புகையிலை பயன்பாடு இல்லாத கல்வி நிறுவனங்கள்
கல்வி அமைச்சகம் ஆனது, புது டெல்லியில் புகையிலை பயன்பாடு இல்லாத கல்வி நிறுவனங்களின் (ToFEI) அமலாக்கக் கையேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ToFEl வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் பள்ளிகளுக்கு உதவுதல், மிகவும் நன்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் மற்றும் புகையிலை சார்ந்த ஆபத்துக்களில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க பங்குதாரர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த கையேடு நோக்கமாகக் கொண்டுள்ளது. புகையிலை பயன்பாட்டைத் தடுக்கவும், புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகும் நிலையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும் அனைத்து கல்வி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களைப் புகையிலை இல்லாத ஒரு மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.