ட நாடுகளில், பெண்கள் மத்தியில் இந்த விகிதம் 9.7% ஆகவும், ஆண்கள் மத்தியில் 7.3% ஆகவும் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் 45.6% பணிக்குச் செல்லும் வயது பெண்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். ஆண்கள் மத்தியில், இந்த எண்ணிக்கை 69.2% ஆக இருந்தது.

Current Affairs

உத்பவ் திட்டம்

இந்திய ராணுவமானது உத்பவ் திட்டத்தின் மூலம் அதன் வளமான பாரம்பரியத்துடன் மீண்டும் இணைந்துள்ளது. பண்டைய உத்திசார் தகவல்களுடன் நாட்டின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது. உத்பவ் திட்டம் ஆனது இந்தியாவின் பண்டைய உத்திசார் மதி நுட்பங்களை நவீன இராணுவ நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.

Current Affairs

மாநில அரசுப் பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்பு

 மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 17,221 பள்ளிகளுக்கு ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இணைய சேவை வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 6,223 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 5,913 இணைய சேவை இணைப்பினைப் பெற்றுள்ளன. 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.  தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 24,338 பள்ளிகளில் சுமார் 10,620 பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Current Affairs

World Unemployment in 2024

❖ The International Labour Organization (ILO) expects a global unemployment rate of 4.9% in 2024. ❖ It is originally forecasting unemployment would rise to 5.2% this year from five percent in 2023. ❖ The Geneva-based UN agency forecasts that the rate will stay at 4.9% in 2025. ❖ 183 million people meet the definition of unemployed but the number of people without a job who wanted to work stood at 402 million. ❖ Women in low-income countries were especially hard-hit, with 22.8% who wanted a job not in work, compared with 15.3 percent for men. ❖ For high-income countries, the rate stood at 9.7% for women and 7.3% for men. ❖ 45.6% of women of working age were employed in 2024. ❖ For men, the figure was 69.2%.

Current Affairs

Project Udbhav

❖ Indian army is reconnecting with its rich heritage through Project Udbhav. ❖ It aims to enhance the country’s defence outlook with ancient strategic insights. ❖ It was launched last year in collaboration with the United Service Institution of India. ❖ Project Udbhav integrates India’s ancient strategic wisdom into modern military practices.

Current Affairs

Internet connection for State-run schools

❖ Internet connections have been provided to 20,332 out of a total of 37,553 State run schools, and the remaining 17,221 schools would be covered by the second week of June. ❖ Of the 6,223 government higher secondary and high schools across the State, 5,913 had got internet connections.  ❖ Of the 6,992 middle schools, 3,799 had been provided the facility. ❖ As for the primary schools, 10,620 out of a total of 24,338 schools had been given internet connections

Current Affairs

மதிப்பு பணவீக்கக் குறியீடு 2023/24

2024-25 ஆம் நிதியாண்டிற்கான மதிப்பு பணவீக்கக் குறியீடு (CII) ஆனது 363 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது 348 ஆகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் 331 ஆகவும் இருந்தது. இது 4.3 சதவீத உயர்வைக் காட்டுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. CII என்பது பணவீக்கத்தினை அதாவது, பல ஆண்டுகளாக ஒரு பொருள் அல்லது சேவையின் விலையில் பதிவான மதிப்பிடப்பட்ட அதிகரிப்பினை கணக்கிடச் செய்வதற்கான ஒரு வழிமுறையாகும். பணவீக்கத்தின் விளைவை நன்கு பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை ஈடு செய்ய இந்தக் குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. அதிக கொள்முதல் விலை என்பது குறைந்த இலாபம், அதாவது குறைந்த வரியாகும்.

Current Affairs

நிலச்சரிவு - பப்புவா நியூ கினியா

சமீபத்தில் பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் மாபெரும் நிலச்சரிவானது ஏற்பட்டது. எங்கா மாகாணத்தின் ஒரு தொலைதூரப் பகுதியில் இந்தப் பேரழிவு நிகழ்ந்தது. இந்தப் பேரழிவு காரணமாக சுமார் ஆறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவியீர்ப்பு விசையின் இழுப்பு ஒரு மலை அல்லது குன்றின் சரிவை உருவாக்கும் புவி கட்டமைப்பு மூலப்பொருளின் வலிமையை மீறும் போது நிலச்சரிவுகள் ஏற்படச் செய்கின்றன. * புவிக் கட்டமைப்புப் பொருட்கள் என்பவை பாறைகள், மணல், வண்டல் மற்றும் களிமண் போன்ற பல்வேறு வகைகளாக இருக்கலாம். * பெரும்பாலான இயற்கை நிலச்சரிவுகள் ஆனது நிலநடுக்கங்கள் அல்லது மழைப் பொழிவு அல்லது இரண்டும் இணைந்து ஏற்படுவதால் தூண்டப்படுகின்றன. பப்புவா மற்றும் நியூ கினியா புவியின் மிகவும் ஈரமான இடங்களில் ஒன்றாகும்.

Current Affairs

புதுமைப் பெண் திட்டங்களின் தாக்கம்

புதுமைப் பெண்கள் திட்டத்தினால் உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை சதவீதம் 34% அதிகரித்துள்ளது. மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் சுமார் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

Current Affairs

Cost Inflation Index 2023/24

❖ Cost Inflation Index (CII) for Financial Year 2024-25 has been fixed at 363. ❖ The CII number for last fiscal was 348 and for 2022-23 financial year it was 331. ❖ It shows a rise of 4.3 per cent. ❖ The Central Board of Direct Taxes (CBDT) has notified the index. ❖ CII is a way to calculate inflation, that is, an estimated increase in the price of a good or service over the years. ❖ Indexation is used to adjust the purchase price of an investment to reflect the effect of inflation on it. ❖ A higher purchase price means lesser profits, which effectively means a lower tax