Posts

Current Affairs

Claims of 100 percent fruit juice

❖ The food safety regulatory body Food Safety and Standards Association of India (FSSAI) have directed the companies not to claim 100 per cent Fruit Juice on canned products. ❖ All these juices contain the highest amount of water. ❖ Adding a small amount of fruit juice or pulp does not make it 100 per cent juice. ❖ If these fruit juices contain more than 15 grams of sugar per kg, then they will have to label their product as sweet juice.

Current Affairs

Indigenous air quality monitoring system

❖ The Ministry of Electronics and Information Technology (MeitY) has inaugurated indigenous air quality monitoring system AQ-AIMS and launched Air-Pravah app in New Delhi. ❖ The 'Air-Pravah' mobile application provides real-time Air Quality Index (AQI) monitoring.  ❖ The cost-effective solution developed under the ‘Make in India’ initiative.

Current Affairs

அதி இலாப விருப்பப் பணவீக்கம் குறித்த கோட்பாடு

சான் பிரான்சிஸ்கோவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய ஆராய்ச்சியானது, நிறுவனங்களின் அதிக இலாபம் ஈட்டும் மனப்பான்மையினால் ஏற்படும் பணவீக்கம் குறித்த கோட்பாடு பற்றிய புதிய கண்ணோட்டத்தினை எழுப்பியுள்ளது. தொழில்முனைவோருக்கு தொழில் தொடங்க ஊக்கமளிக்கின்றது என்பதால், சில சமத்துவமின்மை நிலை உண்மையில் பயனளிக்கின்றது. நிறுவனங்களின் அதிக இலாபம் ஈட்டும் மனப்பான்மையினால் ஏற்படும் பணவீக்கம் என்பது உற்பத்திச் செலவினம், தேவை அல்லது கூலி ஆகியவற்றின் அதிகரிப்பைக் காட்டிலும் இலாபம் ஈட்ட பெருநிறுவனங்கள் எண்ணுவதால் ஏற்படுகின்ற ஒரு பொருளாதாரத்தின் பணவீக்க நிலையைக் குறிக்கிறது. பணவீக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தில் சரக்குகள் மற்றும் சேவைகளின் பொது விலை அளவு உயரும் வீதமாகும். பெருநிறுவனங்கள் அவற்றின் உண்மையான உள்ளீட்டு செலவு அதிகரிப்பை விடவும் அதிகமாகப் பொருட்களின் விலைகளை உயர்த்தி தற்போதுள்ள பணவீக்கத்தைப் பயன்படுத்தி இலாபம் ஈட்ட முயல்வது அதி இலாப விருப்பம் ஆகும்.

Current Affairs

மக்களவைத் தேர்தலில் உலக சாதனை

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்களுடன் இந்தியா உலக சாதனைப் படைத்துள்ளது. அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா என அனைத்து G7 நாடுகளின் வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட இது 1.5 மடங்கு அதிகமாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட 2.5 மடங்கு அதிகமாகும். இந்த உலகின் மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையில் 68,000 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர். 2019 ஆம் ஆண்டில் 3,500 கோடி ரூபாயாக இருந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரொக்கப் பணம், இலவசங்கள், போதைப்பொருள், மதுபானம் உட்பட 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Current Affairs

மக்களவைத் தேர்தல் 2024 - தமிழ்நாடு

மாநிலத்தில் மொத்தமுள்ள 6,18,90,348 வாக்காளர்களின் மொத்த வாக்குப்பதிவு 69.72% ஆகும். 39 தொகுதிகளிலும் தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மத்திய சென்னையில் குறைவாக 53.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெண் வாக்காளர்களின் வாக்குப் பதிவானது 69.85% ஆகவும், ஆண் வாக்காளர்களின் வாக்குப் பதிவு 69.58% ஆகவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் தி.மு.க. கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றியினைப் பெற்றன. திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அதிகபட்சமாக 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 4379 என்ற மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Current Affairs

Greedflation theory

❖ New research from the Federal Reserve Bank of San Francisco raised a new view on the greedflation theory. ❖ Some inequality is actually beneficial, since it acts as an incentive to entrepreneurs to start businesses. ❖ Greedflation is a scenario where inflation in an economy is driven by corporate greed to make a profit rather than an increase in the cost of production, demand, or wages. ❖ Inflation is the rate at which the general price level of goods and services rises in an economy. ❖ Greedflation occurs when corporations exploit existing inflation by raising prices far beyond their actual input cost increases

Current Affairs

World Record in Lok Sabha Poll

❖ India created a world record with 64.2 crore voters, including 31.2 crore women, participating in the Lok Sabha elections this year. ❖ This is 1.5 times of the voters of all G7 countries - US, UK, France, Germany, Italy, Japan, Canada... all put together. ❖ It is 2.5 times of the voters of 27 counties in the EU. ❖ Over 68,000 monitoring teams and 1.5 crore polling and security personnel were involved in the world's largest electoral exercise.

Current Affairs

Lok Sabha election 2024 – Tamilnadu

❖ The total voter turnout from the total 6,18,90,348 electors in the State was 69.72%.  ❖ Across all 39 constituencies, Dharmapuri registered the highest turnout of 81.48 per cent turnout. ❖ Chennai Central registered the lowest voter turnout of 53.91 per cent. ❖ While women voters’ turnout stood at 69.85%, the men voter turnout was recorded at 69.58%. ❖ DMK and its allies won a spectacular victory in all of Tamil Nadu’s 39 segments and in the lone Puducherry seat. ❖ Congress candidate and former IAS officer Sasikanth Senthil won with a highest margin of 5,72,155 votes in Tiruvallur. ❖ Virudhunagar Lok Sabha constituency’s Manickam Tagore of the Congress won with lowest margin of 4379.

Current Affairs

தைவான் தடகள ஓபன் போட்டி 2024

மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை நயனா ஜேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான 800 மீ ஓட்டத்தில் இந்தியாவின் அங்கேஷ் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில், தேவ் மீனா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் D.P. மனு 81.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா ராம்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதே சமயம், மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் V.K. விஸ்மயா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்திய அணியானது மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட ஏழு பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்துள்ளது.

Current Affairs

சங்க்'கே-6 தரையிறங்கு கலம்

சீன நாடானது நிலவின் தொலைதூரத்தில் ஆளில்லா விண்கலத்தினைத் தரையிறக்கி உள்ளது. சங்க்'கே-6 விண்கலம் ஆனது தென் துருவத்தில் உள்ள அயிட்கென் படுகை எனப்படும் ஒரு பெரிய பள்ளத்தில் தரையிறங்கியது. * இந்தத் தரையிறங்கு கலம் ஆனது 2 கிலோ (4.4 பவுண்டுகள்) எடை அளவிலான நிலவுப் பொருளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். 2020 ஆம் ஆண்டில் சீனா சங்க்'கே-5 எனப்படும் தனது முதல் நிலவு மாதிரி சேகரித்து பூமிக்குத் திரும்பும் ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவி நிலவின் அருகாமை பக்கத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்தது.